


எந்த ஒரு யாகத்திலும் (யஜ்ஞம்) நான்கு வகை வேதியர்கள் அவசியமாக இருந்தனர்.
- ஹோத்ரு hotṛ என்று அழைக்கப்படும் யாகக்காரர்கள். இவர்கள் மந்திரங்களை ஓதி தேவதைகளை அழைப்பர், ரிக் வேதத்தின் ஸூக்தங்கள் இந்த வகை வேதியர்களுக்கானவை.
- உத்காத்ரு udgātṛ என்று அழைக்கப்படும் பாடகர்கள். இவர்கள் ஸாம வேத ஸாமகானங்களைப் பாடுவார்கள்.
- அத்வர்யு adhvaryu என்று அழைக்கப்படும் ஓதகர்கள். இவர்கள் யாக செயல்களை நடத்தும் போது யஜுர்வேத மந்திரங்களைப் பாடுவார்கள். (யஜுர் – வேள்வி). கிரியைகள், வேள்விகள் நிகழ்த்தும் முறைகள்.
- பிராமண brahman மேற்பார்வையாளர்கள். இவர்கள் யாகத்தைக் கண்காணிப்பவர்கள். அத்தர்வ வேதத்தின் மந்திரங்கள் இந்த வகை வேதியர்களுக்கானவை.
Government of India compiled digitally at vedicheritage.gov.in
ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளை கொண்டது.
- சம்ஹிதை – மந்திரங்களின் தொகுப்பு
- பிராமணம் – உரை
- ஆரண்யகம் – விரிவுரைகள்
- உபநிடதங்கள் – தத்துவ உரைகள்
இவை முறையே நான்கு ஆசிரமங்களுக்கானவை பிரம்மச்சார்யம் (மாணவ), கிரஹஸ்தியம் (இல்லரம்), வானபிரஸ்தம் (ஒதுங்கி வாழ்தல்), சன்யாசம் (துறவு).
சம்ஹிதை, பிராமணம் கர்மகாண்டம் என்றும், ஆரண்யகம், உபநிடதங்கள் ஞான காண்டம் என்றும் கொள்வர்.
சுக்ல யஜூர் வேதம் அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. நாள்தோரும் நிகழும் சடங்குகள் அதனை அடிப்படையாக கொண்டது. இதில் இரண்டு பகுதிகள் இருக்கிறது.
- கிருஷ்ண (கருப்பு) யஜூர்: பாடலும் உரையும் கலந்து வருவதால் இந்த பெயர். இதில் 4 சாகைகள் (பிரிவுகள்)
- தைத்திரீய சம்ஹிதை
- மைத்திராயனீ சம்ஹிதை
- சரக-கதா சம்ஹிதை
- கபிஸ்தல-கதா சம்ஹிதை
- சுக்கில (வெள்ளை) யஜூர் – 15 சாகைகள் (2 மட்டுமே இன்று இருக்கிறது)
- வஜசனேயி மாத்தியந்தினியம்
- வஜசனேயி கான்வம்
இந்த மாத்தியந்தினியம் 40 அத்யாயங்கள், 303 அனுவாகம், 1,975 ஸ்லோகங்கள் அடங்கியது. இதை முழுவதுமாக தேவவ்ரத் மகேஷ் ரேகே நினைவில் வைத்து முழுவதையும் 50 நாட்கள் தொடர்ச்சியாக ஓதியிருக்கிறார். இந்த நினைவாற்றல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நம் இந்திய மரபில் எழுதுவது இல்லை, எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். செவி வழி மரபுதான்.
“īśāvāsyam idaṁ sarvaṁ yat kiñca jagatyāṁ jagat”
“All this—whatever moves in this moving universe—is pervaded by the Lord.”
புராதனமான காசி நகரில் ஸ்ரீ வல்லபிரம் ஷாலிகிராம் சங்வேத வித்யாலயாவில் (Facebook | YouTube) இந்நிகழ்வு நடந்தது. மேற்கு பகுதி மஹாராஷ்டிரர்களின் சத்திரம் கிழக்கில் காசியில் இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒரே ஓசையில் வேதம் ஓதப்படுகிறது என்பது காலம் காலமாக இங்கே நடந்துவரும் அதிசயம்.

பாரம்பர்யமான இந்த மடாலயங்கள் தொடர்ந்து வரும் இந்த பாரம்பர்யங்களை தொடச்சி விடாமல் காப்பாற்றி வருகிறது. நவயுகத்தில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையில் வைதீக மரபுகளை கட்டிக்காப்பவர்கள் இருப்பதனால் தான் 4,000 வருடங்கள் பழமையான வேதங்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒலிமாறாமல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த வேதங்களே இந்திய சிந்தனைகளின் அடித்தளம்.


வேதங்களின் அளவில் மிகபிரம்மாண்டமானது அதை நினைவில் வைத்துக்கொள்வது என்பது கடினமானது, அதற்கும் வேதம் உபாயங்களை வழங்கி இருக்கிறது (pāda pāṭhaḥ). மந்திரங்கள் மனப்பாடம் செய்யும் வழிமுறைகளை வகுத்திருக்கிறது.

வேதங்களை நன்றாகப் படிப்பதற்கும், சரியான உச்சரிப்பையும் மனப்பூர்வமாகக் கற்றுக்கொள்ளுவதற்கும் 11 வகை வேதம் ஓதும் (Patha) முறைகள் உள்ளன. இவை ஐயம்திரிபற கற்க உதவும். பிரக்ரிதி பதா (Prākṛti) வார்த்தைகள் வரிசை மாறாமல் ஓதுதல், விக்ருதி பதா (Vikṛti) வார்த்தைகளை முன்பின்னாக மாற்றி மாற்றி ஓதுதல்.
Ref: ghanapati.com, wiki, Sri K. Suresh Video, Intro to Chanting
- வாக்கிய (அ) சம்ஹிதா (Samhita‑Patha) வரிவரியாக ஓதுதல்.
- 1234

- 1234
- பாடா (Pada‑Patha) — ஒவ்வொரு சொல்லாக ஓதுதல்.
- 1-2-3-4

- 1-2-3-4
- க்ரமா (Krama‑Patha) — அடுத்த சொல்லை இணைத்து இரண்டிரண்டு சொற்களாக ஓதுதல்.
- 12 23 34 45

- 12 23 34 45
- ஜாடா பாத்த (Jata‑Patha) — முதல் இரண்டு சொற்களும் முதலில் ஒன்றாகச் சொல்லப்பட்டு, பின்னர் அவற்றை முன்பின்னாக சொல்லி, பின்னர் மீண்டும் அசல் வரிசையிலும் சொல்லப்படும். எனவே,
ஜட = க்ரம + பின்னோக்கிய க்ரம + க்ரம- 1-2 2-1 1-2
- 2-3 3-2 2-3
- 3-4 4-3 3-4
- 4-5 5-4 4-5

- மாலா பாத்த (Mala‑Patha) — “மாலை” போல் வார்த்தைகளை சுற்றி மீண்டும் மீண்டும் ஓதுவது.
- 1-2 2-1 1-2 2-3 3-2 2-3 3-4 4-3 3-4 4-5 5-4 4-5
- ஷிகா பாத்த (Shikha‑Patha)
- 1-2 2-1 1-2-3
- 2-3 3-2 2-3-4
- 3-4 4-3 3-4-5
- 4-5 5-4 4-5-6

- ரேகா/லக்ஷா பாத்த (Rekha/Lekha‑Patha) — கடித ஓலையை மெல்ல விரித்து படிப்பது போல மெல்ல நீளத்தை அகட்டி முன் பின்னாக ஓமுதல்.
- 1 2 ~ 2 1 ~ 1 2 ~
- 2 3 4 ~ 4 3 2 ~ 2 3 ~
- 3 4 5 6 ~ 6 5 4 3 ~ 3 4 ~
- 4 5 6 7 8 ~ 8 7 6 5 4 ~ 4 5 ~
- 5 6 7 8 9 ~ 9 8 7 6 5 ~ 5 6 ~
- 6 7 8 9 ~ 9 8 7 6 ~ 6 7 ~
- 7 8 9 ~ 9 8 7 ~ 7 8 ~
- 8 9 ~ 9 8 ~ 8 9 ~
- 9 ~ 9 ~ 9 _ ~

- ட்வஜா பாத்த (Dhwaja‑Patha) — கொடி (X போல) போல முதல், கடைசி சொல்லை இணைத்து ஓதி நகர்ந்து கடைசி, முதல் சொல் என முடிப்பது.
- 1 2 ~ 8 9 ~
- 2 3 ~ 7 8 ~
- 3 4 ~ 6 7 ~
- 4 5 ~ 5 6 ~
- 5 6 ~ 4 5 ~
- 6 7 ~ 3 4 ~
- 7 8 ~ 2 3 ~
- 8 9 ~ 1 2 ~
- 9 _ ~ _ 1 ~

- டண்ட பாத்த (Danda‑Patha) — Sample Rending. ஒரு பெரிய தடியை ஓவ்வொரு பிடியாக பிடித்து உச்சியை அடைவது போல ஓதுதல்.
- 1 2 ~ 2 1
- 1 2 ~ 2 3 ~ 3 2 1
- 1 2 ~ 2 3 ~ 3 4 ~ 4 3 2 1
- 1 2 ~ 2 3 ~ 3 4 ~ 4 5 ~ 5 4 3 2 1

- ரத பாத்த (Ratha‑Patha) — ரதம் ஆடுவதைபோல இரண்டு தொடக்கங்களில் முன் நகர்ந்து முழுவதும் பின் நகர்வது, மீண்டும் முன் நகர்வது போல கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளில் நகர்ந்து அழகாக ஆடி நகரும் ஓதல் முறை.
- 1 2 ~ 5 6 ~ 2 1 ~ 6 5 ~ 1 2 ~ 5 6 ~
- 2 3 ~ 6 7 ~ 3 2 1 ~ 7 6 5 ~ 1 2 ~ 5 6 ~ 2 3 ~ 6 7 ~
- 3 4 ~ 7 8 ~ 4 3 2 1 ~ 8 7 6 5 ~ 1 2 ~ 5 6 ~ 2 3 ~ 6 7 ~ 3 4 ~ 7 8 ~
- 4 5 ~ 8 9 ~ 5 4 3 2 1 ~ 9 8 7 6 5 ~ 1 2 ~ 5 6 ~ 2 3 ~ 6 7 ~ 3 4 ~ 7 8 ~ 4 5 ~ 8 9 ~

- க்ஷண / கனா பாத்த (Ghana‑Patha) — மிகக் கடினமான முறை. இப்படி ஓதுபவர்களை கணபாடிகள் என்று அழைப்பர்.
- 1 2 ~ 2 1
- 1 2 3 ~ 3 2 1 ~ 1 2 3
- 2 3 ~ 3 2
- 2 3 4 ~ 4 3 2 ~ 2 3 4
- 3 4 ~ 4 3
- 3 4 5 ~ 5 4 3 ~ 3 4 5
- 4 5 ~ 5 4
- 4 5 6 ~ 6 5 4 ~ 4 5 6

நான் இந்த பாட முறைகளை வரைபடம் வரைந்து பார்த்தேன். பொதுவாக கண முறை கடுமையானது என்று சொல்கிறார்கள், ஆனால் என் புரிதலில் அதைவிடவும் தன்டா முறை மிகவும் நேரம் எடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த முறையில்தான் தேவவ்ரத் மகேஷ் ரேகே பாராயணம் செய்துள்ளார்.
ஐம்பது நாட்கள் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த கவனத்துடன் வேதம் ஓதும் முறையை கடைபிடித்து, 19 வயது இளைஞர் செய்து காட்டியது மகிழ்வையும் நிறைவையும் தருகிறது. விவேகாந்தர், சங்கரர் என இளைஞர்களார் வளர்ததுதான் சனாதன தர்மம். தேவவ்ரத் மகேஷ் ரேகே புதிய நம்பிக்கையை வழங்குகிறது.
கீழே பாட முறையின் வரைபடங்கள். தொடக்கத்தை அடர் மஞ்சள் நிறத்திலும், மேலிருந்து கீழாக ஒவ்வொரு வரியும் அடுத்தடுத்த வரிசைகிரமமத்தை குறிக்குமாறு வரைந்துள்ளேன்.
வைதீக தளத்தில் மட்டும் இன்றி வேதாந்த, தத்துவ தளத்திலும் புதிய நம்பிக்கைகள் கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வேதாங்கம், உபவேதங்கள், ஸ்மிருதியை உணர்ந்து அதனை நடைமுறையில் பொருந்த வாழ்தல் தவம். நம் இந்திய ஞானத்தை இளைஞர் கையில் கொடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.




Refer



Leave a comment