எண்ணங்களின் தொடர்சியும், வாழ்கையின் நகர்வும்

என்னுடன் பணிபுரியும் நண்பர் அவர் இல்லத்திற்கு விருந்திற்காக அழைத்திருந்தார்.  அது அவரின் தந்தையும் அவர்களோடு வந்து தங்கியிருந்த சமயம். அவரின் பேச்சு மிகுந்த நிதானமும், அமைதியும் நிறைந்ததாக இருந்தது. அவர் ஒன்றும் ஆன்மீகவாதி இல்லை எனினும் அவருடனான உரையாடல் ஒரு பெரும் அமைதியை அளித்தது. ஒரு ஆன்மீக குருவின் அருகாமையை போல உணர்ந்தேன். அன்று அவர் எனக்கு லூசி கார்னெல்சென் அவர்களின்  Hunting the I  என்ற புத்தகத்தை பரிசளித்தார். (Ref: சச்சிதானந்தம்)

அப்புத்தகத்தை அவ்வாரமே படித்து முடித்தேன்.  பொதுவாக ஆன்மீக புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்து எனக்கு பழக்கமில்லை. ஆயினும் ஒரு வேகத்தில் புத்தகத்தை படித்து முடித்தேன். சில வாரங்களில் வேதா கோவிலில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த ரமண ஸ்வரூபானந்தரின் உரை நிகழ்ச்சி நடந்தது. நானும், என் மாமனாரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டோம். ‘சும்மா இரு’, ‘வந்த வேலையை கவனி’ என்ற பதங்கள் என் மனதில் பதிந்தது. அதன் தொடர்ச்சியாக சியாட்டில் ரமண மகரிஷி சத்சங்க நிகழ்வுகளில் சிலவாரங்கள் கலந்து கொண்டேன்.

அச்சமயம் இன்னொரு நண்பரின் வீட்டிற்கு இரவு உணவிற்கு சென்றபோது அவர் வீட்டின் வரவேற்பறையில் மிகப்பெரிய ரமண மகரிஷி படம் இருந்தது. அவர் என்னைப் பார்த்து புன்னகைப்பது போல இருந்தது. அவர் ரமணரின் தீவிர பக்தர், அவர் மூலம் ரமணரின் பெருமைகளை அறிந்தேன்.

சில மாதங்களில் வேதா கோவில் மகான்களும் வாழ்வும் வாக்கும் என்ற நிகழ்வு ஏற்பாடு ஆனது. அதில் ஜே கிருஷ்ணமூர்த்தி பற்றி பேச எனக்கு விருப்பம் இருந்தது. ஏனோ குழு என்னை ரமணர் பக்கம் நகர்த்தியது.  அதன் பின் பல நாட்கள் தினமும் ரமணரைப்பற்றி பல்வேறு காணொளிகளை கேட்டேன். கிரேசி மோகன், நொச்சூர் வெங்கட்ராமன், சுகி சிவம், இளையராஜா ரமணகீதம், ஆங்கில டாக்குமென்ட்ரி வகை என பல உரைகளை கேட்டேன். சமீப காலமாக The Ranveer Show  கானொளிகளை அதிகமாக கேட்கிறேன். அதுல் ஒரு முறை ஸ்ரீ. எம் என்பவரின் பேட்டி இருந்தது. அதிலும் அவர் ரமணரைப் பற்றி பேசினார்.

ஆர்தர் ஆஸ்பர்ன் எழுதி, தமிழின் பிரபல எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஸ்ரீரமணரும் ஆன்மீகப் பாதையும்’ என்ற 380 பக்க புத்தகத்தை முழுவதும் ஊன்றிப் படித்தேன். ராமணரின் வாழ்க்கை முழுவதும் சொன்ன புத்தகம். Who am I? என்ற புத்தகத்தை சில முறை படித்தேன். பல வாரங்களாக நான் ரமணரோடே வாழ்வதாக உணர்ந்தேன். ரமணரின் பக்தை ஒருவருடன் சில மணிநேரம் அவர்களின் அனுபவம் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்து.  ஆனால் என் தர்க மனம் ரமணரை முழுமையாய் ஏற்க்கவில்லை.  உணர்வுகளாலும் கேள்விகளாலும் மாறிமாறி அலைக்கழித்தது.

books

வேதா கோவில் உரைக்கான நேரம் வந்தது. என் அகந்தையை நொருக்கும் விதமாய் அந்நிகழ்ச்சிக்கு எண்ணி மூன்றே பேர் வந்திருந்தனர்.  ஆனாலும் முழு ஈடுபாடுடன் அந்த உரை நிகழ்ச்சி நடந்தது.  மகா பெரியவரின் வாழ்வின் நிகழ்வுகளை பரத் ராம் சொல்ல சொல்ல மகானின் வாழ்வின் உன்னதங்கள் உணர்ந்தேன். அதனுடே என் மனத்துக்குள் நான் படித்த ரமணரின் பல்வேறு நிகழ்வுகள் கண்முன் வந்து சென்றது.

என்னுடைய அலை பாயும் மனமோ என்னவோ என் உரை எனக்கு முழு நிறைவை அளிக்கவில்லை. திருச்சுழியை திருச்சூர் என்றும், ஸ்கந்தாசிரமத்தை கந்தாஸ்ரமம் என்றும், மொழி பரிச்சயத்தை மொழி அறிவு என்றும் நிறைய தவறுகளோடு அமைந்தது என் உரை. ராமணருடன் இத்தனை வாரங்கள் பயணித்து உள்ளத்தில் நினைத்தும் அந்த உரை நிறைவாக அமையாதது வருத்தம் தந்தது.

இன்னொரு நண்பர் Wisdom Of The Rishis என்ற ஸ்ரீ.எம் அவர்களின் புத்தகத்தை வழங்கினார்.  அப்புத்தகம் உடனே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ஈஷா உபநிடதத்தை விளக்கும் அப்புத்தகம் ஸ்ரீ ரமணனின் வாழ்வை, உபதேசங்களை கோடிட்டு விளக்கியது. இப்படியாக ரமணர் மீன்றும் தொடருகிறார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் ரமணாஸ்ரமம் செல்லும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.  இப்படியாக ஒன்றன் தொடர்ச்சியாக ஒன்று அமைந்து ரமணரின் சிந்தனை என்னை ஆக்கிரமித்துள்ளது. வாழ்கை என்னும் ஓடம், என்னை எங்கே இட்டுச் செல்கிறது என தெரியவில்லை.  வாழ்வே தவம்!

Ref: விசார சங்கிரகம், வாக்மௌனம், மனோமௌனம், காஷ்டமௌனம்

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

கம்பராமாயணம் பக்தி இலக்கியம் மட்டுமல்ல மிகுந்த கவிநயம் மிகுந்தது என்பது நாம் யாவரும் அறிவோம்.  மிகக் கடினமான விஷயங்களை கம்ப சூத்திரம் (like rocket science) என்று சொல்லுவதுண்டு.  அந்த அளவிற்கு கம்பர் தன்னுடைய பாடல்களில் தன் திறம் காட்டியுள்ளார். அவ்வகையில் சோம வள்ளியப்பன் அவர்கள் கம்பராமாயணத்தில் உள்ள மேலாண்மை தத்துவங்களை பட்டியலிட்டுள்ளார்.

Formal vs Informal leader: சில தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள், சிலர் உருவாகிறார்கள்.  ராமன் தானாக உருவான தலைவன், தனக்கு அரச பதவி இல்லாத போதும், சுக்கிரீவன், விபீடனன் எனப் புதியவர்களை இணைத்து தனக்கான படையை தானே உருவாக்கியவன் (Informal leader).

Leadership Style: Authoritarian (autocratic), Participative (democratic). Delegative (laissez-faire): ராமன் எல்லோரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கும் (participative) தலைமைப்பண்பைக் கொண்டவன். விபீடனனை தங்களோடு இணைத்துகொள்வதா? வேண்டாமா? என்றகட்டத்தில் சுக்ரீவன், சாம்பன், நீலன், அனுமனின் கருத்துக்களைக் கேட்டபின்பே முடிவெடுக்கிறான் ராமன்.  எல்லோருடைய கருத்தையும் கேட்டு, பின் ஒரு முடிவெடுத்து தன் முடிவுக்கான காரணத்தையும் விளக்கி அதை அனைவரும் ஏற்கும்வண்ணம் செய்கிறான்.

Team Player: இந்நிகழ்வில் இன்னொரு செய்தி, விபீடனனை சேர்த்துக்கொள்ள அனுமன் பல காரணங்களை சொல்கிறான், (1) விபீடனன் இலங்கை அரசவையில் தர்மத்தின் பக்கம் நின்றவன், (2) விபீடனன் மனைவி (திரிசடை) சீதைக்கு உதவுகிறாள், (3) இராமன் அசுரர்களை அழித்தான் என்பது அறிந்தே வந்திருக்கிறான்.  இப்படி வலுவான காரணங்கள் இருப்பினும் அனுமன் ராமன் கேட்கும் வரை இவற்றை சொல்லவில்லை, தனக்கு முன் பலர் விபீடனனை சேர்க்கவேண்டாம் என்று சொல்லிவரும் வேளையிலும் அனுமன் நிதானமாக இருக்கிறான். இந்த நிதானம் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுத்து கேட்பது ஒரு நல்ல குழு உறுப்பினருக்கு அடிப்படை.

Story telling: இதில் இன்னொரு செய்தியும், ராமன் விபீடனை தங்களோடு இணைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்கிறான், அதற்காக அவன் காரணங்களை பட்டியலிடுகிறான். கஜேந்திர மோஷம், மார்கண்டேயன், சிபியின் கருனை, சிவன் விஷம் அருந்துவது என பல கதைகளை பட்டியலிட்டு ஆபத்து என்று வருபவர்களுக்கு அபயம் தருவது கடமை என்கிறான். இவ்வகையில் தலைமைக்கு உரிய கதைகளின் மூலம் மேற்கோள் காட்டும் பண்பை இயம்புகின்றான்.

Strategy: ஒரு செயலில் வெற்றிகிட்ட வியூகம் முக்கியம், அவ்வகையில் சூர்பனகை முக்கு அறுபட்டு தன் அண்ணனிடம் சென்று முறையிடுகையில் சீதையின் அழகை ஏற்றி சொன்னது வியூகமே. இன்னொரு சம்பவம் சீதையைத் தேட உதவுவதாக கூறிய சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு அரசனானதும் தன்னுடைய உறுதிமொழியை மறக்கிறான், அதனால் போபமாக செல்லும் இலக்ஷ்மணனை எதிர்கொள்ள அனுமன் அங்கே வாலியின் மனைவி தாரையை நிறுத்துகிறான். அது இலக்ஷ்மணனின் கோவத்தை தணிக்கிறது, தாரையை கண்ட அவன் தன் தாயை நினைவு கூறுகிறான் (Empathy).

Loyalty vs Righteous: இராவணனுக்கு இரண்டு தம்பி விபீஷணன், கும்பகர்ணன். இருவரும் இராவணன் செய்தது தவறு என்று சொன்னார்கள், ஆனால் விபீஷணன் அறத்தின் பக்கம் இருக்க அண்ணனை பிரிகிறான். ஆனால் கும்பகர்ணன் தர்மத்தைவிட அண்ணன் என்கிற விசுவாசம் முக்கியம் என அவனுக்காக போரிடுகிறான். இதில் சிறந்த முடிவு என்று ஒன்று இல்லை, அறம் என்ற வகையில் விபீஷனனும், விசுவாசம் என்ற வகையில் கும்பகர்ணனும் முதன்மை பெருகிறார்கள்.

Ethics: படைகளை இழந்து நிற்கும் சம்புமாலியை அனுமன் தாக்காமல் விடுகிறான், படையை இழந்து நிற்கும் இராவணனை ‘இன்று போய் நாளை வா’ என்கிறான் ராமன், சொந்தங்களை இழந்து மடியும் இராவணனுக்கு ஈமைக் கடன்களை செய்ய விபீஷணனை பணிக்கிறான். இப்படி இராமாயண காதை முழுதும் நன்நெறிக்கு பல உதாரணங்கள் உண்டு.

Differentiating Rewards: சுக்ரீவன், அங்கதன், ஹனுமன் என் எல்லோருக்கும் பரிசு கொடுக்கப்படுகிறது, அங்கதனுக்கு தன் சிற்றப்பாவோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று இராமன் அறிவுரை வழங்கி பரிசு அளிக்கிறான். அனுமனுக்கு தன்னை கட்டித்தழுவ வாய்ப்பு அளிக்கிறான். இவ்வகையில் அவர் அவர்களின் தேவை அறிந்து, அவர் அவர்களின் பங்களிப்பையும் பொருத்து பரிசுகள் தரப்படுகிறது.

இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய Management Guru கம்பன் புத்தகம் நம் கிங்கவுன்டி நூலகத்தில் கிடைக்கிறது.

என் உரை: https://www.youtube.com/watch?v=dPnFCnkPpu8

சோம வள்ளியப்பன்: https://www.youtube.com/watch?v=Ia5HpDhWOFU

புத்தகம்: மேனேஜ்மெண்ட் குரு கம்பன் – சோம. வள்ளியப்பன்
https://kcls.bibliocommons.com/v2/record/S82C1954046

புத்தகம் காட்டும் நிர்வாக கோட்பாடுகளும், யுக்திகளும்

பன்முகத்தன்மை:  Diversity

தலைமை பண்புகள்: Leadership qualities

  • Participatory style of leadership
  • Finding out the facts not jumping to conclusions
  • Taking personal responsibility
  • Leadership qualities
  • Ethics
  • பகைவனுக்கு அருள்வாய்
  • Following the protocol under any circumstances
  • அனுமனின் அடக்கம்: நான் அடிமைத் தொழில் புரியும் பணியாளன், நாயினும் கடையேன் நான்.
  • அதிகார அடுக்கை பின்பற்றுதல்.
  • ராமன் பின்பற்றாத நீதி நெறியா? (வாய்ப்பு கொடுப்பது, ஆழமான மதிப்பீடுகள், இன்று போய் நாளை வா, போட்டியாளர்க்கு வாய்ப்பு)

குணாதசியம்

  • நன்றி பாராட்டுதல்
  • தன்னடக்கம்
  • தன்னிடம்றிந்து நடத்தல்
  • கம்பனின் தன்னடக்கம்
  • விசுவாசம்
  • மலையும் காட்டுகிறது விசுவாசம்
  • ராமனுக்கு தாயல்லவா?
  • வாலியின் மேன்மை
  • பெரியவர்களுக்கு மரியாதை
  • மற்றவர்களை மதித்தல்
  • காலில் விழ வேண்டாம்
  • பெண்களுக்கு கூடுதல் மரியாதை
  • முடிவுக்கு கட்டுப்படுவது
  • மரியாதை காட்டும் விதம்

முக்கிய பணி: Mission

  • Not to underestimate குறைத்து மதிப்பிடலாகாது
  • Being focused எடுத்த செயல் மீது கவனம்
  • Understanding the criticality நிலையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுதல், நிலைமை அறிந்து நடந்து கொள்ளுங்கள்
  • Sence the urgency அவசரம் புரிந்து நடத்தல்.
  • Focus கவனக்குவிப்பு
  • Clarity in thinking சிந்தையில் தெளிவு

ஆட்ட வியூகம்: game plan strategy

  • Strategy
  • வாலியைக் கொல்ல ஒருவழி.
  • இந்திரஜித்தின் யுத்த தந்திரம்
  • கும்ப கர்ணன் சொல்லும் யோசனை.
  • வம்புக்கு இழுப்பது Disturbing and provoking
  • ஏற்பாடு Agreement
  • எதிரியைச் சரியாக மதிப்பிடுதல் Estimating the opponent competition

மனிதவள நிர்வாகம்: human resource management

  • வள ஒதுக்கீடு Resource allocation
  • விபீடணனையும் இலக்குவனுடன் போய் இருக்கச் சொல்லுதல்.
  • வேலைக்கு ஏற்ற நபர் தேர்வு Selecting a right person
  • தகுதி அடிப்படையில் தேர்வு Selecting on merit
  • இதனை இதனால் இவன்முடிப்பான்.
  • குழுவாய் பணியாற்றுதலும் ஈடுபடுத்தலும் Teamwork and involvement
  • சரியான மதிப்பீடு Realistic self appraisal
  • Perception
  • தேவர்களும் விதிவிலக்கல்ல
  • ஆழ்ந்த ஆலோசனை In deep discussion
  • குழுவின் வெற்றி மமதை Group Think
  • ஊக்குவித்தல் Motivation
  • அதிகாரம் கொடுப்பது Empowerment
    • இந்திரஜித்தன் தந்தையை குற்றம் சொல்லுவது, அங்கதன் ஆகியோரும்,
  • அங்கீகரிப்பும் வெகுமதிகளும் Rewards and recognition
    • விபீடணனுக்கு பாராட்டு.
  • தன் குழுவில் உள்ளோரின் சாதனைகளை அங்கீகரித்தல் Acknowledging team members achievements
  • அனுமனும் அவ்வழி
  • வெகுமதிகள் கொடுப்பது
  • பொருட்கள் தவிர ஏனைய வெகுமதி Non monetary rewards
  • யாரை வைத்து கொடுப்பது? 

கலந்தாலோசனை: consultation

  • ராமன் கலந்து ஆலோசித்தல்
  • ராவணன் கலந்து ஆலோசித்தல்
  • குழு உருவாக்கம்

குழு உருவாக்கம்: team building

  • குழுவினரை தலைவன் பாராட்டுதல்
  • பிறர் செய்த உதவியை குறிப்பிடுதல்

தகவல் பரிமாற்றம்: communication

  • பணிவு கலந்த வினவல்
  • இதை செய்கிறாயா? அல்லது.
  • தொடர்பு கலையில் எளிமை மிக முக்கியம்
  • சொல்லுவது முழுவதையும் கேட்க ஆயத்தப்படுத்துவது
  • எதை எப்படி பேச வேண்டும் என்று திட்டமிடுதல்
  • எதை சொன்னால் எடுபடும்மோ அதை
  • சீதை மறுமொழி
  • அனுமன் சீதையிடம் பேசுங்கள்
  • சுய அறிமுகம் Self introduction
  • சொற்களற்ற செய்தி பரிமாற்றம் Nonverbal communication
  • அவை தெரிந்த செய்திகள்
  • பார்வை ஒன்றே போதுமாம்
  • கண்டனன் சீதையை
  • தேவையான அளவு விவரங்கள்
  • கண் ஜாடைக்கு மேல் என்ன வேண்டும்?

உணர்வு புத்திசாலித்தனம்: emotional intelligence

  • உணர்வைத் தூண்டி காரியம் சாதித்துக்கொள்வது
  • உணர்வு கடத்தல் Emotional hijack (சீதை லட்சுமனை நீ இங்கே நிற்பது நீதி அல்ல என்று சொல்லி இராமனைத் தேட பாகசொல்லுதல், அநுமனின் அரற்றல்: போரில் பொம்மை சீதையைப்பார்த்து அழுவது, ராம, லக்ஷ்மனரும் துயர் அடைகிறார்கள். விழுகிறார்கள்)
  • உணர்வை தூண்டுதல் Emotional provocation
  • சுய நெறிமை Self-regulation (அசோக வனத்தில் அனுமன், தன்னை சரிப்படுத்திக்கொள்ளல்)
  • பிரதிபலித்தர் Reflection
  • உடனடி மனப்பான்மை, உள்ளுந்துதலைத் தவிர்த்தல் Impulsive control
    • Sympathy, empathy, apathy (கேட்ட பின்பே பேசும் அனுமன், மற்றவர் உணர்வை உணர்வது empathy)
  • எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் காரணங்களை பகிர்ந்து கொள்ளுதல் People’s skills share thoughts rational and feelings
  • நம்பிக்கை trust (ஹனுமன் மீது சுக்ரீவன் நம்பிக்கை)

ஏனைய நிர்வாக உத்திகள்: General Management thoughts     

  • எப்படி ஆட்சி நடத்த வேண்டும்? How to govern?
  • பிணக்கு தீர்ப்பது? Conflict resolution
  • பேச்சுவார்த்தை திறன் பேரம் பேசும் சாதுரியம் Negotiation skills
  • தகுதிக்கு ஏற்றவருடன் போரிடங்கள் live up to your standards
  • ஈகைக்கு உட்பகை உலோபம் Corporate social responsibilities
  • நெற்றிக்கண்ணை திறப்பினும் whistle blowing
  • எல்லோருக்கும் ஒரு பணி பங்கேற்பு Role

An evening with an AI Researcher

AI for social causes

In the realm of AI for social causes, two practical problems he explained to me: firstly, the challenge faced with the search for detection of diseases in cotton crops before they become disastrous, and secondly, the diagnostic aspects of Tuberculosis treatment. While technological capabilities exist, the true hurdle lies in last mile of making the technology accessible to farmers is the biggest challenge. practical implementation and adoption challenges like form factor etc., We discussed about how corporatized farming solves this problem like in the case of SBUX (Farmer support centers) but take away the power away from farmers. Organizing into coops is another trend.

However, progress is notable in TB treatment, thanks to established structures.

Indiaspora – Sunil Wadhwani & Ramesh Wadhwani

AI Social Good

AI Systems

Humans give more importance to logic-based thinkers, often considering men superior for their logical approach compared to women’s reliance on emotion. Similarly, hierarchical structures such as upper and lower castes are charactered behind this logic-based approach made available to certain society of people. Those who can logically convince others are considered as superior. Our Nyana system talks more on this. It’s well demonstrated by Adi Shankar.

Human work manifests in two primary ways: through logic-based reasoning and by leveraging vast knowledge bases. While AI largely mirrors these paradigms, cybernetics offers a distinct approach wherein systems learn autonomously from sensory input.

Book Recommend: Geek Heresy: Rescuing Social Change from the Cult of Technology

Cybernetics

Cybernetics is a multidisciplinary field that deals with the study of systems, control, and communication in humans, animals, machines, and organizations. It originated in the 1940s and 1950s, largely through the work of mathematician Norbert Wiener. The term “cybernetics” comes from the Greek word “kybernetes,” which means “steersman” or “governor.”

In cybernetics, the focus is on understanding and creating systems that can regulate themselves or be regulated to achieve specific goals. This involves concepts such as feedback, information processing, and adaptation. Cybernetics has applications in various fields, including engineering, biology, psychology, sociology, and management.

One of the key concepts in cybernetics is feedback, which refers to the process of a system receiving information about its output and using that information to adjust its behavior. This feedback loop is fundamental to the functioning of many systems, from simple thermostat-controlled heating systems to complex social organizations.

Overall, cybernetics provides a framework for understanding and designing systems that can regulate themselves and interact with their environments in intelligent ways.

What is Cybernetics, let’s ask ChatGPT

Body, Mind, Consciousness

Defining a living thing hinge on two key characteristics: self-creation of its parts and an inherent survival instinct to discern good from bad. This essence of life is evident even at the cellular level, where cells autonomously grow and function, forming organs with distinct characteristics. Remarkably, complex systems like the immune system operate independently without the involvement of brain. An organ is a group of cells, human body is a society of cells. ultimately contributing to the cohesive functioning of the human body. There could be a system where each human is a function, but we may not have those details, as our knowledge is bound to our system boundary.

Book Recommendation: The Embodied Mind: Cognitive Science and Human Experience

Advaita Vedanta deals in detail, while Adi Sankar went deep on it, on contrary he also went to the bajagovindam route. In case of Ramanuja, he clearly differentiated Bhakthi. He called out we are part of a bigger system.

Book Recommendation: Advaita Vedanta : A Philosophical Reconstruction

On related note, check out U.G. Krishnamurti, J. Krishnamurti & Osho. JK’s associate D. Rajagopal.

Related Videos: Symbiosis, Life on Our Planet

ரமணர்

வாழ்வின் நோக்கம் முக்தி என்பது அறிவோம், தத்துவமசி என்பதே நம் அறிதல். அவ்வகையில் அந்தராத்மாவை, ஆன்ம ஞானத்தை அடைந்தவர் ரமணர்.

மதுரை அருகில் திருச்சூழி என்ற ஊரில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சுமாராக படிக்கக்கூடிய மாணவர் வேங்கடராமன். அடித்து உதைத்தாலும் தெரியாத அளவிற்கு ஆழ்ந்து தூங்கக்கூடியவர். 12 வயதில் தந்தை இழந்து மதுரையில் உள்ள தன் சித்தப்பாவீட்டில் தன்னுடைய மேல்நிலைப்பள்ளியை தொடர்கிறார். அவர் வீட்டுற்கு வந்த விருந்தினர் ஒருவர் அருணாசலம் பற்றி பேசியது அவருக்கு ஓர் ஈர்ப்பை தந்தது, அதைத் தொடர்ந்து பெரியபுராணம் படிக்கிறார், விளையாட்டில் ஆர்வம் இழந்து, இயல்பான பள்ளிவாழ்கையிலும் ஈடுபாடு அற்றவறாக, உணவு ருசி அறியாதவராக, தவத்தில் அடிக்கடி மூழ்குபவறாக மாறுகிறார். தனது 16 வயதில் ஒரு நாள் மரண அனுபவம் பெருகிறார், தான் உடல் அல்ல என்ற புரிதலை அடைகிறார். தான் என்றும் அழியாக பரம்பொருள் என உணர்கிறார். ஒரு நாள் “வீட்டோடு ஒட்டாமல் சாது மாதிரி கண்ணை மூடிக் காலங் கழிக்கிறவனுக்கு வீட்டுக்காப்பும் சௌகரியமும் என்னதுக்கு?” என்று ரமணரின் அண்ணன் கூறிய வார்த்தை அவரை ஒரு முடிவு எடுக்க வைக்கிறது. ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் திருவண்ணாமலை நோக்கி புறப்படுகிறார்.

நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். இது ஒரு நல்ல காரியத்தில் தான் பிரவேசித்து இருக்கிறது. ஆகையால், இந்த காரியத்திற்கு ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதை பார்ப்பதற்காக பணமும் செலவு செய்ய வேண்டாம்.

மூன்று நாள் பயணமாக (சுருக்கம் கருதி விவரிக்கவில்லை) திருவண்ணமாலை கோவிலை அடைந்து அப்பா வந்துவிட்டேன் என்று திருவண்ணமலை லிங்கத்தை கட்டித்தழுவிகிறார், அப்போதுதான் அவர் தன் உடலில் உணர்ந்த சூடு தணிந்ததாக உணர்கிறார். கோவிலைவிட்டு வெளியோறி, மொட்டை அடித்துக்கொண்டு தன் உடைகளை துறந்து கோமணம் தரித்து தன்னிடம் இருந்த சில்லரைகளையும் தூக்கி எறிகிறார் (அதன் பின் எப்போதும் பணத்தை தொடவில்லை). மழை பொழிகிறது, அதில் நனைகிறார்.

கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடுகிறார். அங்கு சிறுவர்கள் கல்லெரிந்து தொந்தரவு செய்ய, அருகில் இருந்த பாதாள லிங்கத்தில் தியாணிக்கிறார், இப்படி சில (சில குறிப்புகள் ஆறு வாரம் என்கிறது) வாரங்கள் அங்கேயே தியானிக்கிறார். சேஷாத்திரி ஸ்வாமிகள் அவருக்கு அவ்வப்போது உணவு கொடுக்கிறார், உதவுகிறார். அங்கே பூச்சியும், எலியும் இருக்கும் பகுதியில் தன்மெய்யுணர்வற்று இருந்த அவரை காப்பாற்றி குருமூர்த்த பகுதியில் அமர்த்துகிறார்கள். பிராமண ஸ்வாமி என்றும் மௌன சாமியாராக எல்லேராருக்கும் அறிமுகம் ஆகிறார், கோவில் அபிஷேகப்பால் மட்டும் அருந்தி வாழ்கிறார். எப்போதும் தவம், மௌனம் என்றே வாழ்கிறார்.

மூன்று வருடங்கள் கழித்து அவரின் அம்மா தேடிவந்து அழுது புலம்பபுகிறார், தன்னுடனே வரச்சொல்லி கெஞ்சுகிறார், மௌனமாகவே இருந்தவர் தன் பதிலை ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கிறார்.

அவரவர் பிராப்த பிரகாரம் அதற்கு ஆனன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது, என் முயற்சிக்கிணும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது, இதுவே தின்னம், ஆகலின் மௌனமாய் இருக்கை நன்று.

ரமணர்

17 வருடங்கள் திருவண்ணாமலையில் உள்ள விருபாக்ஷி குகையில் தவ வாழ்வு வாழ்கிறார். பழனி சுவாமி என்பரும் இவருடன் இருக்கிறார். மதுரையில் இருந்து வந்து மூன்று ஆண்டுகள் பிறகே மெல்ல பேசவும், பக்தர்களின் கேள்விகளுக்கு எழுத்துமூலமும் பதில் அளிக்கிறார். தன்னுடைய 21ஆவது வயதில் சிவ பிரகாச பிள்ளை என்பவர் கேட்ட கேள்விகளுக்கு ரமணர் அளித்த பதில்களே பின்னாளில் “நான் யார்?” என்ற புத்தகமாக வெளிவந்தது. விருபாஷி குகைக்காலங்களில் நிறைய புத்தகங்களையும் படிக்கிறார், ஒரு வேளை பிக்க்ஷைக்கு சென்று வருகிறார்.

நான் யார்?

  • உடல் நான் அல்ல. எண்ணங்களே மனம். எண்ணங்களை யாருக்கு உண்ணாயின என்றுபார்க்க வேண்டும். ‘நான் எழும் இடம் ஏது?’ என்ற ஆத்ம விசாரமே அந்தராத்மாவை அடிய வழி செய்யும்.
  • கயிறை பாம்பு என்று எண்ணி பயப்படுபவன், அது கயறு என்று அறிந்த பின் பாம்பு என்ற பயம் போவது போல நாம் உடல், மனம் அல்ல என்ற தெளிவு வந்தால் தான் என்பதை அறியலாம் என்றார்.
  • பிராணாயாமம், நியம்ம, பூஜை எல்லாம் எண்ணம் ஒருமைப்பட உதவும் உபாயம், ஆத்ம விசாரம் தான் அந்த அந்தராத்மாவை அடைய ஒரே வழி.
  • முடியுமா, முடியாதா என்பது அல்ல கேள்வி, விடாப்பிடியாக ஆத்ம விசாரம் செய்தால் நன்மை உண்டாகும். உலகியல் விழயங்களுக்கு கவலைகொள்வது இரயிலி பாரத்தை தலையில் வைத்துக்கொண்டு செல்வது போல.
  • விசாரி. முழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளிலும் சாக்ஷியாய் இருப்பது எது?
  • வெய்யில், நிழல் போல நாம் தூக்கம், முழிப்பு என இருக்கிறோம். தன் யதார்த்த சொரூபத்தை தெரிந்துகொள்வதே முக்தி. சச்சிதானந்தம்.
  • ஞான திருஷ்டி என்பது மனத்தை ஆத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே.
  • சும்மா இரு, வந்த வேலையை கவனி!
  • நான் எழும் இடம் ஏது என்ற ஆத்ம விசாரம்
    நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
    நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
    ஞான விசாரம் இது உந்தீ பற.
நான் யார்? ரமணர்

பல பண்டிதர்களும் அவரிடம் வருகிறார்கள், மௌனமே அவர் உபதேசம், நயன தீக்ஷையில் நிறைய கேள்விகளோடு வருபவரும் மௌனமாய் அமர்ந்து செல்கின்றனர். சம்ஸ்கிருத பண்டிதர் காவ்ய கண்டர் கனபதி முனி, வேதங்களை கற்று அறிந்துவிட்டேன் ஆனாலும் எனக்கு தெளிவு இல்லை என்று சரணடைகிறார், இரமணரில் உபதேசத்தால் இன்புற்று வேங்கடராமன் என்ற பெயரை ரமண மகரிஷி என உலகுக்கு அறிவிக்கிறார். உலகெங்கிலும் இருந்து இவருக்கு பல பக்தர்கள் வருகிறார்கள். ரமணரைப்பற்றி தமிழில் இருப்பதைவிட ஆங்கிலத்தில் பல தகவல்கள் இருப்பதைக்கண்டேன். இன்றும் இந்தியரல்லாத பெரும் பக்தர் கூட்டம் இவருக்கு இருக்கிறது.

Deham Naham; Koham, Soham!

மக்கள் அதிகம் வர விரூபாஷ குகையிலிருந்து ஸ்கந்தாஸ்ரம் வருகிறார். (37 வயதில்) அவருடைய தாயரும் அவருடன் வந்து இருக்கிறார், சன்யாசம் மேற்கொள்கிறார், 5 வருடங்கள் அவருடன் வாழ்ந்து மஹா சன்னதி அடைகிறார், எறியூட்டப்படும் வழக்கத்துக்கு மாறாக சமாதியமைகிறது, பெண்ணுக்கு சமாதியும் கோவிலும் அமைக்கிறார். ஆண், பெண், சாதி, மத, தேச பேதம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை.

ஆசிரமித்திற்கு கொடுக்கப்பட்ட பசு கன்று திருவண்ணமாலையில் ஒருவர் வீட்டில் வளர்க்கப்படுகிறது, ஒரு நாள் பசுவையும் கன்றையும் ரமணரிடம் அழைத்துவருகிறார்கள், மறுநாள் முதல் அந்த கன்றுக்குட்டி ரமணரைக்காண தினமும் ஓடிவருகிறது, அந்த கன்றுக்குட்டி பின் ஆசரமத்திலேயே வளர்க்கப்பட்டு லக்ஷ்மி என்று அழைக்கப்படுகிறது, பின் அதன் சமாதியில் கோவிலும் அமைக்கப்படுகிறது, இப்படியாக அவர் மனிதர்கள் என்று மட்டும் இல்லாமல் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருக்கிறார்.

சமையலில் உதவி செய்கிறார். மிகுந்த நகைச்சுவையுணர்வு கொண்டவராக இருக்கிறார், திருடவரும் குரங்கை ஆசிரம மக்கள் விறட்ட ‘எடுத்துட்டு ஓடிடு!’ என குரங்குடன் பேசுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், சம்கிரத மொழிகளை அறிந்தவராக இருந்திருக்கிறார். ஒரு முறை படித்தால் அதை அப்படியே நினைவில் கொள்ளும் ஆற்றல் பெற்றவராக இருந்திருக்கிறார்.

ஒரு முறை ஆஸ்ரமத்தில் திருடர்கள் புகுகிறார்கள். அவரை அடித்து உதைத்து போகிறார்கள். ஆனால் அதைப்பற்றி பெரியதாய் அலட்டிகொள்ளாமல், ஜென்மாவின் சரீர அவஸ்தைகளை சலனமில்லாமல் அனுபவிக்கிறார். தன்னுடைய 50 வயதில் நிறைய புத்தகங்கள் எழுதுகிறார், சில புத்தகங்களை மொழிபெயற்கிறார், இவரின் வாய்மொழிகளின் தொகுப்புகள் பல புத்தகங்களாக வந்துள்ளன. 60 வயதில் தன்னுடைய தாயின் மாத்ருபூதேஷ்வர் கோவில் முழுமையடைகிறது. தன்னுடைய 71 வயதில் புற்று நோய்காய் பக்தர்களின் அடத்தால் மயக்க மருந்து இல்லாமல் உடலில் மூன்று முறை அறுவைசிகிக்சை செய்துகொள்கிறார், புற்று நோய், மூட்டுவலி என உடல் வலிகள் இருந்தபோதிலும், பக்தர்களின் தரிசனத்தையும் செய்து, எந்த புலம்பலும் இன்றி சாரீர இம்சைகளை அனுபவித்திருகிறார். தன்னுடைய உடலைப்பற்றியே கவலை கொள்ளாமல் வாழ்கிறார்.

அவர் சொன்னவையைவிட, எழுதியதைவிட அவருடன் இருந்தவர்களின் அனுபவம் அவரை இன்னும் அதிகம் உயர்த்துகிறது. சூரி நாகம்மா அவர்கள்ன் Letters from Ramanashramam என்ற அவரின் கடிதங்கள். Day by Day என்ற புத்தகமாக வந்த தேவராஜ முதலியார் அவர்களின் நாட்குறிப்பு தகவல்கள் என அவரோடு இருந்தவர்களின் அனுபவங்கள் மூலம் நாம் ரமணரைப்பற்றி மேலும் அறியமுடிகிறது. யோகிராம் சூரத்குமார், இளையராஜா என அவரின் பலப்பல சிஷ்யர்கள் அவர் புகழை ஓங்குவிக்கிறார்கள்.

உலகெங்கும் ரமணாஸ்ரம சத்சங்கங்கள் நடக்கிறது, நியூயார்க் நகரில் பெரிய தியானக்கூடம் இருக்கிறது, இங்கு சியாட்டில் பகுதிகளிலும் வராந்திர சத்சங்கள் நடக்கின்றன.

என் உரை: வேதா கோவில் – மகான்களும் வாக்கும் – ரமணர்

Ref Book: ஶ்ரீ ரமணரும் ஆன்மீகப் பாதையும்.pdf

Video References : Speeches on Ramanar – Youtube Playlist

Books

  • அருணாசல தீபதர்சன தந்துவம்
  • அருணாசல மகாத்மியம்
  • அருணாசல அக்ஷரமனமாலை
  • அருணாசல நவமணிமாலை
  • அருணாசல பதிகம்
  • அருணாசல அஷ்டகம்
  • அருணாசல பஞ்சரத்னம்
  • உபதேச சாரம்
  • ஆத்ம வித்யா
  • உபதேசவுந்தியார்
  • உள்ளது நாற்பது
  • உள்ளது அநுபந்தம்
  • அப்பளப்பாட்டு
  • ஆன்மவித்தை (கீர்த்தனம்)
  • பகவத்கீதாசாரம்
  • தக்ஷிணாமூத்தி தோத்திரம்
  • விவேக சுடாமணி
  • ஆத்மபோதா
  • நானார்
  • விசாரசங்கிரகம்
  • உபதேசமஞ்சரி
  • ரமணகீதா – கனபதி முனி
  • Mountain Path – Arthur Osborne, Paul Brenden

கம்பராமாயண கடவுள் வாழ்த்து பாடல்கள்

பால காண்டம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

அயோத்தியா காண்டம்

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப-
கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

ஆரணிய காண்டம்

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா,
ஓதி ஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம், வேதியர், விரிஞ்சன், முதலோர் தெரிகிலா,
ஆதி தேவர்; அவர் எம் அறிவினுக்கு அறிவுஅரோ.

கிட்கிந்தா காண்டம்

மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும், அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும், இடையில் நின்றவும்,
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும், ஆயினான்.

சுந்தர காண்டம்

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்,
கலங்குவது எவரைக் கண்டால்? அவர், என்பர் – ‘கை வில் ஏந்தி,
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!’

யுத்த காண்டம்

‘ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்; ‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்; ‘ஆமே’ என்று உரைக்கின், ஆமே ஆம்;
‘இன்றே’ என்னின், இன்றே ஆம்; ‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

சியாட்டில் பாகவதம்

இறைவனுபவங்களாகவே என்னைச் சூழுகிறது. எது என்னை ஈர்க்கிறது என்று தெரியவில்லை, கடவுள் உண்டா என்றெல்லாம் பல நேரங்களில் கேள்விகேட்பதுண்டு.  சமயச்சடங்குகளின் மீது பல நேரங்களில் ஒரு சலிப்பு ஏற்படுவதும் உண்டு, ஆனால் ஏதோ ஒரு சக்தி என்னை இப்படியான சத்சங்கங்களிலேயே உந்தித் தள்ளுகிறது. திருமந்திரம் கற்கும் வாய்ப்பு, மாணிக்கவாசகரை உணரும் பாக்கியம், தேவாரத்தில் திளைக்க, பிரபந்த சுவை அறிய, வேதம் கற்க என என்னுடைய முன்முனைப்பு இல்லாமலே ஏதோ ஓர் சக்தி என்னை இங்கெல்லாம் அழைத்து செல்கிறது.

இப்படியாகச் சமீபத்தில் பாகவத சப்தாகம நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  புராணம் என்றாலே பல்லுபோன பிறகு கேட்பதென்றும் கோவிலில் உபன்யாசம் செய்வது என்றும், இந்தச் செயற்கைநுண்ணறிவு உலகில் இந்த அரத்த பழயசமாசாரங்களில் நேரம் செலவிடுவதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம் என்று எண்ணுவதும் உண்டு. 

ஆனால் மெல்ல மெல்ல அமைதியான, நிதானமான, கூட்டு வழிபாடுகளில் ஈர்க்கப்பட்டு மனம் அடையும் மோன நிலையை, உலகை மறந்து, ஓர் உவகையுணர்வில் திளைத்து, தன்னை மறந்த நிலையை அடையும் அனுபவங்களைச் சமீபகாலமாக நிறைய பெறுகின்றேன். எனக்கு வயதானது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம், மேலும் அருள் நிறைந்த மனிதர்களின் அனுக்கமும் காரணமாக இருக்கலாம். எதுவென்று யாமறியேன்.

சியாட்டில் நகரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பாகவதக்கதை கேட்பது முதலில் எனக்குக் கொஞ்சம் ஒட்டவில்லை ஆனாலும் கதைகளும், பாடல்களும் நிறைந்த அழகிய ஓர் அனுபவம் என இதனை நண்பர் அறிமுகம் செய்தார். அதில் ஈர்க்கப்பட்டு நானும் கலந்துகொண்டேன்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய… என ஒற்றை ஸ்வரத்தில் அனைவரும் சொல்ல அந்த இடமே இறையருள் நிறைந்த இடமாக மெல்ல மாறுவதை உணர முடிந்தது.  முழுமையான நிசப்தம், ஒற்றை குரலில் ஆ…ஊ…ம்… என பீஜாக்ஷரம் ஒலிக்க, மெல்ல அதிர்ந்து பொருட்கள் அசைந்து சமநிலை பெறுவதுபோல் உள்ளம் அமைதியில் அடங்கி நின்றது. 

மொட்டு மெல்ல அவிழ்ந்து பூவாவதைப் போல மெல்ல, இனிய குரலில், சிரித்த முகத்துடன் பாகவத கதையை சொல்லச்சொல்ல அனைவரும் கேட்க, அங்கே எல்லோரின் எண்ண ஓட்டமும் ஒன்றாகி, அந்தராத்மாக்களின் சங்கமமாக, யுகாந்திரமாகக் கேட்ட விஷயங்களின் நினைவலையாக, மெல்ல மெல்ல அந்தக்கதைகளுக்குள்ளும் அந்தக் காலகாட்டத்துக்கும் அம்மனிதர்களின் எண்ண ஓட்டத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். 

சாத்வித, ரஜோ, தாமச என முக்குணங்கள், காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சர்யம் என்ற மன அவஸ்தைகள் என ஒவ்வொரு செய்தியும் கதைகளின் ஊடே வெளிப்பட, தெரிந்த தகவல்கள் நாருசித்த பாலச்சுளையை மீண்டும் சுவைப்பதுபோல உணர்வு, நான் உடல் அல்ல! பரமாத்ம அனுபவம், அகந்தையில்லா நிலையென உணர்ந்து, எனக்குள் எண்ணங்கள் விலகி, நிர்சலமாக, ஸ்தித பிரக்ஞனனாய், அன்னை சொல்லும் கதையைக் கேட்டு ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி என நகர்ந்து சொல்லும் குழந்தைப்போல.  அந்த உணர்வில் ‘நான்’ இருக்கையில் மெல்ல ஒரு பாடல் இசைக்கப்பட அதனோடு இனிமையாய் தாளம் சேர அங்கே ‘நான்’ துரியத்தை அடைந்துவிடுவதைப்போலத்தான் உணர்ந்தேன்.

எல்லோரும் சேர்ந்து சிலமுறை ஓம் நமோ பகவதே வாசுதேவாய என மந்திரம் ஓத நா இனித்தது கண்கள் தேஜசில் ஒளிர்ந்தது, மேனியில் இறையின் ஸ்பரிசம் சேர்ந்தது, சுகந்தத்தை நுகர்ந்தேன், ஓங்காரம் காதுகளில் தேவகானமாகியது, தன்மாத்திரைகளை, ஞானேந்திரிய, பஞ்சபூதங்களும் முழுமையில்.

பாகவதம் வெறும் கதைகேட்பதல்ல அதனைவிடவும், அது தரும் சத்சங்கம், இறை உணர்வு, அனுபவம் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.  வெண்கலமோ, வெள்ளியோ, தங்கமோ துலங்கத் துலங்க மின்னுவதைப்போலப் பாகவதம் மனதை துலங்கவைக்கும் உபாயம் என நிதர்சனமாய் அறிந்தேன். இவ்வனுபவம் இச்சியாட்டிலில் வாய்த்ததில் ஆனந்தம், என் பாக்கியம் .

பல பாகவத சப்தாகமங்களில் கலந்துகொண்ட என் அன்னை பலமுறை என்னையும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள பரிந்துரை செய்துள்ளார், அப்போதெல்லாம் அன்னையளவுக்கு நான் ஒன்றும் அத்தனை பக்திமானல்லவே என்று எண்ணுவேன். இதெல்லாம் 19 நூற்றாண்டு மனிதர்களுக்கு என்றிருந்தேன், ஆனால் என் அன்னையின் ஆசிதான் என்னை இவ்வனுவம் பெறவைத்தது என உள்ளூர உணர்ந்தேன். என் அன்னையின் புன்னகை மின்னலாய் வந்து சென்றதை உணர்ந்தேன்.

அப்பேரருளாளன் எனக்காக என்ன வைத்திருக்கிறான் என்பதை நானறியேன்.  ஆனால் நான் இகலோக சுகங்களில் அடையாத ஓர் உணர்வை இந்தப் பரலோக தத்துவங்களில் திளைத்ததில் அடைந்தேன் என்பது மெய்.

ஈஸ்வரோ ரக்ஷது. ஓம் நமோ பகவதே வாசுதேவாய…

தமிழ் புத்தகங்கள்

நிறைய தமிழ்ப்புத்தகங்கள் https://archive.org தளத்தில் கிடைக்கிறது, நீங்கள் ஒரு கணக்கை துவங்கி உங்களின் விருப்ப புத்தகங்களை இத்தளத்திலேயே சேகரிக்கலாம். pdf, epub என பல்வேறு வகைகளில் இப்புத்தகங்களை படிக்க முடியம்

Tamil Virtual Academy books in wiki

https://commons.wikimedia.org/wiki/Category:PDF_books_in_Tamil_from_TVA_in_2015

Tamil Virtual Academy books are available here, we can download the complete PDF or navigate to specific page. This also have the OCR text for search.


Noolaham

https://www.noolaham.org


Roja Muthiah

https://archive.org/details/RojaMuthiah

The Roja Muthiah Research Library Trust, Chennai (RMRL) has a vast collection that reflects Tamil print heritage and culture. Spanning a period of 300 years, the collection of more than 4,00,000 items comprising of books, journals, newspapers, printed ephemera and audio records. The earliest title is a book ‘Gnanpattukalin Posthakam’ published in 1797.


Tamil Digital Library

https://www.tamildigitallibrary.in

அச்சுநூற்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள், அரிய காகிதச்சுவடிகள், கல்வெட்டுக்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், செப்பேடுகள் என தமிழியல் ஆய்வாதாரங்கள் அத்தனையும் இங்கே உள.


Central Institute of Classic Tamil

https://library.cict.in/td.html

The CICT Pavendhar library has a comprehensive collection of theses relating to classical Tamil submitted by the post-doctoral and doctoral fellowship researchers of the CICT as well as researchers from other universities and research institutions of Tamilnadu.


Toronto

https://tamil.digital.utsc.utoronto.ca/collections

The Digital Tamil Studies project at the UTSC library partners with an international network of collaborators engaged in the digital publication and stewardship of high-quality Tamil-language materials.


செட்டியார்கள் ஆலய குழுமம் மின் நூலகம்

http://sttemplelibrary.com

ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தின் செட்டியார் கோயில்கள் குழும மின்நூலகம். செட்டியார்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய நூல்களும் இதர வெளியீடுகளும் கிடைக்கும் ஒரே இடம்.


BJP Library

https://library.bjp.org/jspui


திராவிடர் விடுதலைக் கழகம்


படிப்பகம்

https://padippakam.com


Tamil Nadu

https://tamilnadupubliclibraries.org


National digital library of India

https://ndl.iitkgp.ac.in


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

https://ulakaththamizh.in/book_all


Neechalkaran books

https://oss.neechalkaran.com/books

புறநானூறு, 183. (கற்றல் நன்றே!)

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

தண்ணீர்

குடிதண்ணீர் குழாய் மூடாமல் சிலநிமிடங்கள் நீர் வீணாவதைப்பார்க்கும் போதெல்லாம் பதைக்கிறது மனம், அதனை உடனடியாக நிறுத்தி அந்தத்தண்ணீரைச் சேமிக்க நினைப்பது அனிச்சையாக நிகழ்வதுபோலவே உணருகிறேன். அதற்கான காரணம் சிறுவயதில் விதவிதமான தண்ணீர் போராட்டங்கள்.


களக் குளக் என்று ஒரு குட்டி கைப்பிடி அடிகுழாயில் காலையில் ஆறுமணி முதல் ஏழுமணிவரை மட்டுமே வரும் குடிநீரை மூன்று குடித்தனக் காரர்களும் அடித்துப் பிடித்தாக வேண்டும். அதிலும் முதல் முக்கா மணிநேரம் வீட்டுக்காரங்களுடையது. அடித்து அடித்து கை ஓய்ந்துவிடும், சில நாட்களில் அந்த குழாய்க்குத் தண்ணீர் ஊற்றினால் தான் அது அடிக்கவே வாகாக வரும். சில நாட்களில் ஏழுமணிக்கு நிற்கவேண்டிய தண்ணீர் பத்து நிமிடம் முன்னதாக நின்றுவிடும் அந்த நாட்களில் அந்த குழாயை அடித்து அடித்து கை ஓய்ந்து ஏமாற்றம் தான் மிஞ்சும்.
இப்படி அரும்பாடுபட்டு தண்ணீர் கொண்டுவந்து சேர்ந்து அதனை அடுத்தநாள் காலை வரை சிறுகச் சிறுக செலவழித்து நாளைக்கடத்துவது என்பதெல்லாம் அனுபவித்து அறிந்தால் மட்டுமே விளங்கும்.
சிலநாட்கள் நகராட்சி நிர்வாகம் தண்ணீரைச் சுத்தம் செய்வதாய் அதிக குளோரின் கலந்துவிடுவார்கள். அதையும் சகித்துக்கொண்டுதான் குடிக்கவேண்டும். அடிபம்பு சிலநாட்கள் கெட்டுவிடும், அந்த வாஷரை மாற்ற, உடைந்த கம்பியை மாற்ற என்று, பதின்ம வயதிலேயே பயிற்சிப் பெற்றோம். கொஞ்சம் பெரிய ரிப்பைராகிப்போனால் ஆளைப்பிடித்துச் சரிசெய்வதற்குள் அக்கம் பக்கத்தில் ஒவ்வொரு குடமாய் கடன்கேட்டு அலைக்கழிக்கப்படும் போது அவரவர்கள் சொல்லும் விளக்கமும், காட்டும் தயையும் நம் சுற்றத்தைப்பற்றி நமக்கு உணர்த்தும்.


சில நாட்களில் சைக்கிளின் பின்னால் இரண்டு குடங்களின் கழுத்தைக்கட்டி இரண்டு பக்கம் தொங்கவிட்டு தண்ணீர் சிந்தாமல் இருக்க அதன் மேல் ஒரு துண்டுபோட்டு முடி என நாங்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்த ஞாபகங்கள். மழைக்காலங்களில் வாளிகளில் தண்ணீர் பிடித்து வடிகட்டி பாத்ரூமுக்கு உபயோகப்படுத்திக்கொள்வோம்.


நாங்கள் ஒரு நல்ல வீட்டிற்குக் குடிபோனபோது அங்கே தொட்டியில் தண்ணீர் நிறைந்து பின் மாடி டேங்கிற்கு செல்லும் வகையில் இருந்தது. எங்களுக்கு அந்த அடிபம்பில் இருந்து விடுதலை கிடைத்தது. ஒரு பக்கெட் தண்ணீரில் சோப்பிற்கு முன் இரண்டு-மக்கு-தண்ணீர் பின் நான்கு-மக்கு-தண்ணீர் என திண்டாடி குளித்ததுபோக குழாயைத் திறந்து நிம்மதியாகக் குளிக்க முடிந்தது. அப்போதும் அம்மா பாத்திரங்களைத் தேய்த்து ஒரே பக்கெட் தண்ணீரில் முக்கி கழுவி அதற்குப்பின் நல்ல தண்ணீரில் கழுவி எனத் தண்ணீரை அத்தனை சிக்கனமாய் பயன்படுத்துவார். கழவிய தண்ணீர், துணி அலசிய தண்ணீர் எல்லாம் செடிக்கு போட்டுவிடுவார்.


அடுத்து நாங்கள் சென்ற வீட்டில் இந்த பம்ப் வசதிகள் இல்லை அங்கு இராட்டின கிணறுதான். பிந்திப் போகும் இராண்டிணக்கயரு, இராட்டினம் கழன்று கிணற்றில் விழ நங்கூர கொக்கி போட்டு அதைத்தேடி எடுத்து மீண்டும் மாட்டும் வேலை, குடம் அடிபடாமல் தண்ணீர் எடுப்பது என அதில் தான் எத்தனை எத்தனை சாகம், மழைக்காலத்தில் தண்ணீர் மேலே வருவதும், கோடையில் அது அதலபாதாளத்திற்குச் செல்ல புதுக்கயிறு வாங்க வேண்டிய நிலை, அந்த புதுக்கயிறு பழகும் வரை குத்தும். குடுத்தணங்களுக்குள் சண்டை ஆளுக்கு ஒரு கயிறு, ஆளுக்கு ஒரு இராட்டினம். அது ஒரு தனி உலகம்.


சென்னை, ஹைதராபாத் என்று வந்தபோதும் துரத்தியது இந்த தண்ணீர் பிரச்சனை, பம்ப் ரிப்பையர், போர் ஆழம் பத்தலை என்று ஏதோதோ காரணங்கள். லாரியில் தண்ணீர் வரும் வரை குளியல் இல்லை. இரண்டு நாட்கள் குளிக்காமல் காலம் கழித்த நாட்களும் உண்டு. லாரியில் தண்ணீர் கொண்டு வந்து நிறப்பியதும், இந்த அதிபுத்திசாலி அப்பார்ட்மண்ட் மக்கள் தங்கள் வீட்டில் ஒரு பெரிய டிரம் வாங்கி அதில் குழாய் போட்டுச் சேமித்துவிடுவார்கள், லாரி தண்ணீர் ஒரு மணிநேரத்திற்குள் பதுக்கப்பட்டுவிடும். இன்னும் இந்தப்போராட்டங்கள் இந்திய பெரு நகரங்களில் தொடர்கிறதா என்று தெரியவில்லை ஆனால் இன்றும் தண்ணீர் வீணாவதைக்கண்டால் மனம் பதைக்கிறது.


வாழ்க்கைதான் எத்தனை வசதியாக மாறிவிட்டது, வேண்டுமான நேரம் வரை குளிக்கலாம், வேண்டிய தண்ணீரைக்குடிக்கலாம் என்பதே எத்தனைப்போரிய பேரு.

கந்தர்வன் அவர்கள் எழுதிய தண்ணீர் சிறுகதை படித்ததின் தாக்கம்.

எங்கோ கேட்ட கவிதை

எதுபற்றியது உமது கவிதை என நீர் வினவினால்
நீரே பதில் ஏனெனில் நான் நீர்

புனல் என கூறினால் புரிகிறதா?
வெம்மையால் வெண்ணீர்!
தன்மையால் தண்ணீர்!
இன்னும் விளங்கவில்லை?
What என்கிறீரா? வாட்டர் தான் நான்.
இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

புதிதெனில் நான் புதிதுமல்ல! புதிருமல்ல! யாரும் அறிந்தவளே!
உலகை உறுதியாய் பற்றியவள் நான்!
அதே உலகை, உறுதியாய் எனைப்பற்ற வைத்தவள் நான்!
உன் உதிரத்தின் உரமாய் இருப்பவள் நான்!
உன் உமிழ் நீராகவும் இருப்பவள் நான்!
நீர் இளைப்பாரும் போது தேநீரும், இளநீரும் கூட நான்!
வெளியேற்றும் சிறுநீரும், கண்ணீரும் நான்!
எங்கும் எதிலும் நான்! ஏனெனில் நானின்றி அமையாது உலகு!

திட, திரவ, வாயு என யாவுமாய் நான்!
திரும்பும் திசையெங்கும் திரவியமும் நான்!
ஆக்கம் தரும் அமுதும் நான்!
அங்கே அழிவு தரும் ஆழியும் நான்!
ஆக்கமானவள், ஆழமானவள், ஆபத்தானவளும் கூட!

நிறமற்ற நீருக்கு நிதமும் இல்லை உருக்கள்
நிறம் மாறி, உருமாறும் உதவா மனிதர் மத்தியில்
நீரமற்றும் உருவற்று இருப்பதே மேல் எனக்கு!

வீழ்ந்தாலும் வழக்குன்டெனில் அது அருவிக்கே!
தாழ்வில் தேங்கினாலும் பயனுண்டெனில் அது நீருக்கே!
வெள்ளைப்பாகாய் திடம் கொண்டு,
மேலிருந்து விழும் போது கனம் கொண்டு,
தன் அடியில் குளிப்பவர் தலையில் கொட்டு வைத்து,
தன் வழியை மறிப்பவர்தனை தள்ளிவிட்டு,
மனம் போன போக்கில்… இல்லை
மணல் போன போக்கில்… இல்லை
மடைதிறந்த வெள்ளத்திற்கு போக்கு தான் உண்டோ!
இடமென இருந்தாலே இறங்கிவிடுவேனே நான்!

ஆனால்
அறுக்கும் அறிவுரையை நானும் கூறுகிறேன்!
அனுபவபட்ட என்னிடமிருந்து அறுதியிட்டுக்கொள்ளுங்கள்!
மடைதிறக்கப்பட்டதே என மடத்தனமாய் இறங்கிவிட்டேன் இடம்பாராமல்,
ஒருபுறம் ஆதரவாய், ஆறாகி ஒரு வழியாய் ஒருவனுக்கு சோறானான்
மறுபுறம் மயக்கத்தில் திளைத்து, வேறாகி, சேறாகி சாக்கடையும் ஆனேன்!
ஏனெனில் வழிநடத்த எனக்கும் ஒரு வாத்தியார் தான் இல்லையே!
அணைகட்டி எனை வைத்து சண்டையிடத் தானே ஆட்கள் இருக்கிறீர்கள்!

பொதுவாய் சமமாய் மழையாய் பொழிந்தால்
கலர் நிலத்துக்கு பயன்பட மாட்டேன் என கலாய்த்துவிட்டார்.
வளம் பெருக்க வந்த நீரை நீர் குடிக்கும் கலருக்காக மாற்றி விட்டீர்கள்.
கட்டுக்கடங்காத காட்டு ஆற்றைக் குட்டி குடுவையில்கட்டி கடையில் வியாபாரம் செய்கிறீர்கள்.
நீலம்தனில் நிலவி அனைவருக்கும் பசியை ஆற்றவே நசை எனக்கு,
என்னை வைத்து உங்களுக்குள் வசை எதற்கு?

காவிரியாகிய நான் கருநிலத்திற்கும், திருநிலத்திற்கும் பொதுவானவள்.
கருத்து வேறுபாடு என கருவிலேயே கை வைக்கலாமா?
சாக்கடையில் இருந்தபோது கூட நான் சாவதாய் உணர்ந்ததே இல்லை
என் கண்ணெதிரே என் பிள்ளை அங்கே பசியில் இருக்க
உன் கண்ணெதிரே நான் நீனாய் கடலில் கலக்கும் போது
கொடூரமாய் கொலை செய்யப்படுவதாக உணர்கிறேன்!
பகிர்ந்து பசியாறுங்கள்! பறித்து பசியாராதீர்கள்!

உணர்வற்ற நான் உணர்வுகொண்டு பேசிவிட்டேன்
உயிரற்ற நான் உயிர் காக்க, நான் உனக்காக பேசிட்டேன்
நீராகிய நான் பேசினால் போதாது, நீர் பேசினால் நனிநன்று.

அன்புற்று அமர்ந்த வழக்கு…

ஒரு பதினைந்து பதினெட்டு வயது இருக்கும் அந்த பையனுக்கு, அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது அறுபது வயது இருக்கும், அவனை கைப்பிடித்து அழைத்து எதிர்பக்கம் வந்துகொண்டிருந்தார். நான் முதலில் தபால் நிலையம் நுழைந்து என் பின் வந்த அவர்களுக்காக கதவை இருத்திவைத்தேன். அந்த பையன் கோணி கோணி நடந்து வந்தான். தலையை ஒருபக்கமாக சாய்த்து பார்கிறான். மூளை வளர்ச்சி இல்லாதவனைப் போல இருந்தான்.

அது என்னவோ தெரியவில்லை நான் தபால் நிலையம் செல்லும்போது எல்லாம் நெடிய வரிசை இருக்கிறது. இந்த டிஜிடல் உலகில் FedEx, DHL என இத்தனை வந்தப்பின்னும் USPSக்கு கூட்டம் வரத்தான் செய்கிறது. பையனை வரிசையில் விட்டுவிட்டு அந்த அம்மா அங்கு இருந்த தபால் உறைகளைத் தேடி சென்றார். அந்தப்பையன் கால்களை நகர்த்தாமல் தன்னுடைய உடலையும் தலையையும் ஆட்டிக்கொண்டு வாயில் விரல்சூப்பிக்கொண்டு நின்றான். வாயோரம் கொஞ்சம் எச்சில் தேங்கி இருந்தது.

என்பின்னால் ஒரு வயதானப் பெரியவர் வந்து சேர்ந்தார். இந்தப்பையன் என்னைக் கடந்து ஆபா..அப்பா என்று ஆடி ஆடி அவரிடம் சென்றான். அந்த விளிச் சொல் எனக்கு ஆர்வத்தை அளித்தது, சற்று தயக்கமாக இருந்தாலும் அவரிடம் கேட்டுவிட்டேன். “அவன் உங்களை அப்பா என்றா அழைத்தான்?” என்றேன், “ஆம்” என்ற அவர், “அவன் அம்மா கொரியன்” என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் மொழியிலும் அப்பா என்ற சொல்லுண்டு என்றேன். அந்தப்பையன் இன்னும் இரண்டுமுறை ஆபா.. அப்பா என்று சொல்லி எங்கோ பார்த்து தலையை ஆட்டி, கைகளை கங்காருவைப்போல வைத்துக்கொண்டு உடலை அசைத்துவிட்டு மீண்டும் அசைந்துகொண்டே விரல்சூப்ப ஆரம்பித்துவிட்டான். எனக்கு அவனைப்பார்க்க பாவமாக இருந்தது, ஆனால் அவன் ஆபா என்று சொன்னது ஒரு நெருக்கத்தை கொடுத்தது. நான் அவரை பார்த்து மீண்டும் புண்ணகைத்தேன். அவர் என்ன நினைத்தாரோ “நீங்கள் ஐரிஷ்காரரா?” என்றார். “இல்லை” என்றேன், அவர் எதைவைத்து இப்படிக்கேட்டார் என்று எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. நான் புன்னகைத்தேன். “நீங்கள் ஐரிஷ்காரரா?” என்றேன், “ஆம்” என்றார்.

அந்தப்பையன் இப்போது “மிலிட்டரி” என்று சொல்லி சலூட் வைத்து ஆசைந்தான். நான் திகைத்தேன்! நானும் அந்த பையனுக்கு சலூட் அடித்தபடி, “நீங்கள் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவரா?” என்றேன், அவர் “ஆம்” என்றார். எப்படி கொரியன் கற்றீர்கள் என்றேன், தான் கொரியாவில் இருந்ததாக கூறினார். அதற்குள் அந்த பெண்மணியும் வந்துவிட்டார். எங்கள் வரிசையும் நகர்ந்தது, இப்போது அவர் கொரியன் பெண்மனியாக தெரிந்தார், இதற்கு முன் அப்படித் தோன்றவில்லை ஆனால் இந்த சம்பாஷனைக்குப்பின் வேறு எப்படியும் நினைக்க தோன்றிவில்லை. அவரும் அனுக்கமாய் புண்ணகைப்பதாய் உணர்ந்தேன்.

என்னுடைய பணியை முடித்து நகர்கையில் திரும்பி புண்ணகை செய்தேன், அந்தப்பையன் நா..நா.. என்று ஆடிக்கொண்டு இருந்தான். எனக்கு அவன் அண்ணா… அண்ணா என்று அழைப்பதுபோலவே இருந்தது. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது, ஐரிஷ்காரரை அமெரிக்க இராணுவ வீரனாக்கி, கொரியப்பெண்னோடு, ஒரு அதிக அக்கறை வேண்டிய குழந்தையை வளர்க்கும் வாழ்வை வாழ வைக்கிறது.

நான் வீடு வரும்வரை அந்த பையனின் முகம் என் கண்ணிலேயே இருந்தது. அந்த கீழண்ட மாடவீதி ராஜாவை, கலெக்டர் PA மகன் நீலமேகத்தை, வசந்தியை என எத்தனையோ பேரை நினைவில் வரவைத்துவிட்டது. குறிப்பாக அவர்களை வளர்த்த அந்த பாட்டியை, அந்த அம்மாவை ஞாபகப்படுத்தியது.

செய்தே ஆகவேண்டியவற்றை, அன்பால் நிறைத்து இயல்பாக வாழ்வை எதிர்கொள்ளும் அவர்கள் வாழும் உலகத்தில் எதற்காகவும் அலுத்துக்கொள்ள எனக்கு அதிகாரம் இல்லை என்று நினைக்கத்தோன்றியது.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

-குரு. 1/29/202

Design a site like this with WordPress.com
Get started