இணையதள முகவரிகள் URL என்று அழைக்கப்படுகிறது. இந்த முகவரிகள் ASCII என்ற வகையை சார்ந்தது. ASCII தமிழ் எழுத்துக்களை உள்ளடக்கியது அல்ல எனவே தமிழ் எழுத்துக்கள் கொண்ட இந்த முகவரி.

https://gurukpm.home.blog/2023/12/22/வேதா-கோவில்-சியாட்டில்-ம/

கீழ்கண்ட வகையில் மாறிவிடும்

https://gurukpm.home.blog/2023/12/22/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/

இப்படியான களேபரம் நடக்க காரணம் தமிழ் எழுத்துகள் UNICODE வகையை சார்ந்தது அது ASCII வகைக்கு மாற்றப்படுகிறது. எனவேதான் இந்த குழப்பம், இந்த மாறிய நீண்ட முகவரி சரியாக பணி செய்யும், இருந்தபோதிலும் இது நீண்டு இருப்பதும், படிப்பதற்கு இயலாததாக இருப்பதும் குறையே. எனவே இதைப்போக்க சில யுக்திகள் உண்டு.

  1. முகவரியை copy செய்யும் போது இரண்டு பகுதிகளாக copy செய்து பின் சேர்த்துக்கொள்ளுவது. உலவி முகவரியை (from browser address bar) இரண்டு பகுதிகளாக copy செய்வதன் மூலம் நாம் இந்த encoding நடப்பதை தடுக்க முடியும். Patch வேலைதான் இருந்தாலும் நம்முடைய காரியம் ஈடேருகிறதே! இரண்டு பகுதிகளாக நகலேடுத்து ஒட்டிக்கோ, அவ்வளவுதான்.
  2. இந்த encoding patch work படு பேஜாராக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் copy Unicode URLs என்ற Plug-inயை நிறுவிக்கொண்டால், UNICODE URL copy செய்வது ஜாலியோ ஜிம்கானாதான்.
  3. www.urldecoder.io போன்ற இணையதளங்களில், பேஜாரான ULRயை கொடுத்து ஜோரான URL பெற்றுக்கொள்ளலாம்.

புறாவுக்கு போரா என நீங்கள் மூக்குசிந்தினால், அழகாக இருக்க கொஞ்சம் மெனக்கடல் வேண்டும் மை சன்.

மேலும் தகவல் அறிய super user தளத்தை காணுங்கள்.

🖥️ Tidy Up Those Long, Cryptic Tamil URLs! 🌐

Ever noticed how Tamil websites often have long, unreadable URLs when shared? That’s because Unicode characters like Tamil letters get URL-encoded, making them look like this:

🔗 Encoded URL:

https://www.sirukathaigal.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF…/

But there’s an easy fix! Just install this browser extension, and URLs will remain clean and readable when you copy them.

🔹 Get the extension here:

https://chromewebstore.google.com/…/fnbbfiapefhkicjhecn…

Now, you can share links like this instead:

✅ Original URL:

No more messy links—just clean and beautiful Tamil URLs! 🎉✨


Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Design a site like this with WordPress.com
Get started