-
Continue reading →: ஞான சூனியம்
எதிர் வீட்டில் கடுமையான குளிரில் நின்று கொண்டு ஒருவர் ஆசாரி வேலை செய்து கொண்டிருந்தார். மரத்தூணை அளவு எடுத்து அறுத்துக் கொண்டிருந்தார். வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறது. எனக்கும் சில வீட்டு ரிப்பேர் வேலைகள் இருக்கிறது. சரியான ஆள் கிடைக்காமல் வேலைகள் முடியாமல் இருந்ததால் எதிர் வீட்டுக்காரருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். தன்னுடைய வேலை முடிந்ததும் அவரை என் வீட்டுக்கு அனுப்பினார். வாசற்கால் சட்டம் சரி…
-
Continue reading →: மேல்நிலைப்பள்ளி
பள்ளிப் படிப்பில் முதன்மையாக வருவதும் முழு மதிப்பெண் பெறுவதிலும் குழந்தைகளுக்குக் கவனம் இருக்கிறது. சிலர் ஓரிரு மதிப்பெண் குறைந்தாலும் சோர்ந்து விடுகிறார்கள். உண்மையில் பள்ளி என்பது பயிற்சிப் பட்டறை. மூன்று நாள் ப்ராஜெக்ட்க்கு மூன்று நாள் தான் எடுக்கிறோமா? நம்முடைய நேரத்தை நம்மால் சரிவரக் கணித்து வேலை செய்ய முடிகிறதா? நம்முடைய படிக்கும், நினைவில் வைக்கும், தொகுக்கும் முறைகள் எப்படி இருக்கிறது என்ற சுய பரிசோதனையும் தன்னைத்தான் அறியும் முயற்சியும்…
-
Continue reading →: விஷ்வரூபம்
இந்து என்று ஒற்றை வார்த்தைக்குள் எத்தனை பெரிய வாழ்க்கைமுறை இருக்கிறது. அதிகாலையில் எழுந்து, படுக்கை உடுப்புகளை ஒழுங்காய் மடித்து ஒதுக்கி வைத்து (மூதேவி), வீடு பெருக்கி, வாசலில் புதுக் கோலமிட்டு(ஸ்ரீதேவி), தண்ணீரில் குளித்து, தலைவாரி சடைமுடிந்து, நாமம் தரித்து (மங்களகரமாக), சூரிய நமஸ்காரம் செய்து, பிராணாயாமம் (யோகா) செய்து, சந்தியாவந்தனம் செய்து, விளக்கேற்றி, நிர்மால்யாங்களை நீக்கி, இறைவனுக்கு அன்று மலர்ந்த மலர்களைச் சூட்டி, மஞ்சள், குங்குமமிட்டு அலங்காரம் செய்து(தெய்வீகம்), மணியடித்து…
-
Continue reading →: A beautiful day at Issaquah, WA, USA
வாழ்க்கையில் கவிதையாக, அழகாக, மெல்லிய மயிற்தோகை வருடுதல் போலே சில நேரங்கள் அமைந்துவிடுகிறது. 2022ன் நீண்ட வருட இறுதி விடுமுறையில் எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் இசாக்குவா (Issaquah, WA, USA) நூலகம் சென்றேன். ஒரு 30 ஆண்டுகள் பின் தங்கிவிட்ட ஒரு நகரைப்போல இருக்கும் Issaquah downtown Front Street மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருந்ததும் ஒரு காரணம். அந்த பகுதி ஒரு அழகிய கிராமத்தைப்போலக் கொஞ்சம்…
-
Continue reading →: தமிழ் வெறும் கூச்சல்
எதற்கெடுத்தாலும் தமிழ் டா! தமிழன்டா! தமிழனுடைய பாரம்பரிய கலை, அடையாளம் என்றெல்லாம் வெற்றுக் கூச்சல் போட்டுக் கொண்டு இருப்பவர்களைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. சில விஷயங்கள் பெருமையானதாக இருக்கலாம், சில விஷயங்கள் பாரம்பரிய பலத்துடன் இருக்கலாம் ஆனால் எல்லாவற்றுக்கும் எதற்கெடுத்தாலும் இந்த மிகை பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதுவும் தமிழ்ச் சூழலில் தமிழ் மொழியைப் போல வேற மொழி இல்லை எல்லாவற்றையும் விடக் கலாச்சாரத்தில் இந்த இனம் மட்டுமே…
-
Continue reading →: ஹைக்கூ முயற்சிகள்
1 அழுது அடம்பிடித்து வாங்கியதுஅனாவசியமாக போனதுஆசைதீர்ந்த பொம்மை 2 பரிக்க மனமில்லைஇரசித்து நகர்த்தான்குப்பை மேட்டில் ரோஜாபூ 3 சலனமற்றவனாய் அமர்ந்திருந்தான்மேலும் கீழுமாய் சென்றுகொண்டிருந்தான்லிப்ட் ஆபரேட்டர் 4 பேசாத நாயோடுபேசிக்கொண்டிருந்தான்இரவு காவல்காரன் 5 வலித்திருக்குமோதேம்பி தேம்பி அழுதாள்குழந்தையை அடித்த தாய் 6 மலையை காட்டிசட்டென மறைத்ததுஇருளில் மின்னல் 7 வழக்கம் போல் வேலைக்கு சென்றனகாகம், குருவி, புறா, முயல்களெல்லாம்மனிதர்கள் செல்போனால் அழிந்தனர் என பேசியபடி
-
Continue reading →: திண்ணை
யாரும் இல்லா வகுப்பறையில் குட்டி பெண் வகுப்பு எடுத்தாள் பழக் கூடை கொஞ்சம் ஓய்வெடுத்து நீரும் ஊரும் குடித்துச் சென்றது எங்கோ போக வேண்டிய தாத்தா கொஞ்ச நேரம் தூங்கிப் போனார் மொட்டை மாடியில் மழையாம் இன்று ஹிந்தி டியூஷன் இங்காம் மழை நாளில் அகற்ற ஆளின்றி நாய் தன்னுடைய இல்லமாய் அவதானித்தது கார்த்திகையில் விளக்கு அணிவகுப்பு தீபாவளியில் சங்கு சக்கரம் சுழன்றுதிங்கு மகளிர் அணியின் அரட்டை கச்சேரி பாட்டி தாத்தாவின் மாலை நேர ஓய்விடம்…
-
Continue reading →: வெற்றி
துளி துளியாய் அலைந்து சேர்த்த தேன் கூடு!ஒவ்வொரு மலராய் எடுத்துத்தொடுத்த முழு மாலை ஒவ்வொரு இழையாய் சேர்த்து நெய்த வெற்றிக்கொடி ஒவ்வொரு அடியாய்கடந்து வந்து சேர்ந்த மைல்கல்! ஒவ்வொரு சவாலாய்ஒவ்வொன்றையும் வென்று வந்தஉன்னதம் நீ!
-
Continue reading →: அவள்
அவள் பேசி பேசிமுடிவில்லா ஓவியங்களைவரைந்துகொண்டே இருக்கிறார்கள்ஓவியப் பார்வையற்றவர்கள் பட்டம் வழங்குகின்றனர்வாயாடி என்று
-
Continue reading →: தமிழ்த் தூரல்
சித்திரமாய் ஒரு குழந்தைசிரித்தது எனைபார்த்துமந்திரமாய் மனம் குளிர்ந்துமயங்கி அருகில் சென்றுமழலையின் பெயர் கேட்டேன்‘சாரல்’ என்றாள் அந்த தாய்இன்னும் கொஞ்சம் மனம் குளிர்ந்தது!


