நன்றி நவிலல் நாள் விடுமுறை பயணம்!

விடுமுறையில் வீட்டை விட்டு ஒரு நாளாவது எங்காவது தங்கி வரவேண்டும் என்பது தான் விருப்பம்.  நல்ல நண்பர்கள் நமது விருப்பத்தை நிறைவேற்றி விடுவார்கள் என்பது உண்மை.  Skype video callingல் மூன்று குடும்பங்கள் பேச, அதிரடியாய் Room book ஆனது.  எங்கே போகிறோம்? என்ன பார்க்கப் போகிறோம் என்ற எந்த விவரமும் முழுமையாய் முடிவாக வில்லை.  ஒரு நாள் பயணம், Chuckanut Drive, Whidbey Island என்பது மட்டும் முடிவானது.
Ruchi உணவகத்தில் இருந்து பிரியாணி, பன்னீர் curry நான் வாங்கி வர சுஷ்மா குழந்தைகளுக்காக சப்பாத்தியும், அனைவருக்கும் சுடான டீயை flaskல் தயார் செய்தாள்.    சொன்ன நேரத்தில் கதிர் வந்து விட, ஸ்ரீனிக்காய் காத்திருந்தோம்.  மூன்று குடும்பங்கள் இரண்டு வண்டியில், “என் வண்டியில் போகலாம்”, “என் வண்டியில் போகலாம்” என்ற செல்ல சண்டைக்கு பின், ஸ்ரீனியும், கதிரும் வண்டி எடுத்தனர்.  வழி நெடுக குழந்தைகள் Retail Shop Name Series, Guess Games என பல விளையாட்டுக்களை விளையாடினர், ஆனாலும் அவர்களின் iPad, Phone மோகம் தொடர்ந்தது.  சீரிப்பாய்ந்து வந்து Quality Inn, Bellingham, அடைந்தோம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித் தனி அறை, உடமைகளை வைத்து விட்டு ஓர் அறையில் இணைந்தோம், சுடான டீ இதம் சேர்த்தது.  கூடவே கொண்டு வந்திருந்த விளையாட்டுக்களை விளையாட தொடங்கிறோம்.  Chinese Checkers, UNO, Playing Cards, Connect 4, Sunday-Monday, dots-lines. என விதவிதமான விளையாட்டுக்கள்.  குழந்தைகள் தோல்விகளை, வெற்றிகளை எதிர் கொள்ளும் விதமும், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகை என்பதை பட்டவற்தனமாக சொன்னது.   பெற்றோர்கள் அறிவுரை சொல்வதும், அதை குழந்தைகள் எதிர் கொள்ளும் விதமும், இரண்டு சாராரும் கற்க வேண்டியது பல என உணர்த்தியது.  ஒற்றை குழந்தை வீடுகளின் உலகம் இது போன்ற விடுமுறை நேரங்களில் தான் கூடி வாழ பழகுகின்றன.  பெரியவர்கள் குழந்தைகளாக மாறி விளையாட்டில் ஊறிவிட குழந்தைகள் தங்கள் iPad, phoneயை தேட ஆரம்பித்தனர். 
விளையாட்டு கூச்சல் குதூகலத்தில், வயறு என்னை கொஞ்சம் கவனி என்றது. பிரியா செய்து கொண்டுவந்திருந்த Coockies, Muffin ஒவ்வொன்றாக சுவாகா ஆனது. சப்பாத்தி, பிரியானியை ஒரு பிடி பிடித்து மீண்டும் விளையாட்டு தொடர்ந்தது, நீண்ட விளையாட்டு கோபம், அழுகை, குதுகலம், செல்ல சண்டை என எல்லா sceneகளும் வந்து சென்றது.  நானும். கதிர், ஸ்ரீனியும் சில நிமிடங்கள் வெளியில் நடந்து வரலாம் என நடந்தோம்.  குளிர் நடுங்க வைத்தது, காற்றின் வேகம் அதிர வைத்தது, இருந்தும் அந்த இருட்டு சாலையில் பேசி நடந்தோம்.  எத்தனை எத்தனை கடைகள்? USAவின் எந்த மூலைக்கு சென்றாலும் அதே தெரிந்த Brand கடைகள் இருப்பது சற்று ஏமாற்றமும், மகிழ்ச்சியும்.  இரவிலும் தொடர்ந்த Traffic, மிகப்பழமையான பல  கார்களை காட்டிச் சென்றது.
அந்த பிரம்மாண்ட Wallmart கடைக்கு சற்று முன் சாலையில் வீதியில் வாழும் சிலர் தங்கள் வண்டிகளை நிறுத்தி புதிய காலணியை நிறுவி இருந்தனர்.  இந்தக் குளிர் காற்றில் வீதியில் வாழ்வது எத்தனை கஷ்டமானது.  கனடாவின் குளிருக்கு இந்த குளிர் குறைவுதான் என இங்கு வருபவர்கள் அதிகம் என்றார் ஸ்ரீனி.  அந்த பெரிய கடையில் சில இந்தியர்கள், அதிலும் கடையில் bill போட்ட பெண்மணி எங்களை பார்த்து “உங்களுக்கு Hindi தெரியுமா? Fiji திவில் இருந்து வந்திருக்கிறீர்களா?” என்றார்.  ஸ்ரீனியின் தொப்பியும், மஞ்சள் சட்டையும் அவரை அப்படி சொல்லச் செய்திருக்கும் போல.  மிக நேர்த்தியாய் உடை அணிந்திருந்த அந்த பெண், தான் பஞ்சாபி என்றும் பக்கத்தில் உள்ள Mallசென்று வாருங்கள் என்ற பரிந்துரையும் Hindiல் செய்தார்,  என்ன இருந்தாலும் ஊர் பாசம் இல்லையா. 

10:30க்கு திரும்பிய நாங்கள் குழந்தைகள் உறங்கி இருப்பார்கள் என்று என்னினோம், மாறாக அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  சரி சரி தூங்கலாம் என ஒவ்வொருவரையும் விளையாட்டில் இருந்து இழுத்து அனுப்பி வைத்தோம்.  குழந்தைகள் விளையாட்டை விட்டு விட மனம் இன்றி, சென்று உறங்கினர்.
ஆர அமர தூங்கி எழுந்தோம், ஹோட்டலில் இலவசமாக காலை உணவு வழங்கினார்கள்.  காலை உணவு சாப்பாட்டு கூடத்திற்கு சென்ற போது தான் தெரிந்தது, எத்தனை பேர் இந்த ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர் என்று.  சில பாட்டி, தாத்தாக்கள், நடுத்தர வயதுக் காரர்கள், சில குழந்தைகள் என அனைத்து வயதினரையும் அத்தனை மேசையையும் ஆக்கரமித்து இருந்தனர்.  முட்டை, காபி, பிரட், பழம், Waffle (USA தோசை) என சில உணவுகள் வைத்திருந்தனர்.  இரவே எங்களுக்காய் மீனா பயண திட்டத்தை தயார் செய்தார்.  எங்கள் பயணத்தின் ஆஸ்தான Tour Guide மீனாதான்.  பாசக்கார மீனா அக்காவின் பயணத்திட்டத்தை தொடர்ந்தோம்.




Boulevard Park, Bellingham நீண்ட அழகிய கடற்கரை, விளையாட்டுத் திடல் குழந்தைகளை மகிழ்வித்தது.  அழகிய கட்டிடங்கள், உயர்ந்த மரத்தூண்கள் மீது எட்டிப்பார்த்த பால்கனி, மரங்கள் நிறைந்த, பசுமை நிறைந்த சாலை, விரிந்து பரந்த நெடு வானம், தொலைவில் தெரியும் மலைகள், மலைகளில் தொப்பியாய் சேர்ந்திருக்கும் பனி, குளிர் காற்று அது ஒரு சுகானுபவம், வார்த்தைகளில் வர்ணிக்க முடிவதில்லை இயற்கையின் அழகையும் அனுபவத்தையும்.  சில புகைப்படங்களுடன் அடுத்த இடத்திற்கு நகர்ந்தோம்.  

Woodstock Farm, Bellingham சாலையை தவற விட்டு U-Trunல் திரும்ப வந்து பார்த்தால் ஒரு வட்ட நடைபாதை மட்டுமே இருந்தது.  ஒரு நடைபாதையில் சென்றதில் அழகான View Point கிடைத்தது.  அத்தனை அழகாக இருந்தது அந்த இடம்.  USA இயற்கை அழகும், அதனை அத்தனை நேர்த்தியாக பராமரிப்பதும் சிறப்பு.

Larrrabee State Parkயை மீணடும் சில வழி தடுமாற்றங்களுக்க பின் அடைந்தோம்.  State Parkல் நுழைவதானால் Discovery Pass இருக்க வேண்டும். $30 Discovery Pass வாங்கச் சென்றோம், நாங்கள் சில நிமிடங்கள் மட்டுமே இங்கே இருப்போம் என்றோம், Pass பரிசோதிப்பவர் இன்று விடுப்பில் உள்ளார், நீங்கள் சில நிமிடங்கள் தான் இருப்பீர்கள் என்றால் Pass வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.  ஆனால் இந்த Pass உங்களுக்கு உபயோகமானது ஒரு வருடம் உபயோகிக்கலாம் என உண்மையாகப் பேசினார்.  ஒளிவு மறைவு இல்லாத கலாசாரம் அமெரிக்காவில்.  ஏமாற்றுவது என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே.  உங்ளே நுழைந்தால் நீங்கள் கண்டிப்பாக Pass வாங்க வேண்டும் என்றும், பரிசோதகர் இல்லை என்பதை மறைத்தும் இருந்திருக்கலாம்.  ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.  உண்மையும் நேர்மையும் இயல்பாக இருக்கிறது இங்கு.
Larrabee Park அமைதியான கடற்கறையை எங்களுக்காக வைத்திருந்தது, அமைதியான, அழகான, தனிமை வியாபித்திருந்தது.  கடல், மலை, குழாங்கற்கள் நிறைந்த கடற்கறை மனதுக்கு விருந்து.  அழகை அள்ளித் திண்பது என்பது இதுதான் போலும், மனம் மகிழ்ந்தது, கண்கள் நிறைந்து வழிந்தது.  குழந்தைகள் விளையாட இடம் இருந்தது, வீர சாகசங்கள் செய்வதாய் விளையாட்டு இடத்தில் மேலும் கீழும் ஏறி இறங்கி விளையாடினர் குழந்தைகள். 
பசி எட்டி பார்த்தது, சிலருக்கு கிள்ளிப் பார்த்தது, அடுத்து சாப்பாடு கடைதான் என சொல்லி கதிர் இந்திய உணவகத்தை கண்டுபிடித்தார்.  Tantoori Bites என்ற ஒரு பஞ்சாபி உணவகத்தில் ஒன்பது பேரும் ஒரு நீண்ட இருக்கையில் அமர்ந்தோம்.  சுஷ்மா அனைவருக்கும் உணவை order செய்தாள்,  பள்ளி செல்லும் மாணவி அன்று அங்கு பணியில் இருந்தாள்,  இந்த சின்ன வயதில் அவள் அப்பாவின் உணவகத்திற்கு உதவியாய் வேலையில் இருந்தாள்.  ஒன்பது பேருக்குமான நீர், உணவு, உபசாரம் என அவள் சிரித்தபடியே அன்போடு பழகினாள்.  கார்லிக் நாண், பன்னீர் மட்டர் மசாலா, மலாய் கோப்தா, சாக் பன்னீர், சன்னா தால் என பஞ்சாபி உணவு வகைகளை Order செய்து 30 நிமிடங்கள் பசியோடு பேசிக்கொண்டிருந்தோம், உணவு வந்ததும் பேச்சு சத்தம் சுத்தமாக இல்லை, அனைவரும் ருசியாக இருந்த உணவை ஒரு பிடி பிடித்தனர். 
இரண்டு மணிக்கு எல்லாம் சற்றே இருட்ட ஆரம்பித்ததால் நேராக Deception pass போகலாம் என ஏற்பாடு.  நெடுஞ்சாலையில் சீரிப்பாய்ந்து, தீவை இணைக்கும் பிரம்மாண்ட இரும்பு பாலத்தை வந்து அடைந்தோம்.  உயரத்தில் இருந்து நீர், நிலத்திட்டு, கடல் என அற்புதமாக இருந்தது.  பாலத்தின் மீது நடந்து அழகை ரசித்து கொண்டிருக்க ஆதவன் தன் திரையை கொஞ்சம் கொஞ்சமாக மூடிகொண்டிருந்தான். 



குளிர் எங்களை விரட்டியது.  இருட்டு எங்களை துரத்தியது. சரி இத்தோடு பயணம் முடியட்டும் என வீடு திரும்பினோம்.  இனிமையான தமிழ்பாடல் காரில் ஒலிக்க ஆனந்தமாய் பயணம் தொடர்ந்தது.  மீனாவின் தம்பி, போனில் வந்து Speakerல் பல பாடல்களை பாடி கச்சேரி நடத்தினார், மீனா இன்னும் ஒரு பாடல், இன்னும் ஒரு பாடல் என கச்சேரியை தொடர செய்தார், தேன்குரலில் அவர்பாட எங்கள் காதுகள் இனிப்பை சுவைத்தது.


வீடு வந்து சுடான டீ குடித்து, அவர் அவர் வீட்டிற்கு விடை பெற்றோம். விடுமுறை பயணம் இனிதே முடிந்தது.

Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a comment

Discover more from Guruprasad குருபிரசாத் விஜயராவ்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Design a site like this with WordPress.com
Get started