-
Continue reading →: ஏப்ரல் 1
ஏய் பாம்பு பாரு! ஏமாந்தியா! ஏப்ரல் பூல் (fool) எனச் சிறுவர்களாக விளையாடிய ஞாபகம்! Google நிறுவனம் ஒருவருடம் Toilet Internet Service Provider (TiSP) என முழ கட்டுரையை மிகுந்த விவரங்களுடன் வெளியிட்டு ஏப்ரல் பூல் என்றது. ஏனோ, எங்கள் பள்ளி நாட்களில் ஏப்ரல் பூல் என ஏமார்ந்தவர்களின் சட்டை மீது ஒருவர் இங்க் அடிப்பது வாடிக்கை. வெள்ளை சட்டையில் இங்க் கரைபடாமல் தப்பிப்பது என்பது பெரும்பாடு! ஒரு…
-
Continue reading →: சியாட்டில் இலக்கிய மாலை
Link to this post tinyurl.com/seattleim கூடி வாழ்ந்தால் கோடி நன்மை! ஆம், இலக்கியம் படிப்பதிலும் இது முற்றிலும் உண்மை. நல்ல நண்பர்களின் துணையுடன் நிறைய வாசிக்க, வாசித்ததை பற்றிப் பேச நல்ல வாய்ப்பு. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு மாலை 8 மணிக்கு zoom வழியில் சந்தித்து உரையாடுகிறோம். ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளரின் இரண்டு சிறுகதைகள் விவாதிக்கப்படுகின்றன. கூட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் கதைகளை முன்னதாக படித்து, அதில் தன்னைக் கவர்ந்த பகுதிகளை, தன்னுடைய…
-
Continue reading →: அவள்
வாட்ஸ்அப்பில் வந்த கவிதை வணக்கம்! அவள் கண்டியோ, கட்டனோ, களுத்துறை பக்கமோ,இல்லை. குளிர் வீசும் குருநாகல் பக்கமோஉற்ற இடம் தெரியாது! ஊர் பேரும் தெரியாது!சத்தியமாக அவள் சரித்திரமே தெரியாது. ஆனால் அவள் இலங்கையின் மத்திம தேசத்து மகாராணி என அறிவேன்அந்த மலையகத்தாள் மீது கொண்ட மகத்தான காதலினைஎன் மனைவியிடம் கூட இன்னும் மறக்கவில்லை ஒளிக்கவில்லைமறைப்பதற்கு ஒன்றுமில்லைமனம் விட்டுச் சொல்லிவிடுகிறேன்நெடுநாளாய் பழக்கம்மன நிறைவான பழக்கம்நீங்கள் நினைப்பது போல ஒன்றுமில்லைகொஞ்சம் நேர்மையான பழக்கம்.…
-
Continue reading →: Layoff times
Layoffs are tough time. I know personally few friends impacted. I know how hard it is to handle. While we all see how we can help each other. This also the time there we so much happening in LinkedIn in the name of extending help. The below two messages I…
-
Continue reading →: யாரோ?
ருச்சி உணவகத்தில் பணத்தைக்கொடுத்துவிட்டு, உணவு தயார் ஆவதற்காகக் காத்திருந்தேன். அப்போதுதான் அந்த நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதன் உள்ளே நுழைந்தார். மிகுந்த களைப்பில் இருந்தவரைப்போல இருந்தது. முகத்தைப்பார்த்தாளே சொல்லிவிடலாம் இவர் தமிழர் என்று. திருநெல்வேலிகளை! போலீஸ் பூட் போல ஒரு பழங்காலத்துத் தடிமனான பூட் அணிந்திருந்தார். Jake-in-the-box சட்டை அணிந்திருந்தார். அசதியாய் வந்து அமர்ந்தார். தன்னுடைய தொலைப்பேசியை எடுத்து வீட்டிற்கு அழைத்தார். ஸ்பீகரில் தான் பேசினார். வீட்டு அம்மா…
-
Continue reading →: ரிச்மண்ட் முருகர்
https://richmondmurugantemple.org காசி விசுவநாதர்,விநாயகர்,முருகர்தனித்தனி சன்னதி!வள்ளி தெய்வானை சமேதஉற்சவ விக்ரகம்!நவக்கிரகம் தனிப் பகுதியாய்! நற்றமிழ் ஓதி!நீர், பன்னீர், இளநீர்திருநீறு, சந்தனம் அபிஷேகம்! அடுக்கு விளக்கின்அத்தனை திரியிலும்ஜோதி ஒளிர,தாள கதியில் மணி ஒலி சேரசிவன் சிந்தனையில் நிறைகிறார்! தெய்வ வாக்கும், ஓவியங்களுமாய்சமதளக் கூரை!டைல்ஸ் பதிந்த சுவர்கள்!நந்தி, பலி பீடம் எனஅச்சு அசலாய் தமிழ் கோவில்! ஆரவாரம் இன்றி, பக்தியில் தோய்ந்துநிஷ்டையுடன் அர்ச்சகர்!அடுத்தடுத்த அபிஷேகம்,ஆரத்தி கடந்துதிவ்ய அலங்காரம்!திரை விலகித் தரிசிக்கையில்தெய்வீகம் உடல் முழுதும் பரவும்…
-
Continue reading →: திர்லோக்புரி
சாருநிவேதிதாவின் திர்லோக்புரி கதைக்கலந்துரையாடல்செய்தி நிகழ்வை சொல்லும், இலக்கியம் மனித மனதின் பாதிப்பை சொல்லும். குழந்தைக்குமான தேசப்பற்று, தியாகங்கள், தீவிரவாதம் என கதை பல தளங்களை தொடுகிறது உயிர்கள் துச்சமாய் பெட்ரோல் மிச்சமே உச்சமாகும் வரிகளின் மூலம் நிகழ்வின் தீவிரத்தை கதை முழுமையாக காட்சிப்படுத்தியிருக்கிறது. நல்லவர் யாவரும் ஒதுங்கிக்கொண்டால் நரிகளின் ராஜ்ஜியம் தொடங்கி விடும் என்பதாக இருக்கிறது கதையின் சூழல். இக்கட்டான நேரங்களிலேயே தலைவனின் தேவை இருக்கிறது. மனிதன் தெய்வமாவதும், மிருகமாவதும்…
-
Continue reading →: திருமணம்
திருமணம் என்பது சிறை! இவனுக்கு இவள், இவளுக்கு இவன் என எழுதப்பட்டுவிட்டது. முடிச்சாகிப் போனது. ‘கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது எல்லாம் பழங்கதை. படாதபாடு பட்டுக்கொண்டு, கொடுமைகளுக்கு ஆளாகி, வாழ்ந்த பெண்களின் வாழ்வை நேரடியாகவே கண்ட தலைமுறை நாம். திருமணம் என்பது சிறையல்ல. அது நமக்கு நாமே வைத்துக்கொண்ட வேலி என உணர்ந்து, அதைத் தேவையெனில் தூக்கி எறியும் தைரியம் இன்று வளர்ந்துவிட்டது. இது ஆரோக்கியமான முன்னேற்றம். ஆனால்,…
-
Continue reading →: ஞான சூனியம்
எதிர் வீட்டில் கடுமையான குளிரில் நின்று கொண்டு ஒருவர் ஆசாரி வேலை செய்து கொண்டிருந்தார். மரத்தூணை அளவு எடுத்து அறுத்துக் கொண்டிருந்தார். வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறது. எனக்கும் சில வீட்டு ரிப்பேர் வேலைகள் இருக்கிறது. சரியான ஆள் கிடைக்காமல் வேலைகள் முடியாமல் இருந்ததால் எதிர் வீட்டுக்காரருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். தன்னுடைய வேலை முடிந்ததும் அவரை என் வீட்டுக்கு அனுப்பினார். வாசற்கால் சட்டம் சரி…
-
Continue reading →: மேல்நிலைப்பள்ளி
பள்ளிப் படிப்பில் முதன்மையாக வருவதும் முழு மதிப்பெண் பெறுவதிலும் குழந்தைகளுக்குக் கவனம் இருக்கிறது. சிலர் ஓரிரு மதிப்பெண் குறைந்தாலும் சோர்ந்து விடுகிறார்கள். உண்மையில் பள்ளி என்பது பயிற்சிப் பட்டறை. மூன்று நாள் ப்ராஜெக்ட்க்கு மூன்று நாள் தான் எடுக்கிறோமா? நம்முடைய நேரத்தை நம்மால் சரிவரக் கணித்து வேலை செய்ய முடிகிறதா? நம்முடைய படிக்கும், நினைவில் வைக்கும், தொகுக்கும் முறைகள் எப்படி இருக்கிறது என்ற சுய பரிசோதனையும் தன்னைத்தான் அறியும் முயற்சியும்…


