இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியை நாதஸ்வர கலைஞர்களைக் கொண்டு நடத்தியிருந்தார்கள். மிக அருமையாக இருந்தது. நாதஸ்வரத்தின் வகைகள், திரையிசை என பலவற்றைப் பற்றியும் பேசினார்கள்.
இராஜவாத்தியமான நாதஸ்வரம், நாகசுரம், நாதசுரம், நாகஸ்வரம், நாயனம் என பல பெயர்களைக் கொண்டிருக்கிறது. அந்த சீவாளி கட்டையை மாற்றி மாற்றி வாசிப்பதைக் காண்பதே அழகு. அளவில் பல நாதஸ்வரங்கள் உண்டு, சிறியது வெகுதூரம் கேட்கக்கூடியது என்பதை அறிகிறோம். 1941-ம் ஆண்டு திருவாவடுதுறை டி.என்.ராஜரெத்தினம் பிள்ளை பல முயற்சிகள் செய்து 2 கட்டை சுருதியுடன் நாதஸ்வரத்தை உருவாக்கி இருக்கிறார்.
மகுடி ஊதிவிட்டார் என்று சொல்லுவதுண்டு. நிகழ்வுகளின் அறிகுறியாக தீர்த்த மல்லாரி, தளிகை மல்லாரி, வீதி உலா மல்லாரி என பல உண்டு. நாதஸ்வரத்தில் காவடி சிந்து பரம சுகம். காலை நேர ராகமாக பௌளி, பூபாளம், மாலை நேர ராகமாக கல்யாணி, காம்போதி, இரவு ராகமாக புன்னாகவராளி என ஒவ்வொரு வேளைக்கும் உரிய பாடல்கள் நாதஸ்வரத்தில் பாடப்படுகிறது.
தமிழ் திரையிசையில் மிக நேர்த்தியாக இந்த இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வில் பல நல்ல பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டன.
- என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட… மன்னன் பேரும் என்னடி…
- ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
- மஜ்னு – முதல் கனவே முதல் கனவே…
- கரகாட்டக்காரன் – ஊரு விட்டு ஊரு வந்து
- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – சந்தன தென்றலை
- பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு
- பூங்கதவே தாள் திறவாய்
- படையப்பா கல்யாணம்
- டங்காமாரி ஊதாரி
- சித்தாட கட்டிகிட்டு
- மாங்குயிலே பூங்குயிலே
- ஒளிமயமான எதிர்காலம்
- விண்ணைத்தாண்டி வருவாயா – பிலஹரி
- மாரியம்மா மாரியம்மா
- தார தப்பட்ட தகின தகின தக ததீம் த தா
- மானூத்து மந்தையில
- சங்கமம் – மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
- அமுதே தமிழே எனதுயிரே
இன்றைய தலைமுறையினர் பலரும் இந்ததுறையில் பிரபல்யமாக இருக்கின்றனர் என்பது மகிழ்வளித்தது.
- இஞ்சிகுடி சுப்ரமணியம்
- இஞ்சிகுடி மாரியப்பன்
- இடும்பாவனம் கார்த்தி
- பிரகாஷ் இளையராஜா
- கிளாரிநெட் நடராஜன்
அக்காலத்தில்
T.N. Rajarathinam Pillai – often called Nadaswara Chakravarthi (Emperor of Nadaswaram).
Karakurichi Arunachalam – a disciple of Rajarathinam Pillai, known for his powerful style.
Sheik Chinna Moulana – brought devotional depth and a unique bani (style).
Thiruvavaduthurai Rajaratnam Pillai – a maestro who influenced many later vidwans.
Namagiripettai Krishnan – famous for his grand temple processions and recordings.
- காரகுறிச்சி அருணாசலம் (லலிதா ராம் அவர்கள் பல காணொளிகள் பதிவேற்றியுள்ளார்)
- சேதுராமன் பொன்னுசாமி
- T.N. ராஜரத்னம்பிள்ளை
- சேக் சின்ன மௌலானா
- திருவாடுதுறை ராஜரத்னம்பிள்ளை
- நாமகிரிபேட்டை கிருஷ்ணன்
நிகழ்வில் எஸ் ராமகிருண்ன் எழுதிய சஞ்சாரம் நாவலைப் பற்றி குறிப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். இந்த இசைக்கும் சவர தொழிலுக்கும் எப்படி சம்பந்தம் வந்தது. நாவிதர், அம்மட்டன், மருத்துவர் என பல பெயர்கள் இவர்களுக்கு அமைந்திருப்பது குறித்து சில தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்த்தேன். இக்கலையின் பயிற்சி வகுப்புகள் எங்கெங்கு எப்படி நடக்கிறது என்பது பற்றி பேசுவர்கள் என்று இருந்தேன்.

எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில் பல தேர்ந்த தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் இருந்தனர். தீபாவளி, பொங்கல் நாட்களில் அதிகாலையில் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இசைப்பது இன்றும் இருக்கும் பாரம்பரியம்.
பெருமாள் புறப்பாடு நிகழ்வில் கேட்ட பல பாடல்கள் நினைவில் இருக்கின்றன.
இசைக்கு இணையாக, இசைக் கலைஞர்களின் நடை, உடை, அலங்காரங்கள் தனித்துவமானது. அதுபற்றி பல சுவாரஸ்யமான உரையாடல்கள் அமையும் என நினைத்திருந்தேன். எங்கள் வீட்டில், “ஏன் மேளக்காரர் மாதிரி டிரஸ் பண்ணிட்டு இருக்க?” என்று சொல்வதுண்டு.
நாதஸ்வரம் இசைத்தால் தான் சுப நிகழ்வு ஆரம்பித்ததாக மனம் நினைக்கிறது. நண்பர்கள் பலரின் கிரகப்பிரவேச நிகழ்வில் நாதஸ்வர இசையை ஒலிபரப்பிய ஞாபகம் இருக்கிறது.



Leave a comment