Categories
Uncategorized

படித்ததில் பிடித்தது

மொழித்துளி / விகடன் கவிதை

புயலுக்குப் பின் அமைதி
பத்து நாளாயிற்று
குயில் கூவி.

பேரம் பேசி வாங்கிய தருணத்தில்தான்
வாடவே தொடங்கின
பூக்கள்

முள்ளை மையமாக நிற்க விடாமல்
தராசில் துள்ளுகிறது
மீன்

கிளையிலிருந்து வழியும் மழைத்துளி
ஒரு சூரியனையும் சேர்த்து
உதிர்கிறது

தன் இருப்பை அறிய
பறவையின் சிறகடிப்பிற்காகக்
காத்திருக்கிறது வானம்

அமைதியாகிவிட்டது மைதானம்
ஆவலில் கூடைப்பந்து வலை
சற்று நேரத்தில் பௌர்ணமி

நீ
தீக்குச்சி உரசிய அதே கணத்தில்
வானத்தில் மின்னல்

(இவை எதுவும் என் கவிதையன்று)

Categories
Uncategorized

இந்து மதம்

சிரஞ்சிவீயர் எழுவர்

 1. ஆஞ்சநேயர்
 2. அகவத்தாமர்
 3. வியாசர்
 4. விபீஷ்ணர்
 5. மகாபலி
 6. பரசுராமர்
 7. கிருபர்

சப்தரிஷி

 1. கௌதமர்
 2. பரத்வாஜர்
 3. வசிஷ்டர்
 4. ஜமதக்னி
 5. காசிபர்
 6. விசுவாமித்ரர்
 7. அத்ரி

புண்ணிய நதிகள்

 1. கங்கை
 2. யமுனை
 3. கோதாவரி
 4. நர்மதை
 5. சிந்து
 6. சரஸ்வதி
 7. காவிரி

சப்த கன்னிகையர்

 1. அருந்ததி
 2. அகல்யை
 3. சீதை
 4. திரௌபதி
 5. மண்டோதரி
 6. நளாயினி
 7. தாரை

நவரத்தினம்

 1. பவளம் – Coral;
 2. முத்து – Pearl;
 3. கோமேதகம் – Hessonite;
 4. மரகதம் – Emerald;
 5. வைரம் – Diamond;
 6. நீலம் – Blue Sapphire;
 7. புட்பராகம் – Yellow Sapphire; Topaz;
 8. மாணிக்கம் – Ruby;
 9. வைடூரியம் – Lapis Lazuli; Cat’s Eye.
Categories
Uncategorized

ஸ்நோ விழும் காலம்

வானம் பார்த்த
வஸ்துவெல்லாம் வெள்ளுடையில்
தன்னை மறைத்துக்கொண்டது…

சக்கரைத்தான் தூவின்றோ…
அரைத்த உப்பைத்தான் வீசினறோ…
தெர்மாகோலைத்தான் உதிர்த்தனறோ…
கோலமாவை கொட்டித்தான் விட்டனறோ…
வீதி எங்கும் வெண்மைக் கோலம்…

யார் வருகையை வரவேற்க
வீதி எங்கும் பனிப்பஞ்சு அலங்காரம்?
புட்டா இல்லாத கறையில்லா புடவையை
இத்தனை சீக்கிரத்தில் நெய்தது யார்?

நீரில்லாமல் நுறையை மட்டும் செய்யும் கலையை இரகசியமாய் வைத்தது யார்?

இது என்ன புதுமை
இரவு இருட்டில் வெள்ளை வெளிச்சம்

புத்தம் புது சாலைகள்
முதல் முத்தம் தந்து
பாதம் பதிப்பாறோ இல்லை
சக்கரத்தை சுழற்றி தடம் பதிப்பாறோ
புண்ணியம் செய்த பனி

பனி மனிதனாகி அலங்காரம் கொண்டது
பாவம் சில பனி மிதிபட்டு சேறாய் போனது.

குரு
1/12/2020

Categories
Uncategorized

பெண்

வண்ணங்கொண்ட நகங்கள்
வடிவாய் செதுக்கிய புருவங்கள்
சிவந்த இதழ்கள், மலர்ந்த முகம்
மகிழ்வை பரப்பும் சொற்கள்
பெண் வாழ்வில் அழகு சேர்கிறாள்

Jan 2, 2020

Categories
Uncategorized

காணா பாட்டு

code code அடிக்கனும்
deadlineஐ பிடிக்கனும்

oncall வந்துப்புட்ட
நெஞ்சுகுள்ள லப்பு டப்பு
labtop கட்டிக்கனும்
callகுள்ள மாட்டிகனும்

இது சாப்டுவேர் உலகமடா
மட்ட புள்ள குடச்சலுடா

பகலுமில்ல இரவுமில்லை
மாங்கு மாங்கு coding
release release அடி
code code அடிக்கனும்
deadlineஐ பிடிக்கனும்

Categories
Uncategorized

அக்ஷஜ் 2020

எண்ணி எண்ணி சொன்னதையெல்லாம்
எண்ணி எண்ணி வியக்கிறேன்

மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் எண்ணுவதை
எதிலிருந்து கற்றாய் நீ?

விட்டு விட்ட எழுத்து இணைப்புகளை
தொட்டு தொட்டு சேர்த்து கலைஞனாகிறாய்

தலைகீழாய், வல இடமாய் எழுதி,
மலைக்க வைக்கிறாய்.

தமிழை, அழகை வா(ழ)வைக்கிறாய்
மராட்டி, தெலுங்கு, ஆங்கிலத் தொரணச் செய்கிறாய்

மந்திரங்களை மழலை வார்த்தையாய்
அர்சனை செய்து ஓங்கி முடிக்கிறாய்

கண்ணை மூடி எண்ணை எண்ணி
என்னை தேடினாய், தொட்டுவிட்டு
கண்ணை சிமிட்டி மீண்டும் எண்ணினாய்

அப்பா சொல், அம்மா சொல், ஆஜி சொல் என
அணைவரையும் விளையாட்டில் கூட்டு சேர்கிறாய்

பின்னிருந்து முன் எண்ணுவதை
பின்னாளில் எண்ணி மகிழ்வேனா?

ஓயாத உன் ஆட்டத்தை
ஓய்வாய் எண்ணி எண்ணி மகிழ்வேனோ?

அடிக்கடி எங்கள் பெயரை சொல்லி
அள்ளி அள்ளி அன்பை தருகிறாய்

அக்ஷஜ் என்னும் அக்ஷய பாத்திரம்
அன்பு தீரா உறவு நிரந்தரம்

/குரு 1 ஜனவரி 2021

Categories
Uncategorized

பிராங்க்ளின் அருவி

அதிகாலை 5 மணிக்கு தயாராகி, ஆறு மணிக்கு இசாக்குவா Park & Rideல் இருந்து நால்வரும் கிளம்பினோம். அறிமுகங்கள் கடந்து திருமந்திரத்தில் தொடங்கிய பேச்சு, அக்கால சிலம்பம் ஆசிரியர் பற்றி திரும்பியது. Tin தொழிற்சாலையில் தகரங்களோட வேலை செய்பவர், கர்ம சித்தையுடன் இரவு ஒன்பது மணிக்கு வண்டி டயரில் தீமூட்டி தனக்கு வகுப்பு எடுத்தார் என கணேசன் நினைவு கூர்ந்தார். அன்றைய ஆசிரியர்கள் திறமை நிறைந்தவர்களாகவும், முழுமையான பயிற்சி செய்பவர்களாகவும் இருந்து நமக்கு ஓர் முன்மாதிரியாய் இருந்தனர், இன்று அதுபோன்ற ஆசிரியர்கள் இல்லை, இருந்தாலும் ஆர்வமுடன் படிக்கும் மாணவர்கள் இல்லை. இன்று சென்னையில் கலரி கற்க மாணவர்களை தேடும் ஆசிரியரை குறித்து பேசி கார்த்திக் அங்கலாய்த்தார்.

கணேஷ் அவரின் ஊரில் நடக்கும் புலி நடனம் பற்றி சொன்னார். புலி வேடமிட்டு நடனம் ஆடுபவர் கடுமையான பயிற்சி செய்ய வேண்டியிருக்கும், அப்போதுதான் அவர் ஊர் மக்கள் அனைவருடனும் அவர் நின்று ஆட முடியும். சாதாரணமாக காட்சி தரும் நபரும், களத்தில் இறங்கி கொம்பு சுற்றுவதும், குத்தாட்டம் போடுவதும், புலியோடு போட்டி போட்டு நடனம் ஆடுவதும், இயல்பான நிகழ்வாக இருக்கும். இன்று நம்மை சோம்பேரித்தனம் சூழ்ந்துகொண்டு விட்டது. அதுவும் இன்றைய குழந்தைகள் சுகவாசிகளாக மாறிவிட்டனர். தேக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் அறியா குழந்தைகளாக வளர்கிறார்கள் என சொல்லி முடித்தார்.

குரு காஞ்சிபுரத்தில் பொம்மைக்காரத்தெருவில் நடக்கும் வழு மரம் ஏறுதலை நினைவு கூர்ந்தார். ஓங்கி உயர்ந்து நிற்கும் நெடுஞ்சாண் கம்பத்தில் வழுக்கு பொருட்கள் தடவி இருக்க அதன் மேல் மனித கோபுரமாய் ஒருவர் மீது ஒருவர் ஏறி அதன் உச்சியில் உள்ள பரிசை எடுப்பதுதான் விளையட்டு, மக்கள் சுற்றி நிற்க சில அண்டாவில் மஞ்சள் தண்ணீர் நிறைத்து சிலர் அவர்கள் மீது அதை வாரி இறைக்க வழுக்கி விழுந்து, விழுந்து, மீண்டும் மீண்டும் முயற்சித்து அதனை எட்டிப்பிடிக்கையில் கூட்டத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஆனந்தம் பிறக்கும், புது நம்பிக்கை பிறக்கும். இப்படி எத்தனை எத்தனை விளையாட்டுக்கள், வீரத்தின் விளை நிலம் அல்லவா நம் பூமி.

இது தான் பாதை, இதுதான் பயணம்

இதோ வந்தே விட்டது பிராங்ளின் அருவியின் தொடக்கப் பாதை. இருள் சூழ்ந்த இடத்தில் நெடுஞ்சாலையின் அதிவேக வாகன சத்தம், காற்று மெல்ல செல்கின்ற சில் ஒலி, கடுங் குளிர் என புதுதாய் இருந்தது அவ்விடம், இத்தனை அதிகாலையிலும் எங்களுக்கு முன்னால் ஓர் வண்டி நின்றிருந்தது. அருவியின் உட்சாலை வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தார்ச்சாலையில் நடக்கத்தொடங்கினோம். இருமருங்கிலும் ஒதுங்கி குவியலாய் நின்றது பனி, மலைப்பாதையின் பக்கச் சுவர் போல காட்சி தந்தது. அந்தச் சாலையில் எங்களைத் தவிர யாரும் இல்லை. சற்று நடக்க நடக்க வெளிச்சம் எட்டிப்பார்த்தது, குளிர் கொஞ்சம் பழகிப்போனது, அடர்ந்த உடையில் சிலவற்றை தளர்த்த மனம் வந்தது. சற்று நேரம் நடந்ததில் சாலைகள் எங்கும் பனி கொட்டிக்கிடக்கும் இடத்தை அடைந்தோம், அதனை தாண்டி வழி நெடுகிலும் இப்படித்தான் பனி மூடிய பாதைகளாய் இருந்தது. இரண்டு அடி உயர பனியில் நடப்பது புதிய அனுபவமாக இருந்தது.

பனி மூடிய பாதை

அதிகாலைக் காற்று, மெல்லிய வெளிச்சம், வெள்ளைப்பனி மலை ஆனந்த சுகானுபவம்

உறுதியான பனியில் நடப்பது எளிதாக இருந்தது, ஆனால் கரைந்து ஒழுகி நீராய் பரவி உரைந்த தரை வழுக்கியது, காலணிகளில் பிடிப்பு கம்பிகளை (Traction Cleats) ஒட்டிக்கொண்டோம் கூடவே கொண்டுவந்திருந்த தாங்குக் குச்சிகளும் அவசியமானது. இயற்கையும் அதிமுக அமைச்சர்களின் உறவினர்கள் போலும் அடர்த்தியான தெர்மாக்கோல் போர்த்திக் கொண்டிருந்தது. ஆம் அந்த இரண்டு, மூன்று அடி உயர பனிப்படர்வுகள் பார்ப்பதற்கு தெர்மாக்கோல் போலத் தெரிந்தன. வளைந்து நெளிந்து மெல்ல மெல்ல மேல் நோக்கி இருந்தது பாதை, சல சலவென அருகில் ஓடும் நீரோடை, சீரிய வெளிச்சம், தெளிவான பாதை, சின்னச் சின்னப் பாலங்கள், பாலங்கள் நிறைந்த பனி, திட்டுத்திட்டாய் பனிக் கூட்டம், பேச்சுத் துணைக்கு நண்பர்கள் என அழகாக அமைந்தது எங்கள் பயணம்.

பனி சூழ்ந்த நீரோடை

ஓவென்ற ஓசையோடு கண்முன் விரிந்து ஓங்கி நின்றது அழகிய அருவி, ஆக்ரோஷமாய் பாய்ந்து விழும் நீர், பக்கத்திலேயே உறைந்து படர்ந்திருக்கும் நிலைத்துப்போன நீர்த்துளிகள், பட்டுச்சிதறும் நீர்த்துளிகள், கண்கள் ஆனந்தத்தை அள்ளிப்பருகியது. நெஞ்சுக்குள் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. அருவியின் அருகில் சென்று பிரம்மாண்டத்தின் விஸ்வரூப தரிசனம் கண்டோம். அருவியின் நீர்ச்சாரல் அனுபவம் வார்த்தைகளில் வடிக்க இயலாத சுகம். புகைப்படம் எடுப்பதற்காய் கையுரைகளை விலக்கி சில படங்களை எடுத்தோம். அதற்குள் கை உறைந்து விட்டது, அருவியின் அருகில் இருந்த குளிர் எங்களை அங்கிருந்து விறட்டி அனுப்பியது. அதிகாலை எழுந்து இத்தனை தூரம் நடந்ததும் இந்த ஆனந்ததத்தை அள்ளிப்பருகுவதற்கே! பிராங்கிளின் அருவி எங்களுக்கு முழுமையான மகிழ்வளித்து விடைகொடுத்தது.

பிராங்க்ளின் அருவி

வெளிச்சம் நிறைந்திருக்க தெரிந்த பாதையில் விரைந்து நடக்கலானோம், ஜெயமேகனின் குறுநாவல் கதையை குரு சொல்ல கேட்டபடி நடந்தோம், கூடவே கொண்டுவந்திருந்த மூக்குக்கடலை சுண்டல், இனிப்பு, பழங்கள் என சில ஆகாரங்களை உண்டோம். இபோதுதான் சில மக்கள் எதிர்பட ஆரம்பித்தனர். “எத்தனை தூரம்?”, “எப்படி இருக்கிறது அருவி?” என்ற கேள்விகளுக்கு விடையளித்தவண்ணம் விடைபெற்று வந்தோம். அரசியல், சினிமா, ஆன்மீகம் என பலதளங்களின் நிகழ்கால செய்திகளை விவாதித்தபடி முடிந்தது எங்கள் பயணம்.

நால்வர் அணி

மலையேற்றம் நல்ல உடற்பயிற்சி என்பதினும் மனமகிழ்வளிக்கும் செயல் அதனினும் நல்ல நண்பர்களோடான பயணம், மகிழ்வளிக்கும் இனிய அனுபவம்.

நன்றி!

Categories
Uncategorized

Indian Army Stories

It was inspiring to see Indian Army Stories.

Major Kumud Dogra – https://www.youtube.com/watch?v=0Jac1cHE5cs

Lieutenant Garima Yadav – https://www.youtube.com/watch?v=POxHVoZV00o

Lieutenant Swati Mahadik’s https://www.youtube.com/watch?v=CVFf-LRH6wA

Letters From Kargil: Diksha Dwivedi https://www.youtube.com/watch?v=F_TvpMTmmi8

Vikram Batra love story https://www.youtube.com/watch?v=sOAfYdp0qvw

Vijayant Thapar Birthday Kheer by his Mom: https://www.youtube.com/watch?v=oUmeRh6Xz70

Capt Vijayant Thapar – https://www.youtube.com/watch?v=gSEqo5WS08g

Param Vir Paperback – Illustrated, by Ian Cardozo https://www.amazon.in/Param-Vir-Ian-Cardozo/dp/8174362622

Tamilnadu army officer Ilayaraja https://www.youtube.com/watch?v=heu_77fxNdc

Categories
Uncategorized

யாதும் ஐந்தாகி நின்றாய் ஈசா

கயிலைனாதனை போற்றிடும் பஞ்ச புராணம்

 1.தேவாரம்

2.திருவாசகம்

3.திருவிசைப்பா

4.திருப்பல்லாண்டு

5.பெரியபுராணம்

இறைவனை தொழ  நாம் செய்யும்  ஐந்து செயல்கள் :

1.திருநீறு பூசுதல்

2.உருத்ராட்சம் அணிதல்

3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்

4.வில்வ அர்ச்சனை புரிதல்

5.திருமுறை ஓதுதல்

ஈசனின்  பஞ்சாட்சரம் ஐந்து அவை:

நமசிவாய – தூல பஞ்சாட்சரம்

சிவாயநம – சூக்கும பஞ்சாட்சரம்

சிவயசிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம்

சிவசிவ     – காரண பஞ்சாட்சரம்

சி- மகா காரண பஞ்சாட்சரம்

சிறப்புமிக்க சிவமூர்த்தங்கள் ஐந்து

1.பைரவர்                      -வக்கிர மூர்த்தி

2.தட்சிணாமூர்த்தி   -சாந்த மூர்த்தி

3.பிச்சாடனர்               -வசீகர மூர்த்தி

4.நடராசர்                     -ஆனந்த மூர்த்தி

5.சோமாஸ்கந்தர்    – கருணா மூர்த்தி  

சிவபெருமானின் பஞ்சலிங்க திருத்தலங்கள்  ஐந்து

1.முக்திலிங்கம் -கேதாரம்

2.வரலிங்கம்       -நேபாளம்

3.போகலிங்கம்  -சிருங்கேரி

4.ஏகலிங்கம்        -காஞ்சி

5.மோட்சலிங்கம் -சிதம்பரம்

அப்பன் கூத்தாடும் பஞ்சவனதலங்களின் பெயர்கள் :

1.முல்லை வனம்   -திருக்கருகாவூர்

2.பாதிரி வனம்         -அவளிவணல்லூர்

3.வன்னிவனம்        -அரதைபெரும்பாழி

4.பூளை வனம்         -திருஇரும்பூளை

5.வில்வ வனம்       -திருக்கொள்ளம்புதூர்

சுடலைநாதனின் பஞ்ச ஆரண்ய தலங்களின் பெயர்கள் :

1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்

2.மூங்கில் காடு     -திருப்பாசூர்

3.ஈக்காடு                  -திருவேப்பூர்

4.ஆலங்காடு          -திருவாலங்காடு

5.தர்ப்பைக்காடு    -திருவிற்குடி

கூத்தபிரானின் பஞ்ச சபைகள் :

1.திருவாலங்காடு -இரத்தின சபை

2.சிதம்பரம்               -பொன் சபை

3.மதுரை                    -வெள்ளி சபை

4.திருநெல்வேலி   -தாமிர சபை

திருக்குற்றாலம் -சித்திர சபை

எம்பெருமான் ஆடும் ஐந்து தாண்டவங்கள்

1.காளிகா தாண்டவம்

2.சந்தியா தாண்டவம்

3.திரிபுரத் தாண்டவம்

4.ஊர்த்துவ தாண்டவம்

5.ஆனந்த தாண்டவம்

உலகாளும் ஈசனின் முகங்கள் ஐந்து

1.ஈசானம் – மேல் நோக்கி

2.தத்புருடம் -கிழக்கு

3.அகோரம் -தெற்கு

4.வாம தேவம் -வடக்கு

5.சத்யோசாதம் -மேற்கு

சங்கரன் புரியும் ஐந்தொழில்கள் 

1.படைத்தல்

2.காத்தல்

3.அழித்தல்

4.மறைத்தல்

5.அருளல்

சொக்கனின் பஞ்சபூத தலங்கள்

1.நிலம்        – காஞ்சிபுரம்

2.நீர்               -திருவானைக்கா

3.நெருப்பு   -திருவண்ணாமலை

4.காற்று      -திருக்காளத்தி 

5.ஆகாயம் -தில்லை

மாதொரு பாகனுக்கு உகந்த பஞ்ச வில்வம்

1.நொச்சி

2.விளா

3.வில்வம்

4.கிளுவை

5.மாவிலங்கம்

அம்மையப்பனின் நிறங்கள் ஐந்து:

1.ஈசானம் – மேல் நோக்கி – பளிங்கு நிறம்

2.தத்புருடம் -கிழக்கு           – பொன் நிறம்

3.அகோரம் -தெற்கு              – கருமை நிறம்

4.வாம தேவம் -வடக்கு      – சிவப்பு நிறம்

5.சத்யோசாதம் -மேற்கு    – வெண்மை நிறம்

ஆண்டவனுக்கு நாம் செய்யும் பஞ்சோபசாரம்

1.சந்தனமிடல்

2.மலர் தூவி அர்ச்சித்தல்

3.தூபமிடல்

4.தீபமிடல்

5.அமுதூட்டல். சிவாயநம அருணாச்சலம்

நமசிவாய ஐந்தெழுத்து மந்திரம் நம் வாழ்வை மேம்படுத்தும். பாவங்கள் அனைத்தையும் நீக்கி புது வாழ்வு தரும்.

ஓம் நமசிவாய நாதன் தாள் போற்றி போற்றி

Categories
Uncategorized

மனம்

அமெரிக்க முச்சந்திகளின் சாலையில் வாகனங்கள் பச்சை சமிஞ்ஞைக்காய் காத்திருக்கும் இடங்களில் கையில் ஓர் பதாகையுடன் எவரேனும் ஒருவர் நிற்பது இயல்பான காட்சி. கடுங்குளிரில் இதுபோல நிற்பதை பார்க்கும் போது மனம் இறங்கும். “இத்தனை வளர்ந்த இந்நாட்டில் கடுங்குளிரில் ஒருவர் இப்படி சாலையில் பிச்சை எடுப்பது ஏனோ?” என்ற கேள்விக்கு “அரசு இவர்களுக்கு அத்தனை வசதிகளையும் செய்துள்ளது, இவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் இவர்களுக்கு உதவக்கூடாது” என வாதிடுபவர்களும் உண்டு. பெரும்பாலும் தன்னந்தனியாக ஆணோ பொண்ணோ இப்படி சாலை சந்திப்புகளில் நிற்பதை பார்த்திருக்கிறேன். இன்னும் நகர்புற பகுதிகளில் சாலையோரமோ, மேம்பாலத்தின் அடியிலோ கொட்டகைபோட்டு, பெரும் மளிகைக்கடைகளில் உள்ள தள்ளுவண்டிகளில் ஒன்றை கையகப்படுத்தி தன் உடமைகளை வைத்துக்கொண்டு வாழ்பவர்களும் உண்டு. அமெரிக்காவின் ஆடம்பரமான நகரில் இது போன்ற பகுதிகளும் உண்டு என்பதை இங்கு வந்தபிறகே அறிந்தேன்! பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

இவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். இது பற்றி பேஸ்புக்கில் ஆதங்கத்தை பதிவிட்டேன். Seattle Homeless Outreach என்ற அமைப்பு அவர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைக்கிறது என அறிந்தேன். வாரம் ஒரு முறை முகாம் அமைத்து அவர்களுக்கு அண்ணம், தேவையான உதவிகள் வழங்குவதாக அறிந்து, நானும் என் மனைவியும் சென்றோம். நூற்றுக்காணக்கானவர்கள் வரிசையில் வந்து உணவு, உதவிகளை பெற்றுக்கொண்டு இருந்தனர். நாங்கள் சுய அறிமுகம் செய்து நாங்கள் கொண்டு வந்த உணவை வழங்கினோம். பின் ஒருங்கிணைக்கும் பெண்மணி எங்களை பல் துளக்கும் பேஸ்ட், பிரஷ் நிறைந்த கூடையை கொடுத்து அதை கேட்பவர்களுக்கு கொடுக்குமாறு கொடுத்து சென்றார். கூட்டம், உணவு, பரஸ்பர பரிகாசங்கள், பேச்சு, மகிழ்ச்சி என இருந்தது. எங்களுக்குத்தான் அந்த இடத்தில் நின்று பணி புரிய மிகவும் தயக்கமாகவும், கூச்சமாகவும் இருந்தது. ஆஜானுபாகுவாக இருக்கும் வெள்ளை அமெரிக்க பிச்சைகாரர்கள், கரகரத்த குரலில் பேசும் கருப்பினத்தவர்கள் என புதிய மனிதர்களாக தெரிந்தனர். உதவி செய்து கொண்டு இருப்பது ஓர் அச்ச உணர்வையே தந்தது. அவர்களின் மொழி, அவர்களின் எள்ளல் நகைச்சுவைகள் எங்களுக்கு விளங்கவில்லை. உணவு இடத்தின் வாசம் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அச்ச உணர்வை தந்தது. ஒரு வழியாக இரண்டு மணி நேரம் ‘நான் கடவுள்’ படம் பார்ப்பதைப்போல, விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் கழித்தோம். அதன் பின் அந்த வேவையை செய்ய மனம் துணியவில்லை.

எப்போதாவது என்னிடமும் பணமாக காசு இருந்து, என் மனதுக்கு சரியெனப்பட்ட போது கொடுத்திருக்கிறேன். பல நேரங்களில் என் எண்ண ஓட்டங்கள் ஓடி முடிவெடுப்பதற்கு முன் பச்சை விளக்கு என்னை நகர்த்திவிடும். நேற்று அப்னா பஜார் என்ற இந்திய கடை இருக்கும் வணிக வளாகத்தில் ஓர் இந்திய சாயல் பெண் கையில் பதாகையுடன் நின்று கொண்டிருந்தார். இப்படி ஓர் ஆசிய மனிதர் வீதியில் நின்று யாசகம் செய்வதை இங்கு இதுவரை பார்த்ததில்லை. இந்த கொரோனா காலத்தில் குடும்பத்திற்கு வாழ்வாதாரம் இல்லை என்ற ஒரு தகவல் பலகையோடு நின்று இருந்த அவரை கடந்து சென்றேன். அவரை அப்படி ஓர் அட்டை பதாகையுடன் பார்த்தது மனதை என்னவோ செய்தது. தூரலும் குளிரும் இருந்த அந்நாளில், என் தாயை ஒத்த வயது பெண் இப்படி சாலையோரம் நின்றதை பார்த்து பரிதவித்தேன். நான் காரை திருப்பி என்னிடம் இருந்த இருபது டாலர் பணத்தை அவருக்கு கொடுத்தேன். அருகில் வந்து பெற்றுக்கொண்ட அந்த பெண் நகங்களில் அழகான வண்ணப்பூச்சு இருந்ததை கண்ட பின் என் மனம் ஏனோ ‘இவரு பெரிய வல்லளு? கையில இருக்கிறது அள்ளி கொடுக்கிறாரு? அந்த அம்ம சொகுசா நல்லாத்தான் இருக்கு’ என மனக்குரங்கு கேள்வி கேட்க ஆரம்பித்தது. ஏனோ இந்த நிகழ்விலிருந்து மீள எனக்கு பல நிமிடங்கள் ஆனது.இரண்டு வேறுபட்ட உணர்வுகளை ஒரே மனம் தான் வழங்குகிறது. பிச்சைக்காரர்களின் கூட்டத்துக்கு சென்ற அதே மனம் ஒரு மணி நேரத்துக்கு மேல் தயங்கியது. பரிதவித்த மனம் நகங்களின் வண்ணங்களை பார்த்தும் திசைமாறியது.

குரு Dec 5 2020