சனாதன தர்ம மரபில் ஆறு தரிசனங்கள் இருக்கின்றன.

  1. சாங்கியம் (enumerates)
  2. யோகம்
  3. வைசேஷகம் (atomic theory)
  4. நியாயம் (logic)
  5. பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம் – யாகம், வழிபாடு)
  6. உத்தர மீமாம்சம் (ஞான காண்டம் – வேதாந்தம்)
சுருதி வாதம் ஆன்மீக சிந்தை; வேதத்தை முதன்மையாக கொண்டது.
பிரத்யஷவாதம் உலகாயத சிந்தை; வேதத்தை துணையாக கொண்டது.

மீமாம்சம் கூறும் பிரமாணங்கள் (சான்றுகள்)

  1. பிரத்யக்ஷம் (நேரடியாக அறிதல்) நிர்விகல்ப பிரத்யக்ஷ எனவும் கூறலாம்.
  2. பரோக்ஷம் (பிற வழிகளில் அறிதல்) சவிகல்ப பிரத்யக்ஷ எனவும் கூறலாம்.
    • அனுமானம் (ஊகம்)
      உதாரணம் மலை மீதிருந்து புகை வருவதைப்பார்த்து அங்கே தீப்பற்றி இருக்கலாம் என்று ஊகிப்பது.
    • உபமானம் (உவமை / ஒப்பீடு)
      புதிதாக அறிய நேரிடும்‌ ஒரு பொருளை, விஷயத்தை ஏற்கெனவே நாம்‌ அறிந்துகொண்டுள்ள ஒரு பொருளோடு, விஷயத்தோடு ஒப்பிட்டுப்‌ பார்த்து அறிந்துக்‌ கொள்வது உயமானம்‌.
    • சப்தம் / ஆப்தவாக்கியம்‌ (உரை)
      சாஸ்திரத்தை கற்றுக்கொள்வதினாலும்‌, அதற்கான நம்பத்தகுந்தவர்களின்‌ உரை ஆகியவற்றின்‌ மூலம்‌ ஒன்றை அறிந்துகொள்வது சப்தம்‌.
    • அர்த்தாபத்தி (பொருத்திக்கொள்ளல்)
      உண்ணாவிரதப்‌ பந்தலில்‌ இருக்கும்‌ ஒருவர்‌ களைப்படையாமல்‌ இருப்பதைப்பார்த்து, அவர்‌ ரகசியமாக உணவருந்தி இருக்கலாம்‌ என்று பொருத்திப்‌ பார்த்து அறிதல்‌ அர்த்தாயத்தி.
    • அனுபலப்தி (உணரப்படாமை)
      ஒரு பொருளை குறிப்பிட்ட இடத்தில்‌ காண இயலாததன்‌ மூலம்‌ அது அங்கு இல்லை என்று அறிந்துகொள்வதற்கு அனுபலப்தி என்று பெயர்‌.

முக்தியின் படிகள்

சரியை

ஒருவன்‌ அதிகாலைப்‌ பொழுதில்‌, சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து, குளித்து தூய உடை அணிந்து, இறைவனை உருவ வழிபாடு செய்து, “பக்தன்‌” என்ற நிலையில்‌ தொண்டு புரிந்து, இறைவனை அடையும்‌ பாதையான “தாச மார்க்கம்‌” மேற்கொண்டு “சாலோகம்‌” என்ற நிலையை அடைவது.

கிரியை

ஒருவன்‌ இறைவனை உருவமும்‌, அருவமும்‌ கலந்த நிலையில்‌ வழிபட, வழிபட மக்கள்‌ தொண்டே மகேஷன்‌ தொண்டு என்ற நிலை உருவாகி, மற்றவர்களுக்கு பல நற்செயல்களைச்‌ செய்து, “கர்மவான்‌” என்ற நிலையில்‌ “கடவுளை தந்தையாகவும்‌, தன்னை கடவுளின்‌ புத்ரனாகவும்‌” அனுஷ்டித்து அடையும்‌ பாதையான “சத்புத்ர மார்க்கம்‌” மேற்கொண்டு “சாமீபம்‌” என்ற நிலையை அடைவது.

யோகம்‌

ஒருவன்‌ இறைவனை அருவமாக வழிபட ஆரம்பித்து, பிராணாயாமம்‌, ஆசனம்‌ போன்ற அஷ்டாங்க முறையில்‌ பயிற்சிகள்‌ மேற்கொண்டு, இறைவனை நண்பன்‌ போல பாவித்து, “யோகி” என்ற நிலையில்‌ அவனை அடையும்‌ பாதையான “சகமார்க்கம்‌” மேற்கொண்டு “சாரூபம்‌” என்ற நிலையை அடைவது.

இப்படி மேற்சொன்ன மூன்று பாதைகளில்‌ இறைவனை அடைய விரும்புபவர்கள்‌ பெறுவது “பதமூக்தி” ஆகும்‌.

ஞானம்‌

ஒருவன்‌ மனக்கண்ணால்‌ தான்‌ இன்னது என்று அறிந்து அம்மயமாகி, மஹாவாக்யத்தின்‌ பொருளுணர்ந்து, பரம தாத்பர்யத்தை ஆராய்ந்து, பிரபஞ்சம்‌, ஜீவன்‌, ஈஸ்வரன்‌ இவற்றின்‌ மூல தத்துவத்தை அறிந்து, காண்பவன்‌, காட்சி, காணப்படும்‌ பொருள்‌ இந்த மூன்றும்‌ ஒன்றேயான அந்த பரப்பிரம்மம்‌ என்று அறிந்தவன்‌ “ஞானி” என்ற நிலையில்‌ “சன்மார்க்கம்‌” மேற்கொண்டு “சாயுல்யம்‌” என்ற நிலையை அடைந்து “பரமூக்தி” பெறுவதே பரமானந்த நிலையாகும்‌.

இதில்‌ சன்மார்க்க நிலையான “யரமூக்தி’ பெற்றவன்‌, மறுபிறவி இல்லாததால்‌ மீண்டும்‌ பிறக்காமல்‌, இறைவனுடன்‌ இரண்டறக்‌ கலந்து விடுவான்‌.

இதை நடைமுறையில்‌ எப்படி சாத்தியமாக்க வேண்டுமெனில்‌, அதற்கான சாஸ்திரங்களை தக்க சத்குருவின்‌ வாயிலாகக்‌ கற்க கற்று, மாணவன்‌ தன்‌ மனதை அந்த சாஸ்திரங்களில்‌ கூறப்பட்ட விசயங்களை சிரவணம்‌, மனனம்‌, மற்றும்‌ நீதித்யாஸனம்‌ என்பதின்‌ வாயிலாக விசாரிக்க வேண்டும்‌

  1. சிரவணம்‌ (கேட்டல்)
  2. மனனம்‌ (சிந்தித்தல்)
  3. நீதித்யாஸனம்‌ (தியானித்தல்/தெளிதல்)

என்பதின்‌ வாயிலாக விசாரிக்க வேண்டும்‌. அதன்‌ அடிப்படையிலே, மனதின்‌ நான்குவித பரிமாணங்களைக்‌ காணலாம்‌.

  1. வைஸ்வாநான்‌ – விழிப்பு – மனம் ஸ்தூல சரீரத்தில்‌ இந்த உலகை அனுபவிக்கின்றது
  2. தைஜஸன்‌ – உறக்கம் – மனம் மனம்‌ சூக்ஷாம சரீரத்தில்‌ மன உலகை அனுபவிக்கின்றது
  3. பிராக்ஞன்‌ – ஆழ்ந்த உறக்கம் – மனம்‌ காரண சரீரத்தில்‌ ஒடுங்கி விடுகின்றது
  4. பிராஹ்மணன்‌ என்பதாகும்‌.

பொதுவாக, மனதின்‌ விழிப்புநிலை (வைஸ்வாநரன்‌) உணர்வுபூர்வமாக, புறவயமாக இருக்கிறது. தான்‌ வாழ நேர்ந்திருக்கிற வெளி உலகை, அதன்‌ சூழ்வெளியான மாபெரும்‌ பிரபஞ்சத்தை மனம்‌, இந்நிலையில்‌ அனுபவிக்கிறது. ஆதலால்‌, அதுவே, பிரபஞ்சத்தின்‌ ஒரு பகுதியுமாகிறது.

இரண்டாவது நிலையான மனதின்‌ கனவு நிலை (தைஜஸன்‌), தன்‌ உணர்வுகளை அகமுகமாகத்‌ திருப்பிவிடுகிறது. இங்கே புறவுலகு மறைந்து, மனவுலகு தெரிய ஆரம்பிக்கின்றது. மனம்‌ அதனை அனுபவிக்கிறது.

மூன்றாவது பரிமாணமாக மனதின்‌ ஆழ்ந்த உறக்கநிலை (ப்ராஜ்ஞன்‌) உள்ளது. இதில்‌ மனதின்‌ புறஅனுபவங்கள்‌ ஒடுங்கி, உணர்வு உட்புறமாகத்‌ திரண்ட நிலை உண்டாகின்றது. அங்கே, அனுபவங்கள்‌, உணர்வுகள்‌ ஒடுங்கிய நிலையில்‌, மனதின்‌ எந்த எண்ணங்களும்‌ எழாத அந்நேரத்தில்‌ இந்த உலகம்‌, உறவுகள்‌ என எல்லாமே மறந்துவிடுகின்றது. மனம்‌ இவ்வாறு தன்னை மறைந்துவிட்ட நிலை என்பது, மனதின்‌ “ஆனந்தமய:” என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு, மூன்று சரீரங்களின்‌ வாயிலாக, இந்த மனம்‌ தன்னுடைய அவஸ்தைகளை அனுதினமும்‌ அனுபவமாக்குகின்றது.

இவைகளுக்கு அப்பாற்பட்ட நான்காவதாக ஒரு நிலை உள்ளது. அது மனம்‌ தன்னை முற்றிலுமாக இழந்து, அந்த தூய அறிவாக பிரகாசிக்கும்‌ நிலைக்கு “பிராஹ்மணன்‌’ (தூயவன்‌) என்று கூறப்படுகின்றது. இது, நான்காவது நிலை எனப்பட்டாலும்‌, முதல்‌ மூன்று நிலைகளை உள்ளடக்கியதும்‌, அதேசமயம்‌ அந்த மூன்று நிலைகளைக்‌ கடந்த நிலையுமாகும்‌.

இது புறமுக நிலையல்ல, அகமுகநிலையல்ல, இரண்டும்‌ கலந்த உணர்வு குவிந்த நிலையுமல்ல. இதனைக்‌ காண இயலாது. இதனைப்‌ புரிந்துக்‌ கொள்ள முடியாது. இது, அடையாளங்கள்‌ இல்லாத, விளக்கமுடியாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத நிலை. மங்கலமானது, சாந்தமே வடிவானது, ‘அத்வைதம்‌’. அதாவது, ஒரண்டற்றது.

இதுவே அ உ ம் மௌனம் என்ற நான்காக இருக்கிறது.

சமாதி

தனக்குள்ளிருக்கும்‌ ஆன்மாவை மனதின்‌ படி நிலைகளின்‌ வாயிலாக, அந்த மனதை படிப்படியாக உயர்த்திக்‌ கொண்டு வந்து, தன்னை ‘அறிபவன்‌’ தன்மயமாகி, தன்னில்‌ தானாய்‌ ஒளிர்கிறான்‌. அவனே, அந்த பிரஹ்மத்தை உணர்ந்தவனாகிறான்‌. அவ்வாறு, அந்த ப்ரஹ்மத்தை தன்னில்‌ தானாய்‌ உணர்ந்து, அதில்‌ இரண்டறக்‌ கலந்து விட்ட நிலையை சமாதி என அழைக்கின்றது.

அதாவது, சமாதி என்றால்‌, அந்த ஆதிக்கு (இறைவனுக்கு) சமமாக இருப்பது எனலாம்‌. எந்த வடிவமும்‌ இன்றி கருத்தை மட்டும்‌ உணரும்‌ நிலையை அடைந்து விட்டால்‌, தியானத்தின்‌ அந்த நிலையை சமாதி எனலாம்‌. பொதுவாக, சமாதி என்பது நிசப்தமான ஆயினும்‌ உயிரோட்டமுள்ள ஒரு விழிப்புணர்வு நிலை என்பதாகும்‌. அதாவது, விழிப்பும்‌, உறக்கமும்‌, கனவுமற்ற ஓர்‌ அறிவு நிலை.

மகான்கள்‌ சமாதியை மூன்று படிநிலைகளாக விளக்குகிறார்கள்.

  1. சவிகல்ப சமாதி – தியானத்தில் இறைவன் அல்லது ஆத்மா பற்றிய ஓர் எண்ணம் மெதுவாக இருந்தபடியே ஏற்படும் லய நிலை. உதாரணம் மர யானை
  2. நிர்விகல்ப சமாதி – எல்லா எண்ணங்களும் முற்றிலும் நீங்கி, தூய சித்தமாக மட்டுமே இருக்கும் நிலை. உதாரணம் உப்பு நீர்
  3. சஹஜ சமாதி – அந்த ஞானநிலை தியான நேரத்தில் மட்டும் அல்லாமல், இயல்பாக வாழ்வின் எல்லா நேரங்களிலும் நிலைத்திருக்கும் நிலை. உதாரணம் கரை வந்த மீன் துள்ளி கடலுக்கு செல்வது.

Reference

தரிசன மார்க்கம் : சுவாமி பிரபஞ்சநாதன் : Free Download, Borrow, and Streaming : Internet Archive


Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Design a site like this with WordPress.com
Get started