-
Continue reading →: மனம் மகிழும் பரிசு
இன்று என் மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து வழிந்து கொண்டிருக்கிறது. எப்படி இதை வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் குதூகலிக்கிறது மனம். எதிர்பாராத அன்பு, மொழி தெரியாத ஒருவரிடம் இருந்து வரும்போது எப்படி மகிழ்ச்சி பொங்காமல் இருக்கும். சரி முழு கதையையும் சொல்லிவிடுகிறேன். எங்கள் அலுவலகத்தில் துப்புரவு செய்வது பாட்டி வயதுள்ள ஓர் சீனப் பெண்மணி. அவர் எப்போதும் அந்தத் துப்புரவு வண்டியில் சீன இசையைக் கேட்டபடி சுத்தம் செய்வார். பொதுவாகச்…
-
Continue reading →: மதிப்பெண்னே உன் மதிப்பென்ன?
பள்ளி, கல்லூரி புத்தகக் கடையை கடந்த 20 வருடங்களாக நடத்தி வரும் நான் சமீப காலமாக மாணவர்களிடம் ஓர் மாற்றத்தை காண்கின்றேன். இந்த வினோத நிலை மாற கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் முன்வருவார்கள் என்பதற்காகவே இந்த பதிவு, பொதுவாக பள்ளி கல்வி ஆண்டுக்கான பாடங்களை படித்து தேர்வு எழுதுவது என்பதுதான் நடைமுறை. ஆனால் இப்போது மதிப்பெண் வாரியாக ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வினாவங்கி என பல வகையான புத்தகங்கள்…
-
Continue reading →: சொற் களஞ்சியம்
முதல் வகுப்பு ட, ப, மபடம், பட்டம், மடம், மட்டம், பாடம், மாடம், பாப்பா, மாமா ய,ர,ழபாய், பார், யார், யாழ், மரம், பழம், பம்பரம், மாமரம், மாம்பழம் ச,க,தசட்டம், கட்டம், தச்சர், சக்கரம், கம்பம், கரகம், காகம், காரம், காயம், காய், பக்கம், பதக்கம், தகரம், மச்சம், மாதம், சாரம், தாய், தாத்தா, தாகம் ந, ங, றநகம், நாகம், நகரம், நாடகம், நாய், தந்தம், சந்தம், சங்கம்,…
-
Continue reading →: மதுரை to பெங்களூரு
இரவு 12 மணிக்கு ரயில், 11 மணிக்கே மதுரை இரயில் நிலையம் வந்தேன். ஒவ்வொரு ஊரும் இரயில் நிலையத்தை வெவ்வேறு பெயரில் அழைக்கும் மதுரையில் இதன் பெயர் ஜங்ஷன், சென்னையில் சென்ரல், காஞ்சியில் இரயிவே ஸ்டேஷன், எது எப்படியோ ஒரு ஆட்டோ பிடித்து வந்து பார்த்தால் ஜங்ஷன் ஓர் திறந்த வெளி உறங்கு நிலையம் என அறிந்து கொண்டேன். நடப்பதற்கு வழிவிட்டுக் குறுக்கும் நெடுக்குமாக குடும்பம் குடும்பமாக, சிலர் தனித்…
-
Continue reading →: தடுமாற்றம்
அந்தக் கடையில் 15 வருடங்களாக வேலை செய்யும் குமார் ஓர் உழைப்பாளி, அதைவிடக் கடையின் முதலாளி முரட்டு உழைப்பாளி, அந்த கடையில் கிடைக்காத பள்ளி, கல்லூரி பொருட்களே இல்லை என்று சொல்லலாம். இவர்களின் உழைப்பே இத்தனை பொருட்கள் கிடைக்கச் செய்வதை சாத்தியமாக்குகிறது. தேவையான ஆர்டர்கள் செய்வது, வரும் பார்சலை பிரித்து அதனை அடுக்கி வைப்பது, பேனா, பென்சில் என்று சில்லறை வணிகமாக வரும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து வியாபாரம் செய்வது என…
-
Continue reading →: திருமந்திரம்
திருக்குறளில் ‘இயமம் நியமம்’முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இவ்யோகக் கலையாகும். விலங்கு போன்று வாழ்ந்த மனிதன் ஒவ்வொரு படிநிலையினையும் கடந்து இன்றுள்ள பண்பட்ட நிலைக்கு உயர்ந்துள்ளான். தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயருவதற்கு இவ்யோகநெிறயைக் கண்டறிந்து அதனைக்…
-
Continue reading →: தமிழ்ப்பள்ளி வரவேற்புரை
அனைவருக்கும் வணக்கம் நம் தமிழ்ப்பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்! அயல் நாட்டில் இருந்தாலும் ஆங்கிலமே வாழ்க்கையானாலும் அன்னை தமிழ் மொழியை ஆசையாய் கற்கும் பள்ளி மாணவர்களே உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம். தாலாட்டு பாடல் மறந்திட்டாலும் தமிழ் நாவில் தவழாமல் போகாதோ? தன்பிள்ளை தமிழ் ஞானம் பெற்றிடவே தணியாத ஆர்வத்தோடு தமிழ்ப்பள்ளி சேர்த்திட்ட பெற்றோர்களே உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.…
-
Continue reading →: ஸ்ரீனிவாசு
சியாட்டில் தமிழ் சமூகம் முழுமைக்கும் தெரிந்த மனிதன் நீ சீனி என பெயர் தெரியாதோரும் இவன் என இனம் கொள்வார் உன் குரல் கேட்டு தமிழ் சங்கத்தை தாங்கிப் பிடித்தாய் மேடையிலும் குறும்படங்களிலும் நடிக்கிறாய் பள்ளியில் பல வருடங்கள் பாடம் எடுக்கின்றாய் நடனம் என்றாலும், பட்டிமன்றம் என்றாலும் நிகழ்ச்சி தொகுப்பு என்றாலும் முயற்சிக்க தயங்காத திறமைசாலிய் இருக்கின்றாய் உதவி என நம்பி வந்தால் உண்மையாய் உதவும் நண்பன் நீ பொது…
-
Continue reading →: வாழ்வியல் முப்பது
-பாவலரேறு பெருஞ்சித்திரனார். புகழ்ச்சியின் மயக்கறு புன்மையை உதறு இகழ்ச்சியைத் தாங்கு எள்ளலை எடுத்தெறி நிகழ்ச்சியை வரிசை செய். நினைவை உறுதி செய் மகிழ்ச்சியும் துயரமும் மனத்தின் செயல்களே. ஊக்கமும் முயற்சியும் உண்மையும் நேர்மையும் ஆக்க வினைகளும் அடிப்படைக் கொள்கைகள். ஏக்கம் அகற்று. ஏறுபோல் வினைசெய். தாக்கும் இழிவுகள் தாமே விலகிடும். இன்றைய நாள்நினை. இனிவரும் நாள் நினை. என்றும் புதியன் நீ யாவிம் புதியன அன்றன்றும் புதுநாள். அனைத்தும் இனியன.…
-
Continue reading →: கவிதைகள்
ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது…. எடை குறைவாக…!” வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை… இறந்த பின் ஹாலுக்குள் வந்தார்புகைப்படமாய்…!” வீட்டின் பெயரோஅன்னை இல்லம்..! அன்னை இருப்பதோமுதியோர் இல்லம்..!” புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார் பூனை வளர்க்கும் சுதந்திரத்தை….நா. முத்துக்குமார். பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன? மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! “ சர்க்கரை இல்லை…கொழுப்பு இல்லை…எஜமானரோடு வாக்கிங்போகுது ஜிம்மி…!” வேலிக்கு வெளியே தலையை…



