• சில குடும்ப நண்பர்களை குடும்பத்தினருடன் சந்திக்கும்போது, கணவரைப் பற்றியோ, மனைவியைப் பற்றியோ ஏதாவது குறை சொல்லுவார்கள் (பொதுவாக பெண்கள்). “இவரு இப்படித்தான்! இப்படி பண்ணா என்ன பண்றது? நீங்க நினைக்கிற ஆள் இல்லை இவர்!” என விதவிதமாக அவர்களின் ஆதங்கங்களைக் கொட்டுவார்கள். சில நேரங்களில், சம்பந்தப்பட்ட நிகழ்வையும் சொல்வார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்று நேரடியாகக் கேட்காமல் கேட்பார்கள். இதுபோன்ற பேச்சுகளை நான் எப்போதும் தவிர்த்துவிடுவேன். நாம் யார் தீர்ப்பு…

    Continue reading →: நண்பேன்டா
  • எங்கள் அந்திரசன் (Anderson) மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு B பிரிவில் படித்த வயதான மாணவன் தான் பூபதி. ஆறடி உயரம், உரமேறிய கட்டுமஸ்தான தேகம், சுருள் முடி! முரட்டுத்தனமும் அப்பாவி முகமும் இல்லாத வேறு ஒரு முகம். எப்போதும் துறுதுறுவென இருப்பான். படிப்புக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோலத்தான் பள்ளிக்கு வருவான். அவன் எப்படி இந்த அறிவியல் வகுப்பில் (1st Group) சேர்ந்தான் என்பது புரியாத புதிர். எல்லா…

    Continue reading →: பூபதி
  • It was a true divine blessing to learn about this event and watch recording. Seeing the esteemed seers of all three prominent schools of Sanatana Dharma—Advaita, Dvaita, and Vishishtadvaita—come together on one platform is unprecedented for me, and I had never had the opportunity to listen to such a discourse…

    Continue reading →: Dharma Rakshana Mahotsava
  • இன்று ஏனோ சிறுகிராம நினைவுகள் அதிகம் வந்தன. எங்கள் நிலங்களைப் பார்த்துக்கொண்ட ராமசாமி – காசியம்மா தம்பதியர், அவர்களின் பிள்ளைகள் வேல்முருகன், ஏழுமலை, கேசவன், அஞ்சலாட்சியின் முகங்கள் நினைவுக்கு வந்தன. சென்ற முறை சிறுகிராமம் சென்றபோது என் முகத்தை வருடி இரண்டு கரங்களாலும் என் கன்னங்களை அழுத்திக் கொஞ்சிய காசியம்மாவிடம் அந்த அன்பு மொழிகளைப் பெற்றபோது மனம் அத்தனை மகிழ்ந்தது. அந்தக் குரலும் பேசும் பாணியும் ஏனோ கால காலமாகக்கேட்ட…

    Continue reading →: சிறுகிராமம்
  • இவ்வுலகம் மாயை என்பர். உண்மை. ஒவ்வொரு மனதுக்குள்ளும் ஒரு உலகம் உண்டு. மனம் உருவாக்கும் உலகம் ஒருபுறம் இருக்க, நம் புலன்களின் உணர்வுகளைக் கொண்டு (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம்), நம் கடந்த கால நினைவுகளைக் கொண்டு நாம் உணர்ந்திடும் உலகம் தான் நிஜம் என எண்ணுகிறோம். ஒவ்வொருவர் உணரும் உலகம் வெவ்வேறானது. நான் பல வாரங்கள் மருத்துவமனையில் கிடந்தேன். ஆம், கிடந்தேன். பேச முடியாது, கை கால்களை…

    Continue reading →: சச்சிதானந்தம்
  • தெரியாத ஊர். மொழியும் சரியாகத் தெரியாது. அரைகுறை இந்தியில் தான் பேச முடிந்தது. மேகாலாயவில் 7 நாட்கள் பயணம். இணையத்தில் சில இடங்களைப் பார்த்து, நாங்களாகவே ஒரு பயணத் திட்டத்தைத் தயாரித்தோம். நண்பரின் நண்பர் சொன்ன ஒரு டிரைவர்தான் அர்க்கி. வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி எங்களுடைய தேவைகளைச் சொன்னோம். எங்களுடைய அமெரிக்க எண்ணிலிருந்து பேசினோம். ஒரே ஒரு முறைதான் நேரடியாகப் பேச முடிந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆடியோ…

    Continue reading →: மலை வாழ் மக்கள்
  • மனமகிழ் மன்ற நண்பர்களுடனான மற்றுமொரு மன நிறைவான கலந்துரையாடல் நேற்று அமைந்தது. மனித குலம் காலம் காலமாக பல்வேறு மாற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் சந்தித்து வந்திருக்கிறது. நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் சக்கரம், தொழில் புரட்சி, வாகனங்கள், விமானங்கள் என்று ஒவ்வொரு தலைமுறையும் மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வந்திருக்கிறது. ஆனால் இன்று நம் கண் முன் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் AI தொழில்நுட்பம், இதுவரை மனிதன் கண்ட எந்த…

    Continue reading →: AI
  • Bothell Hindu temple (htccwa) has Kids sloga classes, they have a good collection of kids sloka. Here is the syllabus for Basic-2. Guru Ganesha Saraswathi Rama Vishnu Durga Subrahmanya Shiva Krishna Lakshmi Annapoorani Hanuman Hayagreeva Navagraha Aiyappa Santi Mantra Lingastakam Krishnashtakam Waking up Lighting lamp Before Meal Before sleeping Bhajans…

    Continue reading →: Veda Patashala
  • சிறுவயதிலிருந்தே மரங்களுடன் எனக்கு ஒரு நட்பு இருப்பதாகவே உணர்வேன். அரக்கோணம் இரயில்வே நிலையத்தில் இருக்கும் அரசமரங்கள், திருக்கச்சி பிள்ளையார் கோவில் பின்னால் இருக்கும் அரசமரங்கள், பங்காரம்மன் காலனி வீட்டுக்கு அருகில் இருந்த புங்கைமரம், காலையில் தரைமுழுதும் பூக்கள் உதிரும் பாரிஜாத மரம், கட்டை எறும்புகள் ஓடும் கவிதா அக்கா வீட்டு கொய்யா மரம், எங்கள் வீட்டில் அழுக்கு தண்ணீர் ஓடும் கரையில் அடுத்தடுத்து வளர்ந்த வாழைமரங்கள், அஷ்டபுஜம் வீட்டில் இருந்த…

    Continue reading →: மரங்கள்
  • ஏழு நாட்கள் இயற்கையின் மடியில், மழையில் நனைந்து, மேகங்களில் தவழ்ந்து, அருவிகளின் சாரலில், பச்சைப்பசேல் செடி, கொடி, மரங்களின் அருகில், எளிமையான மக்களுடன் இனிமையாக அமைந்த ஒரு பயணம், மேகாலயா சுற்றுலா. பிரம்மாண்டமான அருவிகளைப் பார்ப்பது பரவசமான அனுபவமாக இருந்தது. வழி நெடுகிலும் சின்னச் சின்ன அருவிகள், பார்க்கப் பார்க்க சலிக்காமல் இருந்தது. அருவியின் மேல் நின்று அது கீழே பாய்ந்தோடுவதைப் பார்ப்பது, கீழிருந்து கொட்டும் அருவியைப் பார்ப்பது, பாறைகளின்…

    Continue reading →: மேகாலயா
Design a site like this with WordPress.com
Get started