Categories
Uncategorized

விநாயகர்

எளிய குண்டு கடவுள்

பிள்ளையார் சுழி
அருகம்புல்
எருக்கம் பூ
எலி
குட்டு
தோப்புகரணம்
சதுர் தேங்காய்
ஸ்வஸ்திக் கோலம்

மஞ்சள் பிள்ளையர்
தெரு குத்து பிள்ளையார்
ஆரசமரத்தடி பிள்ளையார்

Categories
Uncategorized

Cle Elum Lake, WA

மலைகள் கரை காக்க நீண்டு விரிந்த ஏரி
பொடி மணல்கள் நீண்ட கரை விரிக்க
அலைகளுக்கு அருகில் மட்டும் கூழாங்கற்கள் தவம்கிடக்க
இமைகளுக்கு சவால்விடும் புழுதிப்புயல் காற்று

எட்டி நின்ற போது தெரியாத
அலையும் அது தொட்டு விடும் தூரத்தில்
அணிவகுத்து வாகணங்களும்
கிட்ட செல்ல செல்ல கண்ணில் விரிந்து
ஆச்சர்யத்தை அள்ளிக்கொடுத்தது

ஓசையோடு ஓயாது அலைகள் கரையை தழுவி அணைக்க
பொடிசும் பெருசுமாய் வித வித கூழங்கற்களாய் கரை
பாத மணலை பறித்துச் செல்லாத அலைகளின்
குளிர்ந்த நீர் சில நிமிடங்களில் பழகிப்போக

ஓர் மோட்டார் படகை ஓர் குடும்பம் ஓட்டி மகிழ்ந்தது
இரண்டு மோட்டார் பைக்கில் காதலர்கள் வலம் வந்தனர்
வண்டியின் அருகில் இருக்கைகள் இட்டு உண்டனர் சிலர்
அருகருகில் வண்டிகளை நிறுத்தி காற்றுக்கு அரண் அமைத்து
கிரில் அடுப்பில் சமைக்க தொடை தெரியும் உடையுடன் அமர்ந்து
உணவையும், கடலையும், காற்றையும் கலகல பேச்சோடு சுவைத்தனர்.
நீச்சல் உடையில் கைகள் கோர்த்து குளிர்ந்த
நீறுக்கு கதகதப்பை வழங்க புறப்பட்டனர் சில கன்னியர்.
அலைகளின் ஓசையை மிஞ்ச கூவி குதூகளித்தனர் குழந்தைகள்
காற்றோடு மோதி, கடலில் மிதந்து விளையாடி மகிழ்ந்தன பறவைகள்
தூக்கி எறிந்த குச்சியை ஏரிக்குள் நீந்தி கவ்வி வந்தது செல்ல நாய்கள்
கிலி இலம் ஏரி எல்லோருக்கும் மகிழ்வை வாரி வழங்கிக்கொண்டிருந்தது

/குரு, ஆகஸ்ட் 29, 2020

Image may contain: ocean, sky, cloud, water, outdoor and nature
Categories
Uncategorized

உழைப்பில் உயர்ந்த இரட்டையர்கள்

அம்மா தூரமான நாட்களில் எல்லாம் ரமணா, பிரபுதான் சமையல்
உழைப்பு உழைப்பு தான் வாழ்க்கை என எல்லாவற்றையும் தாண்டி
எப்போதும் தன்னால் முடிந்ததை உண்மையை சொன்னால் தன் சக்திக்கு மீறியும்
அனைவருக்கும் உதவி செய்து, எல்லா சொந்தங்களையும் அரவணைத்து செல்வதில்
இவர்களுக்கு இணை இவர்களே!

இளவயதில் Onsite திருச்சி வாழ்க்கை
புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை
செய்தித்தாள் விநியோகம்
பத்திரிக்கை விநியோகம்
ஊதுபத்தி வியாபாரம்
சென்ட் வியாபாரம்
இளவயதில் சென்னை purchase
புக் பைன்டிங்
ஊறுகாய் வியாபாரம்
பினாயில் வியாபாரம்
முந்திரி வியாபாரம்
காபித்தூள் வியாபாரம்
பதின்ம வயதில் Onsite Bangalore
Packaging Bags company வேலை
காஞ்சி கொரியர்
காஞ்சி கோலப் போட்டி
பிளம்பர் வேலை
புத்தக விற்பனை
வேஷ்டி கடை
மருந்து கடை
அடகு கடை
புத்தக கடை
Hyundai
கதை முதலாளி
எத்தனை எத்தனை விருதுகள், பரிசுகள்

துவண்டவர்களுக்கு தோள் தந்து
எளியவர்களுக்கு உதவி
உழைப்பில் உயர்ந்து நிற்கும் நீங்கள்
பலர் போற்றி பாராட்டும் நிலையில்
என்றென்றும் நீடித்திருக்க இறைவன் அருள்புரியட்டும்.

Categories
Uncategorized

கலைஞர் / புறநானூறு கவிதை

குடிசைதான்!
ஒரு புறத்தில் கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும்
வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல்
மின்னும்; மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை – புதுமையல்ல

கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் – மறவன் மாளிகை

இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோறோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்ப
பொக்கைவாய் தனைத்திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவிஒருத்தி
ஓடிவந்தான் ஒரு வீரன் ஒரு சேதி பாட்டி என்றான்

ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண்மகனா நீ
தம்பி மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்
பின் பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!
வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி –
உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு.
மடிந்தான் உன் மகன் களத்திலென்றான்

மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை
தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு
களமும் அதுதான்
காயம் மார்பிலா? முதுகிலா? என்றாள்
முதுகி லென்றான்
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்;
வாளை எடுத்தனள்!
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்

கோழைக்குப் பால் கொடுத்தேன்
குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர் போர்வீரனாம்
முன்பொருநாள்
பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா?

அடடா மானம் எங்கே?
குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான்.

இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்
அதுவும் மானம் மானம் என்றே முழங்கும்

மதுவும் சுராவும் உண்டுவாழும் மானமற்ற வம்சமா
ஏடா! மறத்தமிழ்க் குடியிலே மாசு தூவிவிட்டாய்
மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்
தின்றுக் கொழுத்தாய் திமிர்பாய்ந்த தோள்களெங்கே?
தினவெடுக்கவில்லையோ? அந்தோ!
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே
என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்!!
என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.

சென்றங்குச் செருமுனையில் சிதறிக்கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்
அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்!

பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை
மகன் பிறந்த போதும் அவள் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி!
இதைக் கண்டாள் – இதயங் குளிர்ந்தாள்!
எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை
அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே?
வாளிங்கே! அவன் நாக்கெங்கே?
என்று கேட்ட புறநானூற்றுத் தாயினுடைய கவிதை வரிகள்

கிட்டத்தட்ட முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய வரிகள் –
இன்றைக்கு அம்மையார் அவர்கள் அந்த வாளை கையிலே வாங்கி உயரப் பிடித்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.
புறநானுற்றுத்தாய் தன்னுடைய மகனை வீரனாகத்தான் வளர்த்தாள்.

போர்க்களத்திலே கணவன் மாண்டு, தமையனும் மாண்டு, தந்தையும் மாண்டு அனைவரும் மாண்ட பிறகு கூட தன்னுடைய ஒரே மகனுக்கு தலைசீவி பொட்டிட்டு வாளைத் தந்து “சென்றுவா மகனே! செருமுனை நோக்கி” என்று சொன்ன தாய்க்குலம் தமிழ்க் குலம்.

Categories
Uncategorized

கண்ணன் வந்தான்

(ஜிண்டு)

இரண்டு அடி வளர்ந்த
இளவரசன் நடை பயில
ததகா பிதகா வென
தரிகெட்டு ஓட
இல்லத்தின் சந்தும் பொந்தும்
இன்பம் கொண்டு சிரிக்க
உடைந்த பொம்மைகளும்
உயிர் கொண்டு விளையாட
அன்னம் அவன் வாய் பட்டு
அங்கும் இங்கும் சிதற அவன்
உள்ளமெங்கும் நிறைவாய் மகிழ்வை
அள்ளித் தெளித்துச் சென்றான்
/குரு

Categories
Uncategorized

The Enchantment Trip

During summer the most famous activities in Washingtonian are hiking and camping. At first when Karthik suggested about going for a backpacking trip to the mountains, I countered asking him if this herculean task was feasible as a novice and inexperienced hiker. Karthik gave me confidence by replying, “If there is a will there is a way.”  In 2018, we went on a day hike for six miles with an elevation of 4,000 feet to a nearby mountain with a simple backpack. During this experience, I felt like I was a hero in a thriller Hollywood movie.  Staying on the mountain around a thick evergreen forest gave me a sense of pride and satisfaction.

When a group of friends initiated a conversation for a backpacking trip this year, I accepted without knowing the depth of challenges ahead of me. When they mentioned that it was going to be a 25+ miles round trip and 7,080 feet elevation, I was wondering, “why shouldn’t I take up this challenge?” The place we were planning to go as an 8-member team is called The Enchantments and we were lucky to be selected in a lottery for this year. The moment we got the confirmation about the lottery the eight of us (Jai, Karthik, Ganesh, Ramesh, Karthikeyan, Mahesh, Karuna and I included) we started our strategy and planning. Even though my physical fitness was questionable, my mental agility helped me to motivate me to take up this challenge. We started going hiking  every Saturday as a group and during weekdays I was roaming around the streets with just one goal in mind “Success”. Despite no improvement in my physical agility, I was determined to pursue my commitment.

I won’t keep you in suspense to read this full article to know whether I completed this feat or not. I just came back yesterday from the most awaited Enchantment backpacking trip successfully. Follow me and I’ll give you a narration as sweet as my memorable backpacking experience to enchantments.

Let me give a list of items I was carrying in my backpack. Sleeping pad, sleeping bag, a spare set of cloth, a 2-person tent, water bottle with filter, a mini portable stove, a mini isopropanol fuel tank and some fuel for myself to survive the rough terrain and weather. Our backpack weighed close to 33 lbs. We were recommended to wear a quality Hiking boots with thick sole to have a pleasant hiking experience. Couple of veteran backpackers in my group suggested polyester cloths, and from  head to toe. I was glowing with a all new outfit including woolen socks. Now with the new attire and practice for six weeks we were physically and mentally prepared for the ascent.

We started on a Friday afternoon in my SUV and Karuna’s Odyssey to Leavenworth, east of Seattle, to stay in an Inn called Howard Johnson. We planned for an early Saturday morning hike from the Snow lake trail head. We booked 3 large rooms to have a good rest on Friday. We brought traditional Indian dishes like Puliyogare, Idly, Vegetable biriyani, chappathi in addition to one Italian dish pasta. The food  was so delicious as we shared it. It was like a jackpot to Mahesh, the one and only eligible bachelor boy in our group. 😊

The next day morning we started at 4:30 am and reached the trailhead in 20 minutes. The car parking was pretty full and we were lucky to get two spots to park. Our journey started from here with our heavy backpack. We were greeted by a ferocious river near the start of the trailhead. Looking at the roaring and lively river was a refresher and gave us joy and energy to move ahead into the tall and treacherous mountain that we were about to encounter. We started with some photos and selfies.

Within 10 minutes of hiking, I could see the gradual increase in elevation,  which was causing me to breath heavily.  As everyone was ahead, only Ganesh was with me and pushing me to move forward. Initially it was difficult with a heavy backpack, but as time passed, I was getting used to this hardship and my breath was under control. With the marvelous view of the giant mountains, the surrounding trees, mini waterfalls and a distant car parking looked like a matchboxes. It was beautiful and stunning. Unlike the mountains near my hometown, Sammamish, the trees were minimal but much of the landscape was made up of many boulders and thin streaks of waterfalls.

I decided to catch up with my crew before the upcoming sunny weather. I had a hiking pole that aided me to climb up and to get a better balance. Even though my water bottle was within reach, I had to take the help of my supportive companion Ganesh, to get my filter water bottle out of my bag. My fellow hikers brought a CamelBak water pouches to store water and was sucking through a tube.  I switched to surgical knot for my hiking boots. This helped realize that these minuscule details are very important for the enjoyment of trip.

During most of my hike I could see types of mountains, serenely quiet mountains and lively mountains with the sounds of waterfalls and chirping birds.  Wherever there was an elevation I was exhausted and stopped for a while, but Ganesh gave a tip. He told me to just keep on moving slowly to maintain a rhythmic heartbeat. I was questioning myself many times as to whether I would be able to accomplish but mind was determined to reach my goal. Once I could control my mind, I thought my body will toe the line. In my previous hike I had the opportunity to take pictures whenever I wanted, but sadly in this hike my target was more to reach the destination than taking beautiful pictures.  After about 6.2 miles, 3,600 feet elevation and about 4+ hours we reached Nada Lake. This lake was crystal clear, I could see the clear reflection of the surrounding mountains. The water was so cold as if it just melted from the ice.  We washed our hands and face and took a small break to eat our snacks. The gentle cool breeze was so nice that we relaxed and shared energy bars, trail mix. After about 20 minutes we started our ascent to the snow lake.

The path from Nada lake to snow lake was full of huge boulders and it looked like the mountain was detonated to make a path, but the terrain was a natural formation was due to an erosion over millions of years. The rock-climbing exercise was strenuous as they were knee height, but the gentle breeze and surrounding view of Nada lake and the mountains eased the pain. Still I was so exhausted, I was looking to see some place to rest, wearing my goggles, adjusting my hat.  I looked like a student looking for answers to a tough high school math problem. After successful one and half miles of sharp rock-climbing, I asked the folks that were descending on how long to reach the snow lake. They said that it was just coming up, with  easy terrain. Hearing this made me sigh in relief.  Even a small patch of normal path from the rock-climb gave instant happiness and excitement like a child.  We crossed a fast-flowing stream by removing our hiking boots and treaded carefully on the check dam. We realized that it would take another 2 miles to reach our camp site. Even though the path was curvy and winding it was not as difficult as the mountain climb. We were swarmed with mosquitoes and we applied the repellent to avoid the bites, but the mosquitoes seem to have relished and caused destruction to our young hiker Mahesh who forgot to apply the repellent.  Throughout this two miles journey in lower snow lake to upper snow lake camp site, I saw beautiful streams, captivating flowery plants, tall trees, surrounding mountains, chirping birds and much more!  I saw a beautiful single mountain goat with thick fur which ran past us very fast. I am used to see only herd of goats elsewhere, but this was unique to see a single mountain goat. Till we reached our campsite, I saw a slushy, muddy winding path. We were treading carefully like pilgrims going on a long path to Sabarimala in Kerala, India. As we were approaching, we saw other camp areas which had signs showing the path to the toilets. Four of us in our group went a little fast and just the four of us were checking the map and compass to make sure that we were on the right track. The Snow lake was surrounded by mountains and was quiet and in a meditative state. As we were walking under the tree, we could feel the breeze and chillness and it was so pleasant.

 We were welcomed by our friends that already reached and had started putting up the tent. We crossed a man-made log bridge to go to our camp site. We placed our heavy backpack aside and took off our shoes which was so soothing to our legs.  We filled water from the nearby lake and started having our lunch. The Indian roti I carried was like a frisbee now, somehow, I managed to eat with pickle, luckily, I had banana too. As I was hungry after a long hike, Ganesh shared some lemon rice that he had brought in excess. Others brought masala roti and all of us enjoyed relishing our lunch.

After a short break we left our heavy backpack and took some water and snacks and started heading towards another adventure “The Vivian lake”.  The entire path was a rocky climb and the path was not well defined and the only identification was the stack of stones to give us some guidance. One big relief was we were not carrying the heavy backpack and beautiful mini falls and captivating scenic beauty that pushed me forward. After a tough mountain climb for two and half miles finally we reached Vivian Lake. Vivian looked like a virgin land untouched by visitors, surrounded by beautiful snow mountains and crystal-clear water having the beautiful reflection of the surrounding mountains. The only downside was that the wind was very cold. Our group was planning to visit few more lakes beyond Vivian. But I was not sure if I would be able to accompany my group. In addition to that, I was worrying if I would be able to reach the campsite on time. So I decided to go back to tent with Karthikeyan,  while the others wore the shoe spikes and decided to move on with their journey to visit other awesome lakes. Karthikeyan and I walked back slowly to the tent and took some good rest. The others visited Leprechaun lake, Sprite lake and Perfection lake and mentioned how heavenly the places were in description.

We had a small stove and we heated up the hot water and used the readymade mix made from rice flakes (Aval in Tamil) brought by Jai to prepare our dinner. We had to cover our stove from the breeze to keep our stove from turning off. This was a new experience to all of us. In the twilight cold evening the food tasted so delicious. After dinner with all the tiredness we decided to have a good rest in our respective tents. We collected all the food and put it in a bag and hung at the top of a tree to avoid attracting bears. We were told by other hikers about spotting the bears and we were prepared with bear spray in case of emergency. It was drizzling and I was worrying about what would happen if it rained heavier. Luckily, it did not. Despite the sleeping pad, sleeping bag and thermals it was cold. With the exhaustion I eventually fell asleep. Some folks woke up early in the morning and started preparing tea. I woke up with their whispering noises, but because of the tiredness I went back to sleep. Once I woke up, I decided to head to the restroom. The toilet here was unique. They built a nice wooden toilet seat at a remote location. The park and recreation personnel are very meticulous to preserve the environment with this type of novel ideas. No littering is allowed, and every hiker is responsible to clear the waste and the general etiquette being followed by the hikers is the reason for preserving this place as beautiful as always. I could see many men and women hiking this area. I even saw a couple carrying their baby on the back. Some come as a group and even there are some lonely hikers.

We prepared morning breakfast upma brought by Jai. The careful preparation of the upma made it delicious. The refreshing morning sun in the midst of cloud, a good rest, a gentle breeze, reflection of mountains on the lake, roaring noise of the river, the tents like a nomad, eating whatever we had, we all felt as if we were in a different world.  Ganesh was lamenting about his disturbed sleep due Karuna’s snore the night before. Magesh was suffering with Mosquito bites. Did the Mosquitoes targeted the bachelor’s blood?.  Overall, the nostalgia of those few hours in the morning spending time with friends sipping tea and enjoying the breakfast and nature will stay evergreen in my life.

We deflated our sleeping pad, undid our tents, and made sure no trace of human stay at our campsite by cleaning spic and span. We filled our backpack again and started our descent down the hill with the fresh infused energy from the gentle breeze and sumptuous breakfast. On our way we caught the nice view of the lake, streams, rocks. While crossing the path that connects snow lake to Nada lake, we were blocked by a mountain goat in the one-way path. We waited as we did not want to risk shooing goat away. The goat finally gave us a small space to pass with a little apprehension. Just like how a herd of elephants blocking the roadways in India we were blocked by a single hefty goat. Finally, we reached Nada lake. We ate our lunch and prepared refreshing coriander (Dhania) tea and took some nice rest and started our final journey to the trailhead car parking lot. I patted myself and was flabbergasted for completing the first 10 kms.  The last 2 kms was little tiresome though. Karthikeyan expressed his tiredness by mentioning that every meter mattered. Even though I had foot pain, knee pain and weak legs, the nostalgia of the beautiful snow-capped mountains, still lake, roaring rivers and lovely streams and tall trees gave a sense of immense satisfaction. The initial skepticism I had was shattered to pieces with the help and cooperation from my fellow hikers. This memory will stay in my life for ever and will lead to fond memories during the latter part of my life. I would like to quote the great poet and philosopher Kannadhasan verses “when I ask ‘If experiencing is what life, why we need god?’ and god appeared and replied “I am the experience”.

From the bottom of my heart I would like to take this opportunity to Thank Jai, Karthi and Ramesh for following up on the lottery, impeccable planning and constant coordination using conference calls. I also thank Ganesh and the rest of the folks in my team for making this a happy and memorable backpacking trip. I thank all our hiking group and their family for supporting and aiding this wonderful journey a success. I would like to thank Karuna and Lalith for this English translation of my Tamil article.

If you want to know more about the enchantments please visit the following link. www.wta.org/go-hiking/hikes/enchantment-lakes

Categories
Uncategorized

தமிழ்ச்சமூகம் போற்றுவது வீரமே

பட்டிமன்றத்தில் பேச்சின் குறிப்பு

நடுவர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே,
பட்டிமன்றத்தில் கலந்துகொண்டுள்ள சக தோழர்களே,
நிகழ்ச்சியை செம்மையாக ஒருங்கிணைத்துள்ள தமிழ் ஆர்வலர் குழு நண்பர்களே
உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

தலைப்பு தமிழ்ச் சமூகம் அதிகம் கொண்டாடுவது காதலா? வீரமா?

வீரத்தின் விளைநிலம் அல்லவா நம் பூமி
அச்சமில்லை அச்சமில்லை என
பிஞ்சு குரல்களில் பேச ஆரம்பிக்கும் போதோ சொல்லிக்கொடுப்பதில்லையா?

இமையம் வரை சென்று சேர, சோழக்கொடி நாட்டி இமய வரம்பன்னு பெயர் வாங்கிய வரலாற்றை படித்ததில்லையா?
கடல்கடந்து சென்று வெற்றியை சூடி கடாரம் கொண்டான் என்பது வரலாறு
படித்தி வீட்டு தமிழ்ச்சமூகம் காதலை கொண்டாடுகிறது என
சொல்ல வேண்டாம். பொய்களை நம்ப நாங்கள் காதல் வயப்பட்டு இல்லை.

பள்ளி மனப்பாட பகுதியில் இன்பத்துப் பால் இல்லை,

சமையல் காரன் கண்ணங்கள் அல்வாவைப்போல் உள்ளது
கண்கள், கரா சேவைப்போல் உள்ளது.

திருவள்ளுவர்….
பண்டறியேன் கூற்று என்பதனை
இனி அறிந்தேன் பெண் தகையால்
பேர் அமர்க் கூட்டு

போர் செய்யும் இவள் பெரிய கண்களைப் பார்த்ததும்
முதல் முறை சாவு என்ன என்பதை அறிந்து கொண்டேன்
/ குறள் 1083

கடா அக்களிற்றின் மேல் கட்படாம்
மாதர் படாஅ முலைமேல் துகில்

பெண் முலைமேல் இருக்கும் சேலை
மத யானையின் முகபடாம்
/ குறள் 1087

காதல்னு ஒரு படம் வந்தது
மெக்கானிக் பரத், சந்தியா இடையே காதல்
கடைசியில் அவன் பைத்தியமாக அலைவான்
அதுதான் மடலூர்தல். காதலை ஏத்துக்காத பெண் பெயரை சொல்லி
காதலில் தோல்வியுற்றவர்கள் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு
மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு
யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு
பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரையில்
வலம் வரவேண்டும்.

ஞங்ஞங்ஞங்ஞங்ன…

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படா வாறு. / 1140

நான் படும் துன்பங்களைத் தாம் படாத காரணத்தால் அறிவில்லாதவர்கள்
எனக்குத் தெரியும்படி என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய் . 1147

ஊராரின் தூற்றவது எருவாகவும்
அன்னை கடிந்து சொல்லும் சொல்லே நீராகவும் கொண்டு
இந்தக் காமநோய் செழித்து வளர்கின்றது.

பசலை நோய்
தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் நோய்,

அகப்பாடல்கள் அழகு, உணர்வு!

சுக ராகம் சோகம் தானே..
சுக ராகம் சோகம் தானே

காதல் வெற்றி பெற வீரம் வேண்டும்
வீரத்தின் பரிசுதான் காதல்
வீரத்தைப் பார்த்துத்தான் காதல் வந்தது.
வீரத்தைத்தான் தமிழ்ச்சமூகம் கொண்டாடியது

வீர வாஞ்சிநாதன் புதுமாப்பிள்ளை, அடிமை இந்தியாவில் ஒரு பெண்னுக்கு கணவனாக இருப்பதை விட சுதந்திர இந்தியாவில் கல்லரையாக இருப்பேன் என்ற வீரத்தில்தான் இந்த தேசம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கோழையின் மனைவி என்பதை விட வீரனின் விதைவி என்பதில் தான் பெருமை.

முதல் விடுதலை போராட்டம் தொடங்கியது தமிழ்நாட்டில்
இரண்டு முறை பூலித்தேவனை எதிர்த்து தோற்றோடிய வெள்ளைக்காரர்கள் –
ஒண்டிவீரன் வரலாற்றை படித்தால் என்றும் நமக்கு வேகம் பிறக்கும்
1755! பூலித்தேவனின் நெற்கட்டான்சேவலில்

இன்றைக்கும் சமூகத்தில் காதல் பட்டப்பகலில் பட்டாக்கத்திக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு.
நியாத்திற்காக நீதிமண்றங்களில் போராட வேண்டி இருக்கு.

அதை அல்ல தமிழ்ச்சமூகம் கொண்டாடுகிறது
பாரதிதாசனின் வீரத்தாய் என்னும் நாடகக்காப்பியம்

ஆட்சியை பறிகொடுத்த ராணி கிழவராக மாறுவேடம் பூண்டு, மகனை சுதர்மனை ஒழுக்கம் மிக்க வீரனாகச் வளர்க்கிறாள்.
மனஉறுதியுடன் அத்ந அரசாட்சியை மீட்டு எடுக்கிறாள். இந்தப் பெண்களைத்தான் தமிழ்ச்சமூகம் போற்றுகிறது.
கனவன் இழந்த பின்னும் தன்னந்தனியாக நின்று வாழ்க்கையில் போரா குழந்தைகளை கரை சேர்க்கும் எத்தனை எத்தனை தாய்மார்கள்
நம் சமூகத்தில். அவர்களைத்தான் சமூகம் கொண்டாடுகிறது. போற்றி பாராட்டுகிறது.

தமிழ் மொழிக்கே வீரம் உண்டு.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்!

என்பது போன் பாரதிதாசன் மற்றும் பலர் தந்த தமிழ் சொற்கள் தானே சமூகத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்தி இருக்கு.

சாதி கட்டமைப்புகளை உடைப்பதாக இருக்கட்டும்,
பெண் விடுதலையாக இருக்கட்டும்,
அரசின் அடக்கு முறைகளை எதிர்ப்பதாக இருக்கட்டும்
தமிழ் தரும் வீரம் தான் நம்மை எல்லாம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது,.

பாகிஸ்தான் எல்லை சென்றும் வீரத்துடன் மீண்டு வந்த அபிநந்தன் வர்தமான்
ராஞ்சிகாரர் என்றாலும் விசில் போடு என்று தோனியையும்
போக்ரானில் குண்டு வெடித்து உலகுக்கு வீரம் சொன்ன கலாம் என வீரம் நிறைந்தவர்களை காலம் காலமாய் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

Categories
Uncategorized

மலையேற்றம்

வாஷிங்டன் மக்களின் கோடை விடுமுறை செயல்களில் முக்கியமானது கூடாரமிட்டு தங்குவதும், மலையேற்றமும் (Camping & Hiking). கார்த்தி முதல் முறை “கூடாரங்களையும் உணவையும் முதுகில் கட்டிக்கொண்டு மலையில் போய் தங்கலாமா?” என்ற போது “இது எல்லாம் சாகசப்பயணமாக தெரிகிறதே. சாமானியன், என்னால் முடியுமா?” என்று பதில் கேள்வி கேட்டேன். “அத்தனை ஒன்றும் சவாலான காரியமில்லை, முயன்றால் முடியும்.” என்றார். சரி என்று புறப்பட்டு ஒரு முறை அருகில் உள்ள ஓர் மலையில் ஆறு மைல் தொலைவு 4,000 அடி உயரம் நடந்து தங்கி வந்தோம். திகில் படம் போல இருந்தது எனக்கு. மரம், செடிகள் சூழ மலையுச்சியில் தங்கியது சாகச உணர்வை கொடுத்தது. இந்த ஆண்டு ஓர் மலைப்பயணம் செல்ல ஏற்பாடு நடக்கிறது என்று தெரிந்ததும், விவரம் அறியாமல் நானும் வருகிறேன் என்றேன். பின்னர் தான் நான் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதை புரிந்தது. இந்த முறை அப்படிப் போய் இப்படி வரலாம் என்று இல்லாமல், இருபத்தியோரு மைல் பயணம் (33 km), 7,080 அடி உயரம் என்றார். சவால் தான்!, இமயமலையை கூட ஏறுகிறார்கள். “நாம் ஏன் இந்த சவாலை எதிர்கொள்ளக்கூடாது?” என்று தோன்றியது. அதுவும் இந்த மந்திர மலைப்பயணம் (Enchantments) குலுக்கல் (lottery) முறையில் தான் கிடைக்கிறது. குலுக்கலில் நமக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது எட்டு பேர் போகலாம் என்றதும். நான், ஜெய், கார்த்தி, ரமேஷ், மகேஷ், கருணா, கார்த்திகேயன், கணேஷ் என எட்டு பேர் போவதாகத் தீர்மானம் ஆனது. அதிரடியாக அதற்கான ஆயத்தங்கள் தொடங்கியது. என்னுடைய உடற்தகுதி (Fitness) கேள்வியாகவே இருந்தது. சிறிய மலைகளைக் கூட வேகமாக ஏற முடியாமல் இருந்தேன் ஆனால் இதை செய்தாக வேண்டும் என்ற ஓர் உறுதியோடு இருந்தேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மலை ஏறினேன். வார நாட்களில் தெருத்தெருவாக நடந்தேன். என்னதான் உடம்பு முழுதும் எண்ணெய் தடவி உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் என்பது போல என் உடற்தகுதி பெரிதாக மாறிவிடவில்லை ஆனால் இதைச் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் என்னுள் உறுதியாக இருந்தது.
நான் மலையேற்றத்தை வெற்றிகரமாக முடித்தேனா இல்லையா என்று தெரிய இந்த கட்டுரை முழுதும் படிக்க வேண்டும் என்ற கஷ்டத்தை உங்களுக்கு அளிக்கமாட்டேன். நேற்று தான் இந்த மந்திர மலைப் பயணத்தை முடித்து வந்தேன். மலையேறி உச்சியில் கூடாரமிட்டு தங்கி வரும் என் இரண்டாவது தங்கிவரும் மலைப்பயணம் (Backpack camping trip) வெற்றிகரமாக முடிந்தது. வாருங்கள் என்னோடு உங்களை என் எழுத்து வழி மலைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நான் மைல் தூரத்தைப் பார்த்து மலைத்ததைப்போல் நீங்கள் பக்கக்கணக்கை பார்த்து பயந்துவிடாதீர்கள். சிரமம் இல்லாமல் அழைத்துச் செல்கிறேன். பயணம் இனிமையாக இருக்கும்.
முதலில் இந்த முதுகு மூட்டையில் (Backpack) என்ன எல்லாம் சுமந்து சென்றோம் என்று சொல்கிறேன். ஒரு குட்டி மெத்தை (Sleeping Mat): காற்றை ஊதி அதனை மெத்தை ஆக்கிவிடலாம். மூடும் போர்வை (Sleeping bag) நாம் அதற்குள் நுழைந்து நம்மை முழுவதுமாக மூடிக்கொள்ளலாம் (Zip close). ஒரு மாற்று உடை, இரு நாளுக்கான உணவு, கூடாரம் (Tent) போடுவதற்கான துணியும் கம்பியும். இரண்டு பேருக்கு ஒரு கூடாரம் பயன்படுத்தியதால் கூடார துணியை ஒருவரும் அதற்கான கம்பிகளை இன்னொருவரும் எடுத்துக்கொண்டோம். குடி தண்ணீர் பாட்டில், ஒரு குட்டி சமையல் எரி வாயு (IsoPro Fuel cyliner, 200g அளவுதான்) அதற்கான மிகச்சிறிய அடுப்பு என எல்லாம் சேர்ந்து குறைந்தது 15 கிலோ எடை சேர்ந்து விடும். மலையேற்றத்திற்கு என்று காலணிகள் (Hiking Shoe) உண்டு. இது கொஞ்சம் கடுமையான அடிப்பகுதியை (sole) கொண்டதாக இருக்கும். உடைகளும் பருத்தி ஆடை இல்லாமல் பாலியஸ்டர் உடைகளாகப் பார்த்துக்கொண்டோம். இந்த பாலியஸ்டர் (Dry-FIT Polyester) உடைகள் வியர்வையை உடலிலிருந்து நீக்க, ஆவியாக்க உதவும். ஜட்டி, பனியன், சட்டை, பேண்ட் என்று எல்லாம் பாலியஸ்டர் வாங்க வேண்டியதாக இருந்தது. சாக்ஸ் கூட தடியான கம்பளி (woolen) வகை என ஒவ்வொரு விஷயமும் முக்கியமானது. அத்தனையும் எடை குறைவாக இருப்பதாக பார்த்துக்கொண்டோம். கிட்டத்தட்ட புதுமாப்பிள்ளை போல தலை முதல் கால் வரை எல்லாம் புதுசு கண்ணா புதுசு.
இந்த மலைப் பயணம் சற்று தூரம் என்பதால் கடந்த ஆறு வாரங்களாக நாங்கள் பயிற்சி செய்தோம். அந்த பயிற்சி எங்களுக்கு உதவியாக இருந்தது. வெள்ளி மாலையே வீட்டிலிருந்து புறப்பட்டு லெவன் ஒர்த் (Leavenworth) சென்றோம். என்னுடைய காரிலும், கருணா அவர்களின் காரிலுமாக இரண்டு வாகனத்தில் எட்டு பேரும் மாஸ்க் மாட்டிக்கொண்டு புறப்பட்டோம். அந்த ஊரில் ஹாவர்ட் ஜான்சன் விடுதியில் மூன்று அறை முன்பதிவு செய்திருந்தோம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டைப் பகிர்ந்து உண்டோம். இட்லி, வெஜ் பிரியாணி, புளியோதரை என எல்லாரும் பேசி மகிழ்ந்து உண்டோம். எங்களோடு வந்த மணமாகாத வாலிபன் மகேஷ் மகிழ்ச்சியில் திளைத்தான். தன்னால் முடிந்த அளவிற்கு உண்டு மகிழ்ந்தான்.
அதிகாலை 4:15க்கு எழுந்து புறப்பட்டோம். இருபது நிமிட பயணத்தில் மலையடிவாரத்திற்கு (Trial Head) வந்து சேர்ந்தோம். 5:15க்கே அந்த வாகன நிறுத்தம் நிரம்பி இருந்தது. அதிர்ஷ்ட வசமாக எங்கள் இரண்டு வாகனங்களுக்கும் இடம் கிடைத்தது. அனைவரும் அவரவர் பைகளை மாட்டிக்கொண்டு மலை ஏறத் தொடங்கினோம். ஆரம்பத்திலேயே ஆர்ப்பரிக்கும் ஓர் ஆற்றைக் கடந்தோம். அந்த சிறிய ஆறு பேரிரைச்சலுடன், நுரை பொங்க வெள்ளை வெளேர் எனப் பாய்ந்து கொண்டு ஓடியது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஓர் மிக நீண்ட பயணம் முதற்படியில்தான் தொடங்கும் என்பார்கள். அப்படித்தான் இந்த பயணமும், சில புகைப்படங்கள், சுயபடம் (selfie) எனத் தொடர்ந்தோம்.
ஆரம்பத்திலேயே மலைப் பாதை உயர ஆரம்பித்தது. எனக்கு மேல் மூச்சும், கீழ் மூச்சும் வாங்க ஆரம்பித்தது. என்னுடன் வந்தவர்கள் சென்று விட்டார்கள். கணேஷ் என்பவர் மட்டும் எனக்குத் துணையாக இருந்தார். அவரும் ‘வாங்க குரு… வாங்க…’ என என்னை விரட்டினார். முதுகு சுமையுடன் முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு மூச்சிரைக்க ஆரப்பித்தது. மெல்ல மெல்லப் போகப் போக கொஞ்சம் பழக்கமானது. மூச்சும் சற்று கட்டுக்குள் வந்தது. சற்று உயரத்தில் ஓங்கி உயர்ந்த மலைகள். மலையில் தூரத் தூரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மரங்கள். சூரியனின் வெளிச்சத்தில் விஸ்தாரமாய் இருந்த மலைத் தொடர்கள், எங்கோ தூரத்தில் சாலை, தீப்பெட்டி அடிக்கி வைத்தது போல வாகன நிறுத்தம் அந்த அதிகாலை வேலையில் அத்தனையும் அழகாக தெரிந்தது. மற்ற மலைகளைப் போல் இங்கு அத்தனை அடர்த்தியாக மரங்கள் இல்லை. நிறையப் பாறைகள் நிறைந்து இருந்தது. வகிடு எடுத்தது போல நீர் வழிந்தோடிய தடங்கள் இருந்தன. வெய்யில் அதிகமாவதற்குள் நிறையத் தூரத்தை எட்டி விட வேண்டும் என்று தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம்.
இரண்டு கையிலும் இருந்த கைத்தடிகள் (Hiking Stick) சருக்கலின் போதும். உயரங்களை உந்தி ஏறவும் மிகவும் உதவியாக இருந்தது. என்னுடைய குடிநீர் புட்டி பையின் வலதுபுறத்திலேயே இருந்தாலும் என்னால் அதனை எடுத்து மறுபடியும் வைக்க முடியவில்லை. எனவே ஒவ்வொரு முறை நான் நீர் குடிக்க நினைக்கும் போது என்னுடன் வந்த கணேஷின் உதவியை நாட வேண்டி இருந்தது. என்னுடன் வந்த சிலர் ஒட்டகப்பை வகை தண்ணீர் பை (CamelBak water) கொண்டு வந்திருந்தார்கள், தண்ணீரை பையில் நிரப்பி அதிலிருந்து ஓர் குழாய் நீளும், நாம் நடந்துகொண்டே கொஞ்சம் நீரை உறிந்து குடிக்க முடியும். இப்படி சின்ன சின்ன விஷயங்களும் முக்கியமாகி விடுகிறது. நான் கொண்டு வந்திருந்த குடிநீர் புட்டி சுத்திகரிக்கும் திறன் உடையது (LifeStraw Go 2-Stage Filtration Water Bottle) எனவே நான் செல்லும் வழியில் உள்ள அருவிகளில் நீர் நிரப்பிக்கொள்ள முடிந்தது. காலணிகளில் சர்ஜன் நாட் (Surgeon’s knot) என ஒவ்வொரு சின்னச்சின்ன செயலும் கவனத்துடன் செய்ய வேண்டியதாக இருந்தது. நீண்ட பயணம் வெற்றிபெற இது போன்ற சின்னச்சின்ன செயல்களில் நாம் செலுத்தும் அக்கறை முக்கியமாகின்றது என்பதை உணர முடிந்தது.
மலை பல இடங்களில் முழு அமைதியுடன், சலனமே இல்லாமல் வெறுமையுடன் இருந்தது. பல இடங்களில் பேரிரைச்சலுடன் எங்கோ அருவி, ஆறு ஓடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. எப்போதாவது எங்கோ ஒரு பறவையின் ஒலி நிசப்தத்தை களவாடியது.
ஏற்றமாக இருந்த போதெல்லாம் எனக்கு மூச்சு வாங்கியது என்னால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. சில நொடிகள் நின்று நடக்கத் தொடங்கினேன். கணேஷ் இதயத்துடிப்பு (maintain the heart rate) சீராக இருக்க வேண்டும் நடந்து கொண்டே இருங்கள் என என்னை இழுத்துக்கொண்டு இருந்தார். என்னால் “இத்தனை தூர பயணத்தை முடிக்க முடியுமா? நான் இதற்கு உடல் அளவில் தயாரா?” என்ற கேள்வியும் வந்து போனது. இந்த நெடும் பயணத்தை முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் இருந்தது. உடல் என்னை “உன்னால் முடியுமா? ஒரு மைலுக்கே மூச்சு வாங்குகிறதே…” எனச் கேள்வி கேட்டது. இருந்தாலும் நான் ஓர் முடிவோடு நடந்துகொண்டே இருந்தேன். மனதை வெல்வதுதான் கடினம் அதை செய்துவிட்டால் அனைத்தும் கைகூடும்.
என் மற்ற மலைப் பயணங்களில் இயற்கையை இரசித்துப் பல நல்ல படங்களைப் பதிவு செய்த வண்ணம் செல்ல முடிந்தது ஆனால் இம்முறை நெடும் பயணம் என்பதாலும் கணேஷ் எனக்காக காத்திருப்பதாலும் என்னால் இயற்கை இரசனை நிறைந்த படங்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதில் எனக்குச் சற்று மன வருத்தம் தான்.
கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் மலையேற்றத்தில் 3,600 அடி உயரத்தை அடைந்து நாடா (Nada) ஏரியை அடைந்தோம். இந்த ஏரி நீர் கண்ணாடி போல இருந்தது. பக்கத்திலிருந்த மலையின் பிரதிபலிப்பு இதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஏரியின் அடியிலிருந்த தரை தெரியும் அளவிற்கு தண்ணீர் தூய்மையாக இருந்தது.
தண்ணீர் பனிக்கட்டியில் இருந்து சொட்டிய நீர் போல் குளிர்ந்தது. அனைவரும் கைகளையும், முகத்தையும் கழுவிக்கொண்டு சிறு உணவு இடைவேளை எடுத்துக்கொண்டோம். முக்கியமாக எங்கள் பையை இறக்கி வைத்து கை, கால்களை நீட்டி உட்கார முடிந்தது. ஜில் என்று மெல்ல காற்று வீசியது. பாதாம், முந்திரி, திராட்சை, வால்நெட், பெற்றி (berry), பூசணி விதை என எல்லாம் சேர்ந்து உலர் பழங்கள் சில உண்டோம் (Trial Mix). அவை சுவையாகவும் சக்தி கொடுப்பதாகவும் இருந்தது. அதே போல் Energy Bar கொஞ்சம் சாப்பிட்டோம். ஓர் இருபது நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் மலை யேற்றத்தைத் தொடர்ந் தோம். அடுத்து நாம் போக இருப்பது பனி ஏரி (Snow Lake).
இந்தப் பாதை மிகக்கடுமையாக இருந்தது. பாறைகள் வெடி வைத்துத் தகர்த்து இருப்பார்கள் போல மிகப்பெரிய பாறைகள், உடைக்கப்பட்டு வழி செய்திருந்தார்கள். கற்களின் மீது மிக ஜாக்கிரதையாக ஏற வேண்டி இருந்தது. பாதையும் கற்களாய் இருக்க உயரமும் கூடிக்கொண்டே இருக்க ஏறுவதற்கு சவாலாக இருந்தது. ஆனால் இடது பக்கம் மிக அழகாகத் தெரிந்த நாடா ஏரி, எதிர் புறம் தெரிந்த மலை, மெல்ல வீசிய காற்று பயணத்தை இனிதாக்கியது. நாடா ஏரி மிக நீண்டு மலைகளுக்கு இடையில் பச்சை வண்ணம் பிரதிபலிக்க அழகோவியமாய் இருந்தது. இந்தக் கட்டத்தில் என் கால் வலி எடுக்க ஆரம்பித்தது. எங்காவது இடம் பார்த்து உட்கார்ந்து விடலாமா என்று தோன்றியது. நான் பயங்கரமாக மூச்சு வாங்கினேன். தண்ணீர் குடித்தேன், தொப்பி அணிந்து கொண்டேன். கூலிங் கண்ணாடி மாட்டிக்கொண்டேன். என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். தேர்வில் விடை தெரியாத மாணவன் முழிப்பது போல என் உடற்வலிமையின்மைக்கு பல காரணங்களைத் தேடி சரி செய்தேன். எப்படியோ அந்த சவாலான இரண்டு கிலோமீட்டர் தொலைவைக் கடந்தோம். எதிரில் மலையிலிருந்து இறங்கிக் கொண்டு இருப்பவர்களிடம் “இன்னும் எவ்வளவு தூரம்?” என்றேன். இதோ வந்து விட்டது என்றனர். “அப்பாடா!” என்று இருந்தது. கடினங்களை நேராக எதிர்கொண்டு வென்று வருவதைத் விட சிறந்தது ஏதும் இல்லை.
சவாலான பாறைப்பகுதியை தாண்டியதும், சமதளமான பகுதி வந்தது. இத்தனை மலைகள் பாறைகளுக்கு இடையில் சமதள பூமிபோல் ஓர் பகுதி இருந்தது ஆச்சரியம் தான். கொசு அதிகமாக இருந்தது. Bug Replent Spray அடித்துக்கொண்டோம். இதோ வந்துவிட்டது என்ற சொன்ன பனி ஏரி (Snow lake) செல்ல இன்னும் இரண்டு கி.மீ இருக்கும் போலத் தெரிந்தது.
சின்ன சின்ன ஓடைகள், சில அடி அகலமுள்ள நீரோடை அவற்றைக் கடந்து செல்ல குறுக்காக போடப்பட்ட பெரிய மரங்களின் பகுதி, சிறு சிறு மரப் பாலங்கள். சன்னமாக நீர் ஓடி சேறான சில பகுதிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக பூத்திருக்கும் சின்னச் சின்ன பூக்கள் எனக் குட்டிக் குட்டி ஆச்சரியங்கள் வழி எங்கும்,.
பெரிய இரைச்சலுடன் வேகமாக ஓடும் ஆறு, ஓவென ஓசை எழுப்பி அடுக்கடுக்காக விழும் தொடர் அருவிகள், ஓங்கி உயர்ந்த மரங்கள். நூறு மாடி கட்டிடம் போல் ஓங்கி நேராக இருக்கும் மலை எனக் கண்கள் புதுப்புது காட்சிகளைக் கண்டு கொண்டு இருந்தது.
பனி ஏரி மிக அழகாக இருந்தது. நான் பனி இருக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அங்கு பனி (Snow) இல்லை. வெள்ளை நிற மலை ஆட்டைப் பார்த்தோம். மிகக் கம்பீரமாக அடர்ந்த ரோமங்களோடு இருந்தது. எப்போதும் ஆட்டை கூட்டமாகவே பார்த்திருக்கிறேன். ஒற்றை ஆடு மட்டும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அது ஓட்டமாய் ஓடி மறைந்தது.
பனி ஏரியின் அடுத்த முனையில் தான் நாங்கள் கூடாரம் போடுவதற்கான இடம். ஏரியின் அழகை இரசித்தவாறு அந்த சமதள ஒற்றை அடி பாதையில் நடந்தோம். பாதைகளில் சேறு நிறைந்த பகுதிகளில் பெரிய மரக்கட்டைகள் போட்டு இருந்தார்கள். சின்ன ஓடைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. சின்னச் சின்ன பாறைகளை ஏறி இறங்க வேண்டி இருந்தது. அடர் மரங்களும் செடிகளும் இருக்கும் ஓர் காட்டுப்பகுதியில் ஒற்றை அடிப்பாதைதான் எத்தனை அழகு. ஈரம் சேர்ந்த மண், வளைந்து நெளிந்து, ஏறி இறங்கி செல்லும் பாதையில் சரண கோஷம் இல்லா பக்தர்களாய் நடந்து கொண்டே இருந்தோம். சிலர் கூடாரம் போட்டு இருந்தார்கள். கூடாரம் இருக்கும் இடங்கள் எல்லாம் Toilet என்ற ஓர் அம்புக்குறியுடன் பலகையும் இருந்தது.
நான்கு பேர் கொஞ்சம் வேகமாகச் சென்று விட்டார்கள். நாங்கள் நால்வர் மட்டும் நடந்து கொண்டிருந்தோம். சரியான பாதையில் தான் செல்கிறோமா என்ற பயம். அடிக்கடி தெலைப்பேசி செயலியில் பாதையை சரி பார்த்துக்கொண்டோம். நடக்க நடக்கத்தான் தெரிந்தது அந்த ஏரி எத்தனை நீளமானது என்று. சுற்றியும் மலை, நடுவில் ஏரி. எந்த வித அசைவும் இல்லாமல் அமைதியாக தியானத்தில் மூழ்கியது போல இருந்தது ஏரி. எப்போதாவது காற்று அடிக்க சின்னச் சின்ன அலைகள் அடிக்க அதில் வெய்யில் பட்டு மின்னி மின்னி மறைந்தது. நாங்கள் மரங்களுக்கு இடையில் ஒற்றை அடி பாதையில் நடப்பதால் வெய்யில் இல்லை ஆனால் குளிரை உணர முடிந்தது.
‘வாங்க வாங்க…’ குரல் கேட்டது. எங்களுக்கு முன் வந்து கூடாரம் போட்டுக்கொண்டு இருந்தார்கள் நண்பர்கள். பெரும் சத்தத்துடனும் வேகத்துடனும் செல்லும் ஆற்றின் குறுக்கே இருந்த கட்டை பாலத்தைக் கடந்து கூடார பகுதிக்குச் சென்றோம். பைகளை வைத்து விட்டு. அந்த காலணியை கழட்டியதும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. கூடாரப் பகுதியை ஒட்டி இருந்த ஆறும் ஏரியும் இணையும் இடத்தில் நீர் பிடித்து வந்து நாங்கள் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைச் சாப்பிடத் தொடங்கினோம். நான் கொண்டு வந்த சப்பாத்தி காய்ந்து அப்பளம் போல் இருந்தது. அதை ஊறுகாயுடன் சாப்பிட்டேன். நல்ல வேளை வாழைப்பழம் கொண்டு வந்திருந்தேன். நல்ல பசி. கணேஷ் எலுமிச்சை சாதம் கொண்டு வந்திருந்தார். அவர் நிறைய கொண்டு வந்திருந்ததால் எனக்குக் கொஞ்சம் கொடுத்தார். பலர் மசாலா (Stuffed) சப்பாத்தி கொண்டு வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து உணவை சுவைத்தோம்.
சிறிய ஓய்வுக்குப் பின் எங்கள் பெரிய பைகளை கூடாரத்தில் வைத்து விட்டு குடிதண்ணீர் புட்டி, சில நொறுக்குத் தீனிகளை மட்டும் எடுத்துக்கொண்டு விவியன் ஏரிக்கு (Vivian lake) புறப்பட்டோம். வெறும் பாறைகளின் பயணம் இது. சரியான பாதை கூட இல்லை. பாறைகளின் வழியாகப் பாதை கண்டறிய ஐந்தாறு கற்களை அடுக்கி அடையாளம் வைத்திருந்தார்கள். இந்த அடையாளங்களை பயன்படுத்தித்தான் செல்ல வேண்டி இருந்தது. இப்போது முதுகில் பை இல்லை என்பதால் பயணம் எளிதாக இருந்தது ஆனால் பாதை பாறைகளாக இருந்து கடுமையாக காட்டியது. மேலும் ஒவ்வொரு முறையும் இந்த அடையாளங்களைப் பார்த்துப் பார்த்து நகர வேண்டி இருந்ததால் சற்று சிரமமாக இருந்தது.
இரண்டரை கி.மீ தான் என்று சென்ற விவியன் ஏரி மிகக்கடுமையாக இருந்தது. இத்தனை தூரம் நடந்த களைப்பு வேறு. ஒரு வழியாக சில அருவிகளைத் தாண்டி வந்து சேர்ந்தோம். கரையாத பனியுடன் இருந்த விவியன் ஏரி அத்தனை அழகாக இருந்தது. பனி சூழ்ந்த மலை, கரையாத பனிகள் எஞ்சி இருக்க தெளிவாக கண்ணாடி போல் நீர் நிறைந்து கொள்ளை அழகாக இருந்தது. ஆனால் இங்கு கடுமையான குளிர் காற்று அடித்தது. நான் ஓய்ந்து போனேன். இதைத்தாண்டி பனியில் நடந்து இன்னும் மூன்று ஏரிகளையும் பார்ப்பதாகத்தான் ஏற்பாடு ஆனால் என்னால் இதற்கு மேலும் நடக்க முடியும் என்று தெரியவில்லை மேலும் பனி ஏரிக்கு திரும்பி நடக்க வேண்டும் என்ற பயம் வேறு. ஆசை இருந்தாலும் என்னால் முற்றிலுமாக முடியவில்லை. நானும் கார்த்திகேயனும் திரும்புவதாக முடிவு செய்தோம். மற்ற ஆறு பேர் மட்டும் பனியில் நடப்பதற்கான spikes clip (முள்) மற்றும், குளிருக்கான ஆடைகளை அணிந்து அவர்கள் பனியில் நடக்க ஆரம்பித்தார்கள். நானும் கார்த்திகேயனும் கூடாரத்தை நோக்கி நடந்தோம். பொறுமையாக வந்து கூடாரத்தில் ஓய்வு எடுத்தோம்.
சிகரத்தில் பனி பாதையில் பயணித்து Reflection ஏரியையும் பார்த்து திரும்பினர். பனிகள் சூழ்ந்த அந்த ஏரியின் அழகு வார்த்தைகளில் எழுத முடியாது என தோன்றுகிறது. லெப்பர்கான் ஏரி, பூர்ணத்துவ ஏரி, உத்வேக ஏரி (Leprechaun Lake, Perfection Lake, Inspiration Lake) என ஒவ்வொன்ரும் அழகை கண்களிலின் முன் விரித்தது.
எல்லோரும் வந்ததும். அடுப்பை மூட்டி சுடுதண்ணீர் வைத்து அதில் ஜெய் வீட்டில் தயார் செய்த அவல் உப்புமா mixயை போட்டு இரவு உணவு தயார் செய்தோம். அடுப்பு காற்றில் அணையாமல் இருக்கப் படுதா கட்டி அந்த குட்டி அடுப்பில் சமைப்பது புதுமையான அனுபவமாக இருந்தது. அந்த குளிரில் சூடான சாப்பாடும். உப்பு, காரமுமான அந்த உணவு அத்தனை ருசியாக இருந்தது. வயிறார சாப்பாடு, களைப்பு என எல்லாம் சேர நாங்கள் படுக்க ஆயத்தமானோம்.
எங்களிடம் இருந்த உணவை எல்லாம் ஓர் மூட்டையாகக் கட்டி ஒரு கயிற்றில் கட்டி ஓர் மரத்தில் தொங்க வைத்தோம். உணவை கூடாரத்தில் வைத்திருந்தால் கரடி வரும் என்ற பயம் தான். எங்களுக்கு முன் இந்த மலையில் தங்கியவர்கள் சிலர் கரடியைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். நாங்கள் கரடி வந்தால் அதனை எதிர்கொள்ள bear spray வாங்கி வந்திருந்தோம். ஒரு சில மழைத்துளிகள் வீழ்ந்து கொண்டிருந்தது. கொஞ்சம் பயமாக இருந்தது. இந்த இருளில் இந்த குளிரில் மழையை எதிர் கொள்வது மிகக் கடுமையாக இருக்கும். கடவுளை வேண்டிக்கொண்டேன். அவர் கருணையால் மழை வரவில்லை.
மெத்தை, போர்வை, குளிர் உடை (Sleeping mat, Bag, Jacket) என எல்லாம் இருந்தும் உடல் நடுங்கியது. ஆனால் உடல் களைப்பு, அசதியால் தூக்கம் வந்தது. குளிரோடு ஒரு வழியாகத் தூங்கினோம். காலையில் 6 மணிக்கெல்லாம் சிலர் எழுந்து காப்பி போட்டுக் குடித்தனர். அவர்களின் கீச்சுக்குரல் கேட்டது. ஆனால் எனக்கு இன்னும் தூங்க வேண்டும் என இருந்தது. சற்று நேரம் தூங்கி எழுந்தேன். இந்த மலையிலிருந்த இயற்கை Toilet வித்தியாசமாக இருந்தது. மிகப்பெரிய பள்ளத்தின் மேல் ஒரு மர இருக்கை அமைத்திருந்தனர் அதுதான் Toilet. இத்தனை பெரிய காட்டுப்பகுதியில் இப்படி ஒரு Toilet அமைத்து இயற்கையை இந்த நாடு கட்டிக்காக்கிறது.
மேலும் இப்படி கூடாரம் போட்டுத் தங்கும்போது ஒரு சிறு குப்பையை கூட விடக்கூடாது அத்தனையையும் நாம் சுமந்து கீழே இறங்க வேண்டும். இப்படி Hiking வருகிற ஒவ்வொருவரும் இதனை முறையாக கடைபிடிப்பதால் தான் இந்த இயற்கை அழகாகவே உள்ளது. தண்ணீர் கண்ணாடி போல இருக்கிறது. ஆண், பெண் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் மலையேற்றம் வருவது மகிழ்ச்சி. ஒரு வயதுக் குழந்தையை தன் முதுகில் கட்டிக்கொண்டு மலையேற்றம் வந்திருந்த இரண்டு தம்பதியரை வழியில் காண முடிந்தது. தன்னந்தனியாகவோ, இரண்டு மூன்று பேர் சேர்ந்தே இந்த மலையேற்றத்தை ஆர்வமுடன் செய்கிறார்கள். சிலர் இந்த மலையில் பெரிய பாறைகளின் (rock climbing) மீது ஏற வந்திருந்தனர்.
காலையில் ஜெய் தயார் செய்து கொண்டு வந்திருந்த உப்புமா மிக்ஸில் (mix) சுடச் சுட உப்புமா, களைப்பு நீங்கத் தூக்கம், காலை சூரியன் மேகங்களுக்கு இடையில் மெல்லென வருடிச்செல்லும் காற்று. மலைகளை பிரதிப்பலிக்கும் ஏரி. வேகம் கொண்டு ஓடும் ஆறு. நிசப்தம். குறவர்கள் போல் நினைத்த இடத்தில் குடிசை போட்டு, உண்டு மகிழ்வதில்தான் எத்தனை ஆனந்தம். நாங்கள் எல்லோரும் வேறு உலகத்திற்கு வந்து விட்டதாக உணர்ந்தோம். ஒரே கூடாரத்தில் தூங்கிய கணேஷ் கருணாவின் குறட்டையினால் தன் தூக்கம் தொலைந்ததாகப் புலம்பிக்கொண்டு இருந்தார். மகேஷை மட்டும் கொசு கொஞ்சம் அதிகமாகக் கவனித்திருந்தது. மணமாகதவன் என கொசு அறிந்திருக்குமோ? அந்த அதிகாலை வேளையில் சுடான டீ, காபியுடன் நண்பர்கள் அகமகிழ்ந்து இயற்கை அழகை இரசித்து வாழ்ந்த சில மணி நேரங்கள் எப்போதும் நினைவில் இருக்கும் என்று தோன்றுகிறது.
அனைவரும் கீழே இறங்குவதற்குத் தயாரானோம், மெத்தையின் காற்றை இறக்கி, எங்கள் கூடாரங்களைக் கழற்றி இங்கு மனிதர்கள் இருந்து சென்றார்கள் என்ற தடையம் இல்லாமல் எங்கள் பைகளை நிரப்பி நடக்கத் தயார் ஆனோம். உப்புமாவின் சக்தியில் தூக்கம் தந்த புத்துணர்வில் காலைப் பொழுதின் இரம்யத்தில் உற்சாகத்துடன் இறங்கினோம். ஏரிகளைக் கடந்து, ஆற்றைக் கடந்து, அருவிகளைக் கடந்து. ஓடைகளைத் தாண்டி, பாறைகளின் மீதும், கட்டை பாலங்களின் மீதும் நடந்து வந்து அந்த கடுமையான பனி ஏரி, நாடா ஏரி இடையேயான பாறைப்பகுதியை கடந்து வருகையில் ஓர் ஆடு எங்களுக்கு தடை உத்தரவு போட்டது. அந்த ஒற்றையடிப் பாதையில் நின்று கொண்டு எங்கள் வழியை தடுத்தது. செங்குத்தான அந்த பாதையில் விலகி நடக்கவும் அத்தனை இடமில்லை. முட்டினாலோ துரத்தினாலோ ஓடவும் வழியில்லை. கொஞ்சம் காத்திருப்புக்குப் பின் எங்களுக்கு வழிவிட்டு கொஞ்சம் ஒதுங்கியது ஆடு பின் நாங்கள் அதனை ஓர் பயத்துடன் கடந்து வந்தோம். ஒற்றை ஆட்டிடம் தான் எங்களுக்கு எத்தனை பயம். யானைக் கூட்டத்துக்கு சாலையில் வாகணங்கள் நிற்பதைப்போல் ஒற்றை ஆட்டுக்கு நாங்கள் நின்றது வேடிக்கையாக இருந்தது. ஒரு வழியாக நாடா ஏரிக்கு வந்து. எங்களின் மதிய உணவை உண்டு. அடுப்பை மூட்டி சுவையாகக் கொத்தமல்லி காபியை போட்டு அனைவரும் குடித்து ஓர் நீண்ட ஓய்வுக்குப் பின் எங்கள் பயணத்தின் இறுதிப் பகுதியைத் தொடர்ந்தோம்.
இந்த 10 கி.மீ பயணம் வந்து கொண்டே இருந்தது. இத்தனை தூரத்தையா கடந்து வந்தோம் என்ற மலைப்பை ஏற்படுத்தியது. கடைசி இரண்டு கி.மீ மிக சோர்வாக இருந்தது. கார்த்திகேயன் இனி ஒவ்வொரு மீட்டரும் மேட்டர்ஸ் என ரைமிங்கில் தன் சோர்வை வெளிப்படுத்தினார். பாதங்கள் ஓய்ந்து போயின, முட்டி வலி எடுக்கத் தொடங்கியது கால்கள் பலம் இழந்தது. ஆனால் அந்த ஏரி. பனி மூடிய மலை உச்சி. அசைவற்ற ஏரி நீரில் பிரதிபலித்த மலை. அருவிகளின் சத்தம். ஆற்றின் பேரிரைச்சல் நெஞ்சம் எல்லாம் நிரம்பி இருந்தது. பயணத்தை முடித்தபோது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. என்னால் முடியுமா என நினைத்த பயணம் நண்பர் களின் உதவியால் ஓர் கூட்டு முயற்சியின் சக்தியால் சாத்தியம் ஆனது. மனதுக்குப் புத்துணர்ச்சியையும், மிகப்பெரிய தன்னம்பிக்கையையும், வாழ் நாள் முழுதும் நினைத்துப் பார்த்து மகிழ்வதற்கான அழகான காட்சிகளும் நெஞ்சம் நிறைந்த நினைவுகளையும் இந்த பயணம் வழங்கியது. கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் நினைவில் வருகிறது. ‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி ‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

இந்த பயணத்தின் படங்களின் தொகுப்பு இங்கே. https://photos.app.goo.gl/uufkPytY1WTjZtDU8

இந்த Campingக்கான அனுமதியை lotteryயில் வென்று, அனைவரையும் ஒருங்கிணைத்து. பல ஒருங்கிணைப்பு concall வழியாக ஒவ்வொன்றையும் உறுதி செய்த கார்த்தி, ரமேஷ் ஜெய். மற்றும் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கி இந்த அனுபவம் அனைவருக்கும் மனத்திருப்தி அளிப்பதாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் மாற்றிய எட்டு பேருக்கும் அவர்களுக்கு உதவிய குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்தக்கட்டுரை பிழையின்றி அமைய உதவிய காவேரி, ஆனந்தி அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்த Enchantments பற்றி மேலும் தெரிந்து கொள்ள
https://www.wta.org/go-hiking/hikes/enchantment-lakes

Categories
Uncategorized

அந்த ஒரு நாள், சில மணி நேரங்கள்!

அருஞ்சொல் பொருள் சொல் என்றதும்
எனக்கு தெரியும் என்று மகிழ்ந்தெழுதினேன்
கோடிட்ட இடங்களை நிரப்புக
பொருத்துக என்றே விரும்பி தொடர்ந்தேன்

எவையேனும் ஐந்து வினாவுக்கு விடை சொல்ல
இருவரிகளில் பதிலளித்தேன்
சிறு குறிப்பு வரைக…
சில பக்க கட்டுரை எழுத
இலக்கண குறிப்பு காண்க என
தேர்வுக்கான மொழிகளில்
திரு திருவென முழித்துக்கொண்டு
கேள்விகளில் உலகில் தொலைந்து போனேன்.

ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண்
ஐந்து மதிப்பெண் என
வினாக்களோடு விலைபேசினேன்,

நான் குனிந்து எழுத எழுத என்
கண்ணாடி பேனாவில் மை தீர்ந்தது
எழுத எழுத வெள்ளைக் காகிதங்கள்
பாஞ்சாலி சேலை போல் வந்தது

விட்டத்தைப் பார்த்த ஓர் நண்பன்
சீண்டிப்பார்த்தான் இன்னொருவன்
வார்த்தையின்றி ஒலிகொடுத்தான் பின்னவன்
மௌனமாய் வளைய வந்த ஆசிரியர்
அமைதியை குசலம் விசாரித்த காகம்
தாள்களை எல்லாம் தொகுத்து
மூலையில் துளையிட்டு வெள்ளை நூல் கோர்த்து
நெடுக்காக மடித்து பெயர் எழுதி வெளியேறினேன்

எக்கச்சக்க விசாரிப்புகள் வெளியில்
எக்காளத்துடன் விவாதித்து விடைபெற்று
நிம்மதியில் ஓடி விளையாடினேன்

அந்த ஒரு நாள், சில மணி நேரங்கள்
எல்லாம் வெறும் கனவாய் போக.. தேர்வு ரத்து
என் காத்திருப்பை காணல் நீராக்கிய
கொரானாவை என்னவென்று சொல்வேன்.

/குரு 6.25.2020

Categories
Uncategorized

சியாட்டில் பட்டிமன்றம்

https://www.facebook.com/events/671777536955362/permalink/678624086270707/

சியாட்டிலில் நடந்த பட்மன்றத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்வது சாபமே என்ற அணியில் பேசிய பேச்சின் குறிப்புகள்

எது வரம் எது சாபம்? நாம கேட்டு, கேட்டு வாங்கினா வரம்? நம்ம மேல திடீர்ன்னு தினிச்சா சாபம்?

கௌதமரின் கோபத்தால அகலிகை கல்லானது மாதிரி. திடீர்ன்னு எல்லாரும் WFHன் ஆனதனால் இது சாபமே என்பது எங்கள் அணியின் வாதம்.

எப்படி எல்லாம் இருந்தோம், எவ்ளோ பெரிய Building
என்னமா ஒரு Conference Room, color colorஆ Furnitures
பட்டன தட்டினா Starbugs, Seattle Coffee
ஒரு பத்து வகை டீ.
சிரிச்சி பேச கூடி பழக எவ்ளோ பேரு.. வித விதமான Water Cooler talks.
நிறைய பேரோட பழகி எவ்ளோ சந்தோஷமா இருந்தோம்
இப்ப எல்லாத்தையும் zoom outபண்ணி
வீட்டுக்குள்ள ஒரு லேப்டாப் ஸ்கிரீனுகுள்ள எல்லாம் அட்ங்கிடுச்சே.
3Dயா இருந்த நம்ம உலகம் 2Dஆ மாரிச்சி பாருங்க அது தான் சாபம்.

குயில புடிச்சி கூண்டில் அடிச்ச கதையா ஆயிடிச்சி.

பாத்து பாத்து பேசினது போயி விட்டத்ப் பாத்துகிட்டு profile picturesயோடு பேச வேண்டியுருக்கு
அந்த விடியோவையாவது on பண்றாங்களா? எப்பவும் ஆடியோ ஒன்லி அதுலையும் பாதி நேரம் மியூட்
Can you come again? Could you please repeat? I could not able to hear you now?
இப்படித்தான் அநியாயத்துக்கு Focus இல்லாம போயிட்டு இருக்கு நம்ம மீட்டிங் எல்லாம்.

முக்கியமான பிரச்சனை வீட்டுக்கும் Officeக்கும் இருந்த Boundary இல்லாம போயிடிச்சி.
Office வேலைய Officeல பாத்தமா, வீட்டு வேலைய வீட்ல பாத்தமான்னு ஒரு clarity இருந்தது.
கொஞ்சம் வீட்டு வேல கொஞ்சம் office வேலைன்னு மாத்தி மாத்தி செஞ்சி எப்பவும் வேலை செய்துகிட்டே இருக்கிறாமாதிரி இருக்கு.
இப்போ பல்லு தேச்சிக்கிட்டே Status update
பாத்திரம் தேச்சிக்கிட்டே All hands meetingன்
வீட்டு வேலை Office வேலைன்னு மாறி மாறி செய்ய வேண்டி இருக்கு.

மூனு விசில் வந்தா குக்கர off பண்ற முக்கிய கடமைய பொருப்பா செய்துகிட்டு இருக்கிற கணவன் நான்
அன்னைக்கும் அந்த வேலை சரியா செச்சேன் ஆனா எனக்கு செமய திட்டு விழுந்தது.
Meetingல யாருவீட்டுல இருந்து வந்த விசில் சத்தத்தையும் சேத்து கணக்கு பண்ணி இரண்டு விசில்லயே Offபண்ணிட்டேன்
SR Ticket number கொடுக்க சொன்ன ஈரஞ்சி முத்தாயன்னு சொல்றான். இப்படி ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.
இதுவாவது பரவா இல்லை, ஒருத்தன் மீட்ங்ல அழறான் என்னடான்ன, வெங்காயம் உறிச்சிகிட்டு இருக்கான்.

இதுக்கு எல்லாம் என்ன தான் தீர்வுன்னு கேட்டா, ஆபிஸ் போகரது மாதிரியே ஒரு ரூமுக்குள்ள போயிடுங்கன்னு சொல்றாங்க
ஒரு Fixed hour work பண்ணுங்கன்னு சொல்றாங்க. சரின்ன அதையும் செஞ்சேன்.
வீட்டுல இருக்குற ஒரு Standing Desk யாருக்குன்னு ஒரே சண்ட, வழக்கம் போல ஆண்களுக்கு வாய்க்கும் பழய டேபில் எனக்கு வந்து செந்தது.
கழுத்து வலி, முதுகு வலி இப்ப காது கூட கொஞ்சம் கொய்யினுது.
பக்கதுல திரும்பி பேச வேண்டியதுக் எல்லாம் message பண்னிட்டு wait பண்ண வேண்டி இருக்கு.
மீட்டிங் கோட்டு பேச வேண்டி இருக்கு. இப்படி மீட்டிங் மீட்ங்கா போட்டு 6 மணிக்கு மேல மாங்கு மாங்குன்னு வேல பண்ண வேண்டி இருக்கு.

No excercise
Work pressure

முராரி மாதிரி சிலருக்குத்தான் கம்பெனி வாய்க்கும்.
Work from home. முராரிக்கு Work for home.

Parents இங்கு வந்து செல்வது போல officeல் வேலை செய்வது
இந்தியாவில் இருக்கம் Parents கூட video கால் பண்றது தான் WFH.

Solid work hour.
Matching the office productivy at home requires lot more efforts.

எந்திரிக்கும் போதே Status update meeting
பாத்திரம் தேச்சி
End of the day he is your husband?
not only at the end of the day, throughout the day he is. that’s my problem.