அயல் நாடுகளில் தமிழ் படிக்கும் குழந்தைகள் தமிழ் மொழியை மட்டும் இன்றி தமிழ்ப் பண்பாடு, தமிழ்ச் சூழல், தமிழ் வரலாறு என பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கே கற்க வேண்டிய சூழலில் உள்ளனர். தமிழ்ப் புத்தகங்கள், கட்டுரைகள் தமிழகத்தை மையமாக வைத்து எழுதப்படுகின்றன. இந்தப் புத்தகங்களைப் படிக்க அயல் நாடு வாழ் குழந்தைகள் தமிழ்ச் சூழலை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளூர் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவ்வகையில் குழந்தைகளுக்கு முன்னமே தெரிந்த தகவல்களைத் தமிழ்மொழியில் படிக்க இக்கட்டுரைகள் உதவும். குழந்தைகளின் தமிழ் படிக்கும் திறனை மேம்படுத்துவதே இந்தக் கட்டுரைகளின் நோக்கம். இவை எளிமையானதாகவும், குழந்தைகளுக்குத் தெரிந்த, நாளும் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய மொழியிலும் அமைந்துள்ளன. தமிழ் கற்பதை இனிமையானதாகவும், எளிமையானவையாகவும் ஆக்கச் செய்யும் முயற்சியே இப்புத்தகம்.
புத்தகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி பத்துத் தலைப்புகளில் கட்டுரைத் தொகுப்பாகவும், இரண்டாம் பகுதி வாஷிங்டன், சியாட்டில் பகுதி சார்ந்த ஏழு பயணக் கட்டுரைகளாகவும் அமைந்துள்ளது. இக்கட்டுரைகளை குழந்தைகள் அவர்களின் தாத்தா, பாட்டிக்குப் படித்துக் காட்டுவதன் மூலம் அயல்நாட்டுக் கலாச்சாரங்களை பற்றி அவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு அமையும் என நம்புகிறேன். மேலும் உலக மொழி மதிப்பீடு குறித்த தகவல் கட்டுரை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது உயர் நிலை மாணவர்கள் எழுதும் மொழித் தேர்வு குறித்த ஆரம்பத் தகவல்களை அளிக்கும்.


To get a digital copy of the book from Amazon https://www.amazon.com/dp/B09QJ7F4R6
To get a copy of Physical book https://tinyurl.com/BuyKonjuTamil
Book Release function Video: https://youtu.be/91PHy0l_vx0