கார்த்தின் நேதா அவர்களின் அருமையான நேர்காணல், அழகான வரிகளை பட்டியலிட்டு ரசிக்கும் ஆகச்சிறந்த ரசனை, அதைவிட அவரின் வாழ்கை, போதையின் பாதையிலிருந்து மீன்டெழுந்து நல்ல மனிதனாக மாற முடியும், காதலைகைகொண்டு அதன் தோல்பாவை கூத்தைபோல இரசித்து வாழமுடியுமென்ற நம்பிக்கை தரும் பலம் அடிமனதில் அழுந்தப்பதியும் இனிமை.
மக்களுக்கு தேவையானதை கொடுப்பது கலையின் பணி. கலைதான் dominant ideologyயை உடைக்கும். மக்களை விழிப்படைய செய்வது கலையால் மட்டுமே முடியும். கூட்டு உளவியல் கொண்ட மனித இனத்தை கலை காக்கும்.
அகந்தை அற்று இருப்பதே குழந்தை மனம், குழந்தையை விரும்பாதவர் யாருளர். தன்னுணர்வால் சீரழிந்தனாகிவிடுகிறான் முதிர்ந்த மனிதன். குழந்தைகள் எளிதில் மறந்து அடுத்த நொடி மாறிவிடுகிறார்கள், கூர்மையோடு ஒரு காரியத்தில் இறங்கவும் அவர்களால் முடிகிறது.
காலங்கள் வருமிடத்தில் கஷ்டங்கள் வரும், குழந்தை பருவத்திற்கு செல்லுவதல்ல, தற்காலத்தில் குழந்தை மனத்துடன் வாழ்தல்தான் இனிமை.
இப்படி அவரின் வாழ்வின் பார்வைகள் இனிமையாக இருந்தது.
டி.ஆர்
- தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்
- தெருவோரத்தில், பொன் மஞ்சள் மலர் விழும். அதற்கான கை, தன் பூவைப் பெறுமே
- விண்மீன்கள் தீர்ந்துவிட்ட வானில் மின்மினி பூச்சி ஒன்று போகுதே
- தலைவிதி என்ற ஒன்று கவலைக்கு மருந்தானதே
- மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ
- தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார்
- கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்! கலையிழந்த மாடத்திலே முகாரி ராகம்! கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போலே மனசுக்குள் வாழும் ஆசைகள் கோடி
வாலி
- விழியே கதை எழுது! கண்ணீரில் எழுதாதே! மஞ்சள் வானம்! தென்றல் சாட்சி! உனக்காகவே நான் வாழ்கிறேன்
கவிஞர் கண்ணதாசன்
- இலக்கணக்கவிதை எழுதியவர்
- கவிதைகளை திரைப்பாடலில் தந்தவர்
- சித்தர் பாடல்கள், பள்ளு, குரவஞ்சி, நாட்டர் பாடல்களை திரையிசையில் தந்தவர்
- மரபை எளிய எழுத்தில் சொன்னவர்
- பாமரனின் எண்ணம் எளிய மொழியில் அவன் சிந்தையில்
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்! இறப்பில் ஒரு தூக்கம்!
இப்போது விட்டு விட்டால், எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது! கண்ணுறங்கு மகளே!
காலமிதைத் தவற விட்டால், தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி
மாறும் கன்னி, மனம் மாறும், கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது, தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும் கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
இருவிழியாலே மாலையிட்டால்
மாலைபொழுதின் மயக்கத்திலேமாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
இன்பம் சிலநாள்… துன்பம் சிலநாள்… என்றவர் யார் தோழி…
இன்பம் கனவில்… துன்பம் எதிரில்… காண்பது ஏன் தோழி…
காண்பது ஏன் தோழி… ஆஆஆ…
மணமுடித்தவர் போல்… அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி…
மங்கை என் கையில்… குங்குமம் தந்தார் மாலை இட்டார் தோழி…
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்… சாய்ந்துவிட்டேன் தோழி…
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே…
மறந்துவிட்டார் தோழி… மறந்துவிட்டார் தோழி…
கனவில் வந்தவர் யாரென கேட்டேன்… கணவர் என்றார் தோழி…
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும்… பிரிந்தது ஏன் தோழி…
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்… இதில் மறைந்தது சில காலம்…
தெளிவும் அறியாது… முடிவும் தெரியாது… மயங்குது எதிர்காலம்…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை… காரணம் ஏன் தோழி…
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா
முதல் நாள் காணும் திருமண பெண்போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி
/பாலும் பழமும்
ஆறு மனமே ஆறு… அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…தெய்வத்தின் கட்டளை ஆறு…
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்…உள்ளத்தில் உள்ளது அமைதி…
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்… இறைவன் வகுத்த நியதி…
சொல்லுக்கு செய்கை பொன்னாகும்… வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்…
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்… எல்லா நன்மையும் உண்டாகும்…
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்… உலகம் உன்னிடம் மயங்கும்…
நிலை உயரும் போது பணிவு கொண்டால்… உயிர்கள் உன்னை வணங்கும்…
உண்மை என்பது அன்பாகும்… பெரும் பணிவு என்பது பண்பாகும்…
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்… எல்லா நன்மையும் உண்டாகும்…
ஆசை கோபம் களவு கொள்பவன்… பேசத்தெரிந்த மிருகம்…
அன்பு நன்றி கருணை கொண்டவன்… மனித வடிவில் தெய்வம்…
இதில் மிருகம் என்பது கள்ள மனம்… உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்…
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது… ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்…
தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு!
இந்த ஊரென்ன? சொந்த வீடென்ன? ஞானப் பெண்ணே?
வாழ்வின் பொருள் என்ன? நீ வந்த கதை என்ன?
நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா?
இல்லை, என் பிள்ளை எனைக்கேட்டு பிறந்தானா?
தெய்வம் செய்த பாவம்! இது போடி தங்கச்சி!
கொன்றால் பாவம்! தின்றால் போச்சு! இதுதான் என் கட்சி!
ஆதி வீடு, அந்தம் காடு, இதில் நான் என்ன? அடியே நீ என்ன? ஞானப் பெண்ணே?
வெறும் கோவில், இதில் என்ன அபிஷேகம்?
உன் மனம் எங்கும்! தெரு கூத்து, பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன்!ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும்…
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு…
அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று…
ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்…
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல… இதுதான் என் கட்சி
கொண்டதென்ன? கொடுப்பதென்ன?
இதில் தாய் என்ன? மணந்த தாரம் என்ன? ஞானப் பெண்ணே?
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோன்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோன்டி ஞானம் கண்டேன்! இதுதான் என் கட்சி!
உண்மை என்ன? பொய்மை என்ன?
இதில் தேன் என்ன? கடிக்கும் தேள் என்ன? ஞானப் பெண்ணே?
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள்.. எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில்… அவனது கவனம்…
காலை எழுந்தவுடன்… நாளைய கேள்வி…
அது கையில் கிடைத்த பின்னும்.. துடிக்குது ஆவி…
ஏன் என்ற கேள்வி ஒன்று.. என்றைக்கும் தங்கும்…
மனிதன்.. இன்பம், துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…
எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்ண.. எப்படி நடக்கும்…
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு…
அதில் நமக்காக.. நம் கையால்.. செய்வது நன்று…
ஆரம்பத்தில்.. பிறப்பும்.. உன் கையில் இல்லை…
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு.. பயந்தென்ன லாபம்…
அதில் பயணம் நடத்திவிடு.. மறைந்திடும் பாவம்…
நாளைப் பொழுது என்றும்.. நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு.. கோவிலில் காண்க…
வேளை பிறக்கும் என்று.. நம்பிக்கை கொள்க…
எந்த வேதனையும் மாறும்.. மேகத்தைப் போல…
கண்ணா… கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
கார்த்திக் நேதா
நான் என்பது யாரோ.. பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி.. எழுந்தேனே.. மனமே
தான் என்பது போகும்..பெருங்கணத்தினிலே கூவி
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய் பேச
போகாதொரு ஆழம் தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டி தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே
ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர் உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்.. யார் உடைத்தாலும்.. சிரிக்கின்ற பொம்மைப்போலே.. நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும் நதியின் மேலே.. உட்காரும் தட்டான் போலே.. லேசாக அமர்ந்தே பறப்பேனே.. புவி மேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்.. தான் தூங்கும் மழலைப்போலே..
பேரன்பைப் போலி செய்வேனே.. நிறுத்தாமல்
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்..இப்போது இப்போது இப்போது கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்.. இப்போது இப்போது இப்போது ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்.. இப்போது இப்போது இப்போது நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்.. பூத பேத வாத மோகம் மறைகிறதே
நான் எனக்குள்ளே.. அசைந்தேனே ஊஞ்சல்போலே.. யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்.. பேரலை மேலே.. விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே.. சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே.. பதறாமல்
பூவிழும் குளத்தின் மேலே.. உருவாகும் வளையல் போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே.. கதறாமல்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்.. பாகாய் பாகாய் ஆகிறேன்
தோதாய் தோதாய் போகிறேன்.. தூதாய் தூதாய் ஆகிறேன்
போதாய் போதாய் பூக்கிறேன்.. காதாய் காதாய் கேட்கிறேன்
தாலாட்டும் காலம்.. தலையாட்டும் ஞானம்
தாய்ப்போல் பாடுதே.. ஆரோ ஆராரிரிரோ.. ஆரோ…
கர்வம் கொள்ளும் பெண்ணல்ல அவள், கலங்கவைக்கும் பெண், ஆம்!
அந்திமாலை நேரம்.. ஆற்றங்கரை ஓரம்.. நிலா வந்ததே.. என் நிலா வந்ததே..
பேசி பேசி நாளும்.. காலம் போக்க தோணும்..
நாவிழுத்து வார்த்தை.. போர்த்தி கொண்டதே
நதி நீரின் மேலே.. வெளிச்சங்கள் போலே
விழுந்தாயே விரைந்தேனே.. உருண்டோடி நானே…
மொட்டை மாடி மேலே.. ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே.. பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
உணராத எதுவோ.. என்னை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே.. மனம் தான் கேட்குதே
சாம்பல் மேலே.. பூவின் பாதம்.. கோலம் ஆகிறதே
என் நிலா வந்ததே…
யாரின் மழை மீது.. யாரின் மழை சேர்த்ததோ
யாரின் குடை வாங்கி.. யாரின் மனம் போகுதோ
திறக்காத காதவாய்.. பல நாள் போனதே
கதவில்லா வெளியாய்.. புது நாள் சேருதே
வட்டம் போலே.. வாழ்ந்தேன் காதல்.. வாசல் வைக்கிறதே…
உற்றறிய என்னவுண்டு? பெற்றறிய என்னவுண்டு? பொற்புடைய கெண்ணழகே! பெருஞானம் நற்சிவையே!
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே
கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலி.. நட்சத்திர பூவே..
காத்தா வரேன்.. காப்பா வாரேன்.. ஏங்காதே
வழி வழி எல்லாம்.. வெடி நேடி வெடி நேடி
படு குழி படு குழி.. தோட்டம் எங்க? பூவூம் எங்க? வாசம் எங்க?
அஞ்சு வண்ண பூவே காணும் உன்னை
பிஞ்சி விரல் எங்கே? கொஞ்சும் குரல் எங்கே? அஞ்சுகமே கண்ணே
விடாம ஓடி! படமா ஆடி! நிலாவ மீறி! வினாவா சூடி!
பரரி போலே. பித்தேறி வாடி! கோலாவி கூடி துலாவி தேடி
அனாதி பார்த்தேன்
உள்ளிருந்து பேசும்! ஒத்த குரல் போதும்
காணலையே உன்னை! நந்தவனமோ ஊர் மலரோ!
தாய்மையின் குரலோ பேரருளோ! உலகத்தில் இல்ல
வட்ட வட்ட பாத சுத்துதே காலா! எங்கே இனி போவ? எங்கே இனி போவ?
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் மூழ்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி இதுவே
அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை
அனுபவம் கொடுத்திடுமே
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே
இதுவும் கடந்து போகும்
ஏதுவும் கடந்து போகும்
அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்
மனம் தான் ஒரு குழந்தையே
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்
அது போல் இந்த கவலையே
நாள் தோரும் ஏதோ மாறுதல்
வானும் மண்ணும் வாழும் ஆறுதல்
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்
மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன
அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே
குழந்தை நடை பழகுதே
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே
வசம் தான் பூவின் பார்வைகள்
காற்றில் ஏறி காணும் காட்சிகள்
காணாமல் வெளியாக பார்த்திடுமே
சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே
பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே
மூத்த மூத்த என்கிறீர்கள்! எது மூத்த?
அறியாமை மூத்த தானே
முதிர்ந்த முதிர்ந்த என்கிறீர்கள்! எது முதிர்ந்த?
அறியாமை முதிர்ந்ததானே அல்லது அகந்தை உதிர்ந்ததானே
மேற்கோள்கள்
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் துங்கினல்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே
உங்களால் எதையும் சாதிக்கும் நிலையிலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள். எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு மனத்தைச் செலுத்துங்கள். இரவும், பகலும் கருணையான நினைவுடன் யோகநிலையில் இருந்து வந்தால், ஆணவமாகிய கல்லும் விலகி இறைவடிவான பரவெளி தென்படும்.
/திருமந்திரம்
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”
நாம் எதையெல்லாம் விடுவிறோமோ அதனால் வரும் துண்பங்களிலிருந்தும் விடுபடுகிறோம்.
/திருக்குறள்
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிாிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாா் என்று நீயும் என்னை பாா்க்கும் போது
உயிரே உயிா் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பாா்ப்பேனடி
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல்? விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா! நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருப்பேன்! உயிரோடு பாா்த்திருப்பேன்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே
/நா முத்துகுமார்
Even wonder had to climb the mountain, I started my journey sitting still
Plato
Plato argues that art, in its various forms (painting, sculpture, poetry, etc.), is an imitation of the physical world, which itself is only an imitation of the world of Forms.
Mikhail Bakhtin
Mikhail Bakhtin introduced the idea that meaning emerges through interaction between voices rather than from a single authoritative source. His concept of dialogism suggests that every text and conversation is part of an ongoing exchange of perspectives.
Bakhtin also developed the theory of the carnivalesque, showing how humor, parody, and social inversion in literature challenge authority and reveal hidden truths. His work has deeply influenced literary theory, linguistics, cultural studies, and modern communication theory.
New Criticism
New Criticism is a 20th-century literary theory that emphasizes close reading of texts as self-contained, autonomous works, focusing on language, structure, and meaning rather than authorial intent or historical context.
புத்தகங்கள்



Leave a comment