சிந்தை ஆக்கம் ஆனது
ஆக்கம் ஊக்கம் தந்தது
ஊக்கம் உழைப்பாய் மாறி
உதயமானது முதல் அரங்கேற்றம் தமிழ்ப் பள்ளியில்
இறைவன் அன்போடு அழைத்து
இசையை கேட்டுமகிழ்ந்தார்
வேதா, சுவேதா, இந்து கோவில்
என்ற முகவரிகளில்
சியாட்டில் தமிழ்ச் சங்கம்
சிவப்பு கம்பளம் விரிக்க
சொல்லின் செல்வர் முன்
உள்ளம் துள்ளும் இசை தந்தது இக்குழு
பரையோசை பாரினில் கேட்க
டெர்பி டேயில் உலகக் கலையில்
பரையும் ஒயிலாட்டமும் பரிமளித்தது
பாரபட்சமின்றி அனைவரையும் ஆடவைத்தது
ஆனந்த மேளா அதிர அதிர
ஆதியிசை உள்ளத்தில் களி சேர்த்தது
பரையோசை உணர்வுகளில் கலக்க
ஒயிலாட்டம் உள்ளங்களை கவர்ந்தது
இதுவெல்லாம் ஒர் ஆண்டில்
இயந்திரங்களோடு பழகும் பொறியாளர்களை
இசையோடு ஆட செய்திருக்கிறது ஸ்டார்
இது தொடக்கம் தொடட்டும் இன்னும் பல உயரங்கள்
வாழ்த்துங்கள் இக்குழுவை
வந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள்
கலைகளில் களித்து
மகிழ்சியில் திளைத்திருப்போம்.



Leave a comment